அரசுக்கு எதிராக கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்கவும், அதன் செயற்பாடுகளை விமர்சித்து மக்கள் மத்தியில் பரப்புரைகளை முன்னெடுப்பதற்காகவும் பொதுஜன பெரமுனவின் சார்பில் சிவில் அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளது. இதற்குரிய முயற்சியில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தீவிரமாக இறங்கியுள்ளார். இது சம்பந்தமாக மஹிந்தவுக்கு சார்பான பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், வைத்தியர்கள் உட்பட பல்துறையிலுள்ள நிபுணர்களுடனும் பஸில் ராஜபக்ஷ பேச்சு நடத்தி வருகின்றார். எதிரணி அரசியல்வாதிகள் அரசுமீது விமர்சனங்களை முன்வைத்தால் அது அரசியல் எதிர்ப்பு …
Read More »அரசுக்குள் கறுப்பு ஆடுகள்! மைத்திரியிடம் அறிக்கை!! – பொது எதிரணியிலிருந்தும் குத்துக்கரணம்
தேசிய அரசில் இருந்துகொண்டு மஹிந்த தலைமையிலான பொது எதிரணியுடன் உறவாடும் உறுப்பினர்கள் விவரமடங்கிய அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. புலனாய்வுப் பிரிவினரால் கையளிக்கப்பட்டுள்ள மேற்படி அறிக்கையில் தேசிய அரசிலிருந்து வெளியேறுவதற்கு தயாராகிவருபவர்களின் பெயர் விவரமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது. தேசிய அரசமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவுக்குவருகின்றது. அதன்பின்னரே தாவல்கள் …
Read More »தாய்வீட்டுக்குள் நுழையத் தயாராகின்றார் திஸ்ஸ!
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வருமாறு அதன் பொதுச் செயலாளர் தன்னை அழைத்துள்ளார் என்றும், பெரும்பாலான உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்து தான் ஆராய்ந்துவருகிறார் என்றும், முக்கிய தேர்தலுக்குரிய அறிவிப்பு வெளியான பின்னர் தனது அரசியல் பயணம் மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிவகித்த திஸ்ஸ அத்தநாயக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது …
Read More »இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் நியமனம்
இலங்கை கடற்படையின் 21ஆவது தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவால் நியமிக்கப்பட்டுள்ளார். கடற்படையின் தற்போதிய தளபதியாக இருக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் தளபதியாக நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More »வடக்கு, கிழக்கில் மீளக்குடியேறும் மக்களுக்கு 50 ஆயிரம் கல்வீடுகள்: கூட்டமைப்பு வரவேற்பு!
வடக்கு, கிழக்கில் மீளக்குடியேறும் மக்களுக்காக ஐம்பதாயிரம் கல் வீடுகளை அமைப்பதற்கு ஜனாதிபதியின் கீழ் உள்ள நல்லிணக்க அமைச்சு முடிவெடுத்து அறிவித்திருக்கின்றமையை பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனைத் தெரிவித்திருக்கின்றார். அவர் மேலும் கூறுகையில், “பொருத்து வீட்டுத் திட்டம்தான் கிடைக்கும். அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சாரப்படுத்தி அந்தப் பொருத்து வீடுகளை எமது மக்களின் தலையில் கட்டி இலாபம் …
Read More »‘ட்ரயல் அட்பார்’ யோசனை ராஜிதவின் அப்பாவித்தனத்துக்கு எடுத்துக்காட்டு! – இப்படிக் கூறுகின்றது மஹிந்த அணி
ராஜபக்ஷ குடும்பத்தினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு ‘ட்ரயல் அட்பார்’ நீதிமன்றம் அமைக்கப்படவேண்டுமென அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன கூறியிருக்கும் யோசனை அவரது அப்பாவித்தனத்துக்கு நல்லதொரு உதாரணமென மஹிந்த அணியான பொது எதிரணியின் உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் கூறியுள்ளதாவது:- “ராஜித நினைப்பதுபோல தனி நீதிமன்றம் என்பது கிள்ளுக்கீரை வியாபாரமல்ல. தனிநபரொருவர் மீதோ அவரது குடும்பத்தினர் மீதோ …
Read More »ஜனாதிபதியை சந்திக்கும் கட்சித் தலைவர்கள்
அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. மாகாண சபைத் தேர்தல்களை பிற்போட முயற்சிக்கப்படுகின்றமை குறித்து கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர். வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் ஆயுட்காலம் விரைவில் நிறைவடையவுள்ளது. இந்த நிலையில், தேர்தலை பிற்போடுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறித்து பல கட்சிகள் அதிருப்தி வெளியிட்டு வருகின்றன. எனவே, இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளதாக அமைச்சர் …
Read More »ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித்தாவல்கள் செப்டம்பரில்
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் மஹிந்த ராஜபக்ச அணியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. குறிப்பாக செப்டம்பர் 8-16 திகதிகளுக்கு இடையில் இந்த இணைவு இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது. இதேவேளை மஹிந்த தரப்பின் 7 பேர் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நல்லிணக்க அரசாங்கத்தின் இரண்டு வருட பூர்த்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கைகள் எதிர்ப்பார்க்கப்படுகின்றன.
Read More »மஹிந்த முன்னதாகவே ஆட்சியை கலைத்தமைக்கான காரணம் இதுதான்: மட்டக்களப்பில் பிரதமர்
தாங்க முடியாதளவு கடன் சுமை இருந்த காரணத்தினாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியை முன்னரகவே கலைத்தார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 55 கோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வின் முதல் நிகழ்வாக இன்று ஏறாவூர் நகரத்தில் 120 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஏறாவூர் நகரசபைக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைத்தார். கிழக்கு மாகாண …
Read More »நல்லூர் திருவிழாவைக் கண்டு பிரம்மித்துப்போயுள்ள அமெரிக்க தூதுவர்
யாழ்.நல்லூர் திருவிழாவையும், அங்கு திரண்டுள்ள மக்களின் பக்தியையும் கண்டு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அடுல் கெசாப் பிரம்மித்துப் போயுள்ளார். “யாழ். நல்லூர் ஆலயத்திற்கு வருகைத் தரும் பக்தர்களின் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் பக்தி என்பவை மிகவும் சிறப்பான ஒன்று” என தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »