எதிர்வரும் செப்டெம்பர் 1ஆம் திகதி முதல் பொலித்தீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் பாவனை என்பன தடைசெய்யப்படவுள்ளது. இதேவேளை, இதற்கெதிராக கைது செய்யும் சட்டநடவடிக்கைகள் உடனடியாக இடம்பெறாது என்று இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இத்துறையை சார்ந்தவர்களின் நலன் கருதி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை ஆராய்வற்காக உரிய நிறுவனங்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றினை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2017.07.11 ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க 2017 …
Read More »வடக்கு மாகாண சபையில் புதிய அமைச்சரவை! – ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்
வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களைக்கொண்ட அமைச்சரவை இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற சத்தியப்பிரமாண வைபவத்துடன் பொறுப்பேற்றது. ஏற்கனவே அமைச்சராக இருக்கும் கந்தையா சர்வேஸ்வரனுக்கு மேலதிகமாக முதல்வர் விக்னேஸ்வரனும், அமைச்சர் அனந்தி சசிதரனும் புதிய அமைச்சுப் பொறுப்புகளை ஏற்றனர். அதனால் அவர்கள் இருவரும், அத்துடன் புதிதாக அமைச்சர் பதவிகளை ஏற்ற ரெலோவின் ஞானசீலன் குணசீலன், புளொட்டின் கந்தையா சிவநேசன் ஆகியோரும் இன்று தத்தமது பொறுப்புகளை ஏற்று …
Read More »கேப்பாப்பிலவு காணி விடுவிப்பு குறித்து ஜனாதிபதி – கூட்டமைப்பு பேச்சு! – இராணுவம் வெளியேற ரூ.15 கோடி அமைச்சரவை அங்கீகாரம்
கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்குழு நேற்று ஜனாதிபதி தலைமையிலான அரசுத் தரப்புடன் பேச்சுக்களில் ஈடுபட்டது. கேப்பாபிலவுக் காணிகளை விடுவிப்பதற்காக இராணுவத்தினருக்கு 14 கோடி 80 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார். இந்தச் சந்திப்பு நேற்று மாலை 4.30 மணி தொடக்கம் சுமார் ஒரு மணி நேரம் நாடாளுமன்றக் …
Read More »மஹிந்தவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தும்வரை போராட்டம் தொடரும்! – பொது எதிரணி கூறுகின்றது
“இன்னும் கொஞ்ச நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்கப்போவது கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், செயலாளர் துமிந்த திஸாநாயக்கவும்தான்” என்று மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “வீட்டில் கூலிக்கு இருந்தவர் வீட்டை சொந்தமாக்கிக்கொள்ளும் செயற்பாடே இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நடந்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு அரசியல் சக்திகளுக்கு அடிபணிந்துள்ளது. இதற்கான முழுப் பொறுப்பையும் கட்சியின் …
Read More »வடக்கு அமைச்சரவையிலிருந்து டெனீஸை தூக்கி எறிந்தார் முதல்வர் விக்கி!
வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ்வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூக்கி எறிந்துள்ளார். அவரது அமைச்சுப் பதவியில் சிலவற்றை திருமதி அனந்தி சசிதரனுக்கும், எஞ்சியவற்றை தானே பொறுப்பெடுப்பதாவும் தெரிவித்து வடக்கு மாகாண ஆளுநர் குரேக்கு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் பா.டெனீஸ்வரன் தானே அமைச்சுப் பதவியில் தொடர்வதாக ஏற்கனவே, வடக்கு மாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளமையால், இந்த விடயத்தில் சட்டஆலோசனை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண ஆளுநர் குரே சட்டமா அதிபர் …
Read More »அடிப்படை உரிமையற்றவரை தற்காலிகமாக நீக்க முடியுமா? – ரெலோவிடம் கேட்கிறார் டெனீஸ்
“எனது அமைச்சுப் பொறுப்பை கபடத்தனமாகவும் – சூட்சுமமாகவும் தட்டிப்பறிக்க நினைக்கின்றார்கள். கட்சியின் அடிப்படை உறுப்புரிமைகூட இல்லாத என்னை ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக எப்படி இடைநிறுத்த முடியும்? கட்சி யாப்பில் அதற்கு இடமிருக்கின்றதா? கட்சியின் அடிப்படை உறுப்புரிமை பெற்ற நபரென்று சொன்னால், உறுப்புரிமை எனக்கு எப்போது வழங்கப்பட்டது என்பதை ஆதராத்துடன் பகிரங்கப்படுத்த முடியுமா?” – இவ்வாறு வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் ரெலோவிடம் கேள்விகளை எழுப்பியுள்ளார். ரெலோவின் …
Read More »இலங்கைக்கு கடத்தப்படவிருந்த போதைப்பொருள் தூத்துக்குடியில் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 24 கிலோ அசிஸ் போதைப்பொருளை அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் கடத்தல்காரர்களை பிடிக்க துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன், ஒருவரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாநகர் பகுதியில் இருந்து அசிஸ் என்ற போதைப்பொருளை இலங்கைக்கு சிலர் கடத்த முயல்வதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். …
Read More »வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெவில்லையா – உடனடியாக அறிவியுங்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்காவிட்டால், உடனடியாக அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களை கேட்டுள்ளார். 2017ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி பூர்த்தி அடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வாக்காளர் இடாப்பை பார்வையிட முடியும். இணையத்தளத்தின் முகவரி : www.elections.gov.lk
Read More »ஆசியாவின் தலைசிறந்த சுற்றுலா வலயமாக காலி – பிரதமர்
காலி மாவட்டம் ஆசியாவின் சிறந்த சுற்றுலா வலயமாக தரமுயர்த்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேசத்தில் நான்காயிரம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் வேலைத் திட்டத்தின் கீழ் அடுத்த சில ஆண்டுகளில் சகலருக்கும் காணி உரிமைகள் உறுதி செய்யப்படும். களுத்துறையில் 800 ஏக்கர் விஸ்தீரணமான நிலப்பரப்பில் கைத்தொழில் பேட்டை நிறுவப்படவுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுகம் மத்தள விமான நிலையம் …
Read More »ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு பணியகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஐநா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவு நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. பாதிக்கப்பட்டவர்களின் இதயத்தில் தான் நீதியும், குணப்படுத்தல் வசதிகளும் உள்ளன என்பது முக்கியமாகும். வேறு எதுவும் அனைத்துலக சமூகத்தினால் ஏற்றுக் …
Read More »