Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 220)

இலங்கை செய்திகள்

இலங்கை வான் பரப்புக்குள் பிரவேசித்த இந்திய கண்காணிப்பு விமானம்!

இந்தியக் கடற்படையின் நீண்டதூர கண்காணிப்பு விமானம் ஒன்று இலங்கை வான் பரப்புக்குள் பிரவேசித்து தேடுதல்களை நடத்தியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டே இலங்கை வான் பரப்பில் பிரவேசித்து தேடுதல் நடத்தியுள்ளதாக இந்திய கடற்படையை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. கேரளாவின் கொல்லம் கடற்பகுதியில் கடந்த சனிக்கிழமை இந்திய மீன்பிடிப் படகு ஒன்றை மோதிய கப்பல் ஒன்று தென்திசை வழியாக தப்பிச் சென்றிருந்தது. குறித்த கப்பலானது ஹொங்கொங்கில் …

Read More »

இலங்கை அணியின் தொடர் தோல்வி! ஜயசூரிய எடுத்த திடீர் முடிவு

இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். பதவி விலகல் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிடம் இன்று பகல் இராஜினாமா கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணி அண்மை காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையில், பல்வேறு விமர்சனங்களுக்கு முகம் கொடுத்துள்ளது. இந்நிலையிலேயே, தெரிவுக் குழுத் தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு …

Read More »

சட்டத்தரணிகளை தமது செலவில் வியட்நாம் அழைத்துச் சென்ற நாமல் ராஜபக்ச

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சிலரை வியட்நாம் நாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாமல் ராஜபக்சவிற்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வரும் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதிகளுக்கு எதிராக சட்டத்தரணிகள் குழுவை நாமல் ராஜபக்ச உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் முதலாவது இலக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் முக்கிய நீதிபதியான கிஹான் குலதுங்கவை கொழும்பில் இருந்து இடமாற்றம் செய்வதாகும். …

Read More »

அமைச்சரவைக் கூட்டத்தில் மோதிக் கொண்ட அமைச்சர்கள்

ஜனாதிபதி தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் இடையில் சூடான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கின் செயற்கை ஓடுதளத்தை மீண்டும் புனரமைப்பதற்காக தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்த அமைச்சரவை பத்திரம் தொடர்பில் அர்ஜூன ரணதுங்க கருத்துக்களை முன்வைக்கும் போது இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட் சம்பந்தமாக …

Read More »

’20’ ஐ நிறைவேற்றுவதில் இழுபறி! முதலமைச்சர்களுடன் மைத்திரி அவசர சந்திப்பு!!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கான ஆதரவை வழங்கும் விடயத்தில் மாகாண சபைகள் சர்ச்சையை ஏற்படுத்திவரும் நிலையில், அனைத்து மாகாண சபை முதலமைச்சர்களுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பில் அவசரமானதும், முக்கியத்துவமானதுமான சந்திப்பொன்றை நடத்தியிருக்கிறார். கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவில்லை. ஆனால், வடக்கு ஆளுநர் உட்பட அனைத்து மாகாண முதலமைச்சர்களும், ஆளுநர்களும் இதில் பங்கேற்றுள்ளனர். அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான …

Read More »

கிழக்கில் இன்று ’20’ நிறைவேறும்? 

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவை வழங்குவதா இல்லையா என்பது குறித்து கிழக்கு மாகாண சபையில் இன்று விவாதம் நடைபெறவுள்ளது. முன்னதாக கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்புகளில் குறித்த சட்டத்திருத்தத்துக்கு வடமத்திய மாகாண சபை ஆதரவையும், ஊவா மாகாண சபை எதிர்ப்பையும் வெளியிட்டிருந்தன. நேற்று மேல்மாகாண சபையில் நடைபெற்ற அமளியால் சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாண சபையில் இன்று இது தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. …

Read More »

ராஜிதவுக்கு எதிரான பிரேரணை வலுவிழப்பு!

சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக மஹிந்த அணியான பொது எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை சட்ட ரீதியாக வலுவிழந்த ஒரு பிரேரணையாகக் காணப்படுகின்றது என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. கடந்த வியாழக்கிழமை ராஜித சேனாரத்னவுக்கு எதிராக 39 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை பொது எதிரணியால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இந்தப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா …

Read More »

ராஜிதவுக்கு எதிரான பிரேரணையை சு.க. கடுமையாக எதிர்க்கும்! – எஸ்.பி. திட்டவட்டம்

“சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக பொது எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்காது”  என்று அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 15 காரணங்களை உள்ளடக்கி ராஜித சேனாரத்னவுக்கு எதிராக 39 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை பொது எதிரணி கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்ப்பித்திருந்தது. அதற்குப் பதிலளித்திருந்த ராஜித சேனாரத்ன, ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணையல்ல 100 நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும் தனது …

Read More »

முள்ளிவாய்க்காலில் கல்லறைகளைக் கட்டியணைத்துக் கதறிய உறவுகள்!

முல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்ட மாவீரர்களின் உறவினர்கள், அங்கு உறங்கும் தமது உறவுகளை நினைத்துக் கல்லறைகளைக் கட்டியணைத்து கதறிய சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது. முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் ஆயிரத்து 800இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்யும் பணிகள் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றன. இதன்போது, கல்லறைகளை இனங்கண்ட உறவினர்கள் அதனைக் கட்டியணைத்துக் …

Read More »

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை

அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான உடன்படிக்கை சம்பந்தமாக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதால், அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சந்திம வீரக்கொடி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருப்பவர்கள் கட்சியின் ஒழுக்க கட்டுப்பாட்டை …

Read More »