Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 226)

இலங்கை செய்திகள்

மைத்திரியின் ஆட்சியில் இனவெறியர்களுக்கு இடமில்லாமல் போயுள்ளது – பெரியசாமி பிரதீபன்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாட்டு மக்களுக்கு கடந்த அரசாங்கத்தைவிட தற்போது முன்னூதரணமாக செயற்படுவதாக கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார். அட்டனில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கடந்த ஆட்சியில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராபட்ச ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக மக்களுக்கு சேவையாற்றினார். இதனால் நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர …

Read More »

சம்மாந்துறை நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைக்கப் பேச்சு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு மிகவும் பின்னடைந்து காணப்படும் நிலையில் எதிர்வரும் தேர்தல்களை எதிர்நோக்கும் வகையில் முன்னாள் எம்.பி. நௌசாத்தை கட்சியில் இணைப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் விரும்பியுள்ளார். அந்த வகையில் ஏ.எம்.நௌசாத்துடன் மு.காவினர் …

Read More »

தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தி

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த தேசிய அரசாங்கம் பதவிக்கு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலின் பின்னர் இந்த தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல வெற்றிகளை பெற்ற போதிலும் அடைய வேண்டிய இலக்கு இன்னும் இருப்பதாக பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு …

Read More »

இரணைமடுவில் இருந்து நீர் தர மறுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்! வடமாகாண சபையில் குற்றச்சாட்டு

வடக்கு மாகாணம் கடுமையாக வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரணைமடுவில் இருந்து நீர் தர மாட்டேன் என கூறியுள்ளார். அத்துடன், வடக்கு மாகாணம் வறட்சியான காலநிலையால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரித்துள்ளார். மேலும் குடி நீர் தட்டுப்பாட்டை வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடமாகாண சபையின் 102 ஆம் அமர்வு இன்று காலை சபா மண்டபத்தில் இடம்பெற்று …

Read More »

வடக்கின் அபிவிருத்தி பணிகளில் இராணுவத்தினர்

வடக்கில் அபிவிருத்திப் பணிகளில் இராணுவத்தினர் தம்மை இணைத்துக் கொண்டிருப்பதாக வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதிலும் தம்மாலான உதவிகளை இராணுவத்தினர் செய்து வருவதாக கூறியுள்ளார். ஊடகமொன்றிட்கு இன்று காலை வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், நல்லிணக்கம் ஏற்படுவதற்கு பெரிதும் தடையாக இருப்பது கல்வியே. சிங்கள மகா வித்தியாலயம், தமிழ் மகா வித்தியாலயம், …

Read More »

கிழக்கு பல்கலை. மறு அறிவித்தல் வரைக்கும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

கிழக்கு பல்கலைக்கழத்தின் மறு அறிவித்தல் வரைக்கும் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை வளாகம் தவிர்ந்த மற்றய அனைத்து வளாகங்களும் மூடப்படவுள்ளதாகவும், இன்று 12 மணிக்கு முதல் அனைத்து மாணவர்களையும் வெளியேறுமாறும் நிர்வாகம் அறிவித்துள்ளது. கிழக்கு பல்கலைக்கழத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More »

இனியும் சிறந்ததோர் அமைச்சரவையை முதல்வர் விக்கியால் அமைக்க முடியுமா? – கூட்டமைப்பு எம்.பி. சிறிதரன் கேள்வி

சிறந்ததோர் அமைச்சர் வாரியத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இனி அமைக்க முடியுமா என்பதே தற்போதைய சந்தேகம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் புதுக்குளத்தில் தங்கம்மா முதியோர் இல்லம் கலாநிதி முருகர் குணசிங்கத்தால் அமைக்கப்பட்டு திறந்துவைக்கும் நிகழ்விலும், ‘இலங்கைத் தமிழர்’ நூல் வெளியீட்டு நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2013ஆம் ஆண்டு வடக்கு …

Read More »

‘மூதேவி ஆட்சி’க்கு ஆண்டுகள் இரண்டு! – மஹிந்த அணி கொழும்பில் நாளை போராட்டம்

தேசிய அரசின் இரண்டாண்டுப் பூர்த்தியை இலங்கைக்கு மூதேவி பிடித்த  நாளாகப்  பிரகடனப்படுத்தி கொழும்பில் நாளை வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணியை மஹிந்த அணியான பொது எதிரணி நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. கொழும்பு லிப்டன் சந்தியில் நாளை மாலை 3 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை பொது எதிரணி மும்முரமாக செய்து வருகின்றது. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசு …

Read More »

ஹசனலியை மீண்டும் மு.காவுக்குள் கொண்டுவர ஹக்கீம் கடும் பிரயத்தனம்!

தூய முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டாளரான எம்.ரி.ஹசனலிக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கி முஸ்லிம் கூட்டமைப்பு உருவாவதைத் தடுப்பதற்கான காய்நகர்த்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஈடுபட்டுள்ளார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது. முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து தூரமாகி இன்று தூய முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாக மக்கள் மத்தியில் களமிறங்கியுள்ள ஹசனலி மற்றும் பசீர் சேகுதாவூத் தரப்பு எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் கூட்டமைப்பாக போட்டியிடுவதற்கான பேச்சுகளில் …

Read More »

சம்மாந்துறை நௌசாத்தை மு.காவில் இணைக்கப் பேச்சு! 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஏ.எம்.நௌசாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொள்ளுமாறு அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று  நம்பகரமாகத் தெரியவருகின்றது. சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு  மிகவும் பின்னடைந்து காணப்படும் நிலையில் எதிர்வரும் தேர்தல்களை எதிர்நோக்கும் வகையில் முன்னாள் எம்.பி. நௌசாத்தை கட்சியில் இணைப்பதற்கு அமைச்சர் ஹக்கீம் விரும்பியுள்ளார். அந்தவகையில் ஏ.எம்.நௌசாத்துடன் மு.காவினர் பேச்சில …

Read More »