Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 221)

இலங்கை செய்திகள்

அரசியலுக்கு வர ஆசைப்படும் பொலிஸ்மா அதிபர்! பிரதமரிடம் நிபந்தனை விதிப்பு

கடமையில் இருந்த கீழ் நிலை அதிகாரியை தாக்கியமை, சித்திரவதை மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் பாரதூரமான குற்றத்தை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்படும், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை பதவியில் இருந்து விலக நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் கீழ் நிலை அதிகாரியை தாக்கும் காணொளி ஊடகங்களில் வெளியானதை அடுத்து, பொலிஸ்மா அதிபரை அழைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கௌரவமாக பதவியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு அறிவித்துள்ளார். தான் பதவி …

Read More »

ஐ.தே.கட்சியில் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கும் திஸ்ஸ

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர் என்ற வகையில் தனது அரசியல் பயணத்தை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கெலிஓயா பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அரசியல் ரீதியாக முடிவுகளை எடுக்க இன்னும் காலம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்த காரணத்தை அடிப்படையாக கொண்டு தன்னை …

Read More »

விடுதலைப் புலிகளை பழி தீர்த்ததா இந்தியா? உண்மையை கூறிய கோத்தபாய

விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வேண்டும் என்ற அவசியம் இந்தியாவுக்கு இருந்ததாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விஷேட செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகளே படுகொலை செய்ததாக கூறுகின்றீர்கள். இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவளித்ததாகவும் கூறுகின்றீர்கள், அந்த காலப்பகுதியில் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தியின் கட்டுப்பாட்டுக்குள்ளே …

Read More »

ரயில்வே திணைக்களத்தை தனியார் மயப்படுத்த நேரிடும் – நிமல் சிறிபால டி சில்வா

ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப் புறக்கணிப்புகளில் ஈடுபட்டு வந்தால், ரயில்வே திணைக்களத்தை தனியார் மயப்படுத்த நேரிடும் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். தரமான ரயில் சேவையை வழங்க சகல தொழிற்சங்கங்களும் புதிய ரயில்வே முகாமையாளருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். தான் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர், தொழிற்சங்க பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read More »

நம்பிக்கையில்லாப் பிரேரணையை கேலி பொருளாக மாற்றிய கூட்டு எதிர்க்கட்சி

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற நடைமுறையை கூட்டு எதிர்க்கட்சியினர் கேலி பொருளாக எடுத்துக் கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் அவர் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு …

Read More »

தியாக தீபம் திலீபனின் தூபியைத் துப்புரவாக்கும் பணி நல்லூரில்!

தியாக தீபம் திலீபனின் நினைவு நாள் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத் தூபியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நேற்று துப்புரவு செய்துள்ளனர். தியாக தீபத்தின் நினைவுநாளை கடந்த வருடம் ஜனநாயகப் போராளிகள் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன முன்னெடுத்திருந்த நிலையிலேயே, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இந்தத் துப்புரவு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக அஹிம்சை வழியில் போராடி …

Read More »

கூட்டு எதிர்க்கட்சி பொது வேட்பாளரை நிறுத்தாது

கூட்டு எதிர்க்கட்சி எப்போது பொது வேட்பாளரை நிறுத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் விஜேதாச ராஜபக்சவை பொது வேட்பாளராக நிறுத்த கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கூட்டு எதிர்க்கட்சி விஜேதாச ராஜபக்சவுக்கு சார்பாக …

Read More »

மைத்திரியின் உத்தரவை ஏற்றுக்கொண்ட விஜயதாச! கட்சியில் தொடர்வதாக அறிவிப்பு

அமைச்சர் பதவிகளில் இருந்து ஜனாதிபதி தன்னை நீக்கியதை ஏற்றுக்கொள்வதாக விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். எனினும் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்தும் அங்கம் வகிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, விஜேதாச ராஜபக்சவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமைக்கான கடிதத்தை அவருக்கு அனுப்பியிருந்தார். விஜேதாச ராஜபக்சவை அனைத்து அமைச்சு பதவிகளில் இருந்தும் நீக்குமாறு, ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஐக்கிய …

Read More »

கொழும்பு அரசியலில் அதிரடி திருப்பம்! அமைச்சர் விஜயதாசவை பதவியிலிருந்து தூக்கிய மைத்திரி

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை பதவி நீக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி அளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய அவரது பதவி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் அமைச்சர் விஜயதாசவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார். அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறி செயற்பட்டதாக விஜயதாச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் அமைச்சரவைப் பொறுப்புக்களை வகிக்கத் தகுதியற்றவர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு …

Read More »

சுமந்திரன் மீதான கொலை முயற்சி – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சி வழக்குடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றைய தினம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலை நீடிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை உட்பட சில குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கைது …

Read More »