இந்தியாவின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்ஜித் சிங் சந்து தலைமையில் நேற்று கொழும்பில் அமைந்துள்ள இந்திய தூதுவரின் இல்லத்தில் நடைபெற்றது.
Read More »தமிழ் மக்களின் காணிகளை முஸ்லிம் மக்கள் அபகரிக்கின்றனர்: சுமணரத்ன தேரர்
தமிழ் மக்களுடைய காணிகளை முஸ்லிம் அமைப்புக்கள் அத்துமீறி கைப்பற்றுவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சிங்கள தமிழ் இன விழிப்புணர்வுக்கான அமைப்பு தொடர்பான ஊடகவியலாளர் மகாநாடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மங்களராமய விகாரையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் விளையாட்டு …
Read More »தமிழர்கள் தொடர்ந்தும் இன சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்: தர்மலிங்கம் சுரேஸ்
யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் தமிழர்கள் கலாச்சார, மொழி, பொருளாதார ரீதியில் சுரண்டப்படுவதாகவும் நில அபகரிப்பின் மூலம் தமிழ் இனத்தின் மீதான இன சுத்திகரிப்பு தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். செஞ்சோலை படுகொலை நீதிகோரலும் 11ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி கூட்டுறவ சங்க மண்டபத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே …
Read More »நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு!
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, பௌத்த உயர்பீட மகாநாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிப்பதோடு, கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்டு, விஜயதாசவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முனைப்பில் ஐ.தே.க.வின் பின்வரிசை உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையிலேயே, இதற்கு மகாநாயக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமைச்சர் விஜயதாச தொடர்பில் கட்சிக்குள் அண்மைய காலமாக பாரிய சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், விஜயதாசவை வெளியேற்றுவது ஏனைய அணிகளுக்கு சாதகமாக …
Read More »சீ.ஐ.டி.யில் ஆஜரானார் ஷிரந்தி ராஜபக்ஷ
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் சற்றுமுன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார். பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் கொலை தொடர்பான விசாரணைக்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார். மேலும், நிதி மோசடி குறித்த விசாரணைக்காக மஹிந்தவின் மகன் ரோஹித்த, சற்றுமுன் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். மஹிந்த குடும்பத்திடம் இன்று புலனாய்வுப் பிரிவு விசாரணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்துவதற்கு அரசாங்கம் …
Read More »மகிந்த சுதந்திரக் கட்சியை அழிக்கிறார் : துமிந்த குற்றசாட்டு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். காலியில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடங்க வேண்டியது புதிய கட்சியை அல்ல, கட்சிக்குள் இருந்து கொண்டு 2020ஆம் அண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கம் உருவாக்க வேண்டும். இதேவேளை, கட்சிக்குள் இருந்துக்கொண்டே கட்சியை பலப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் …
Read More »என்னிடமும் ஆதாரம் உண்டு! – அஜித் நிவாட் கப்ரால்
பிணை முறி குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி, தன்னிடமுள்ள ஆதாரங்களையும் சமர்ப்பிக்க விரும்புவதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியுடன் அஜித் நிவாட் கப்ராலுக்கும் தொடர்புண்டு என, கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியிருந்தார். இதனையடுத்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், மேற்குறித்தவாறு …
Read More »செஞ்சோலை தளிர்கள் பிடுங்கி எறியப்பட்டு ஆண்டுகள் பதினொன்று!
யுத்தத்தால் தமது உறவுகளை பறிகொடுத்து, பாசத்திற்காய் ஏங்கித் தவித்து, எதிர்காலம் பற்றி சிந்திக்கவே தெரியாத பருவத்தில் வாழ்ந்த செஞ்சோலை சிறுமிகளை கொடூரமாக கொன்றொழித்து இன்றுடன் ஆண்டுகள் பதினொன்று ஆகிவிட்டது. இலங்கை படையினர் மேற்கொண்ட ஈவிரக்கமற்ற தாக்குதல்களில், வரலாற்றில் மிகவும் கறைபடிந்த, அனைவர் மனதையும் உருக்கும் கோரச் சம்பவ பட்டியலில் இதுவும் ஒன்று. முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு இதே …
Read More »விஜயதாசவிற்கு வலை வீசும் மஹிந்த அணி!
நீதியமைச்சர் விஜயதாசவிற்கு எதிராக ஐ.தே.க.வில் அண்மைய நாட்களாக எதிர்ப்புகள் வெளிக்கிளம்பியுள்ள நிலையில், அவரை தம் பக்கம் இழுக்கும் முயற்சியில் மஹிந்த ஆதரவு கூட்டு எதிரணி ஈடுபட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்ஷனின் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டதாலேயெ நீதியமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் வலுப்பெற்றுள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்நிலையில், சர்வதேச சதித் திட்டத்தின் …
Read More »நெடுந்தீவு கடற்பரப்பில் நான்கு மீனவர்கள் கைது
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக, கடற்படையின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறைக்கு வடக்கே 18 கடல் மைல் தொலைவிற்கு அப்பால் இவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய படகு மற்றும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் என்பவற்றையும் மீட்ட கடற்படையினர், மீனவர்களை யாழ். நீரியல் வள …
Read More »