நாட்டிற்குள் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் ஜனநாயக ரீதியான திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள் மிகவும் பாராட்டத்தக்கவை என அமெரிக்காவின் பதில் உதவி இராஜாங்க செயலாளர் ஹெலிஸ் வேல்ஸ் தெரிவித்துள்ளார். விமர்சனங்கள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் ஜனாதிபதி எடுத்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவின் உதவி தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் அவர் இதனை …
Read More »கடன் பொறியில் இருந்து நாடு காப்பற்றப்பட்டுள்ளது
கடந்த இரண்டு வருடங்களில் கடன் பொறியில் இருந்து நாட்டை காப்பாற்றியதாகவும், அடுத்த இரண்டு வருடங்களில் கடனை திரும்ப செலுத்துவதற்காக நிரந்தரமான வேலைத்திட்டத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடனை திரும்ப செலுத்துவதற்கு தேவையான வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு மாவட்டத்தில் வீடுகள் இல்லாதவர்களுக்கு வீட்டுக்கடனை வழங்குவதற்காக அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற வைபவத்தில் பிரதமர் இதனை கூறியுள்ளார். கொழும்பு …
Read More »ஜெனரல் ஜகத் ஜயசூரியவை பாதுகாக்க வேண்டும் – ஜாதிக ஹெல உறுமய
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்காக இலங்கை அரசாங்கம் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். ஜகத் ஜயசூரிய நாட்டின் பாதுகாப்புக்காகவே வன்னி பிராந்திய கட்டளை தளபதியாக கடமையாற்றினார், அது சட்ட ரீதியானது. நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த அவர பங்களிப்பு கிடைத்தது. …
Read More »நல்லாட்சி அரசில் அடுத்து என்ன? செப். 4இல் வெளியாகும் அறிவிப்பு! – களமிறக்கப்படுகின்றார் மங்கள
நல்லாட்சி என ஆட்சிசெய்யும் தேசிய அரசின் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றியும், முன்நோக்கி வந்த பயணம் குறித்தும் எதிர்வரும் செப்டெம்பர் 4ஆம் திகதி விசேட அறிவிப்பொன்று வெளியாகவுள்ளது. அரசின் சார்பில் மேற்படி அறிவிப்பை நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வெளியிடவுள்ளார். இதன்போது அரசின் வரிக்கொள்கைகள் பற்றியும் விவரிக்கப்படவுள்ளது என அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிப்பீடமேறி இம்மாத நடுப்பகுதியுடன் ஈராண்டுகள் கடந்துள்ளன. இந்நிலையில், …
Read More »’20’இற்கு மேற்குலகம் போர்க்கொடி! இராஜதந்திர நெருக்கடிக்குள் அரசு!! – தேர்தலை விரைந்து நடத்துமாறு அழுத்தம்
மாகாண சபைகளுக்குரிய தேர்தல்களை ஒத்திவைக்கும் நோக்கில் அரசு முன்னெடுத்துவரும் காய்நகர்த்தல்களுக்கு மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. கொழும்பிலுள்ள தமது தூதுவர்கள் ஊடாகவே மேற்படி நாடுகள், இலங்கை அரசிடம் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும் அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் நடத்தும் நோக்கிலும் 20ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டவரைபை அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இந்தச் …
Read More »’20’ இற்கு வலுக்கிறது எதிர்ப்பு! திருத்துகிறது அரசு!! கிழக்கில் 7இல் வாக்கெடுப்பு; வடக்கில் 4இல் பலப்பரீட்சை
மாகாண சபைகளில் பெரும் பின்னடைவைச் சந்தித்து அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புகள் வலுத்துவருவதால் அதில் முக்கிய சில திருத்தங்களைச் செய்வதற்கு அரசு அவசரமாக தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது. மாகாண சபைகளைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் வகையிலும் சகல மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தலை நடத்துவதற்கு வழிவகுக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பில் மாகாண சபைகளின் அனுமதியையும் அரசு கோரியுள்ளது. இதன்படி …
Read More »’20’ குறித்து சம்பந்தன் – ஹாபீஸ் மந்திராலோசனை!
அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து நாடாளுமன்றின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டும் நேற்றுமுன்தினம் மந்திராலோசனை நடத்தியுள்ளனர். கிழக்கு மாகாண சபையானது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக்குட்பட்டது. இந்நிலையில், 20ஆவது திருத்தச் சட்டமூலம் கிழக்கு மாகாண சபையில் நேற்றுமுன்தினம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றுமுன்தினம் …
Read More »அஸ்வருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் மைத்திரி!
மறைந்த முன்னாள் முஸ்லிம் சமய விவகார இராஜாங்க அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலாளருமான ஏ.எச்.எம். அஸ்வரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை மாலை இறுதி அஞ்சலி செலுத்தினார். தெஹிவளை, பாத்தியாமாவத்தை, இலக்கம் 04 என்ற முகவரியிலுள்ள அஸ்வரின் வீட்டில் நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு7.15 மணியளவில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அஸ்வர் காலமானார். …
Read More »மண்டைதீவு கடலில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 6 மாணவர்கள் கடலில் மூழ்கி மரணம்…
இச் சம்பவம் நேற்று மதியம் 01.30 பிற்பகல் இடம்பெற்றது. குறித்த சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளன, உரிய பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் சடலங்களை பொறுப்பேற்குமாறு பணிப்புரை. 18 முதல் 20 வயதுக்கிடைப்பட்ட மாணவர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. இன்று கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி சென்ற போது …
Read More »10 நிமிடத்தில் காப்பாற்றுகிறேன் என சிறிகஜன் கூறினார்! வித்தியா வழக்கில் சுவிஸ்குமார் சாட்சியம்
எனது வீட்டுக்கு சிறிகஜன் வந்தார். நான் வீட்டின் உள்ளே இருந்தேன். மனைவிதான் வெளியே சென்றார். என்னைச் சந்திக்க வேண்டும் என்று சிறிகஜன் கூறினார். நான் வெளியே வந்தேன். ஊர்மக்கள் உங்களை அடித்துக் கொல்லப் போகின்றனர். 10 நிமிடத்தில் நான் உங்களைக் காப்பாற்றுகின்றேன். அதற்கு நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும் என்று அவர் என்னிடம் கூறினார். இவ்வாறு சாட்சியமளித்தார் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேகநபரான சுவிஸ்குமார். மாணவி கொலை …
Read More »