Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 218)

இலங்கை செய்திகள்

மைத்திரியின் சகோதரர் படுகொலை வழக்கு விசாரணை ஜூரிகள் சபை முன்னிலையில்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான பிரியந்த சிறிசேன கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை ஜூரிமார் சபையின் முன்னிலையில் நவம்பர் 20 தொடக்கம் 30 வரை நடைபெறுமென பொலநறுவை மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இவ்வழக்கின் சந்தேகநபரான டொன் இஷார லக்மால் சப்பு தந்திரி (வயது – 34) பொலநறுவை மேல்நீதிமன்ற நீதியரசர் நிமால் ரணவீரவின் முன்னிலையில் தான் நிரபராதி எனத் தெரிவித்ததையடுத்து வழக்கு மேற்குறிப்பிட்ட கால எல்லையில் ஜூரிகள் சபை முன்னால் தொடர்ந்து …

Read More »

’20’ இற்கு எதிராக சிவில் அமைப்புகள் போர்க்கொடி!

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையத்தின் பணிப்பாளரும் நல்லிணக்கச் செயலணியின் பொதுச் செயலாளருமான பாக்கியசோதி சரவணமுத்து போர்க்கொடி தூக்கியுள்ளார். தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்தவேண்டும் என்று அரசு முயற்சிகள் எடுத்தாலும், அதனைக் காரணங்காட்டி தேர்தல்களைப் பிற்போடவோ அல்லது காலதாமதத்தை ஏற்படுத்தவோ முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து பகிரங்கக் கருத்தாடல்கள் மாகாண சபைகளில் இடம்பெற்றுவருகின்றன. குறித்த சட்டமூலம் ஊவா, தென் …

Read More »

புதிய அரசமைப்பு நிறைவேறுவதை உறுதிப்படுத்த வேண்டும் இந்தியா! – சுஷ்மாவை மீண்டும் சந்தித்து வலியுறுத்தினார் சம்பந்தன் 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இலங்கை வந்திருந்த இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை இரண்டாவது தடவையாக நேற்றும் சந்தித்துக் கலந்துரையாடினர். கொழும்பில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் இரவு …

Read More »

புதிய அரசமைப்பு தேவையில்லை! – பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் பேசிய பின்னர் சம்பந்தனுக்குப் பதில் என்கிறார் மஹிந்த

“புதிய அரசமைப்பு தற்போது தேவையில்லை. அரசமைப்புத் திருத்தத்துக்கு ஆதரவளிப்பதா அல்லது இல்லையா என்பது குறித்து பொது எதிரணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் முதலில் பேசவேண்டும். அதன்பின்னரே சம்பந்தனுக்கு உரிய பதிலை வழங்கமுடியும்.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ்ப் பத்திரிகை ஒன்றிடம் தெரிவித்துள்ளார். பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் …

Read More »

புதிய அரசமைப்புக்கு ஆதரவு வழங்கவேண்டும் மஹிந்த! – சம்பந்தன் நேரில் வலியுறுத்து

“புதிய அரசமைப்புக்கு ஆதரவளிக்கவேண்டியது மஹிந்த ராஜபக்ஷவின் கடமையாகும். இதை அவரிடம் தெளிவாக எடுத்துரைத்தேன்” என்று பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பு, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்தவின் இல்லத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போது பேசப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக கேட்டபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மேற்படி கருத்தை வெளியிட்டார். …

Read More »

மஹிந்த – சம்பந்தன் மந்திராலோசனை! – புதிய அரசமைப்புக் குறித்து விரிவான கருத்துப் பகிர்வு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் சத்தம் சந்தடியின்றி சந்திப்பு ஒன்று இடம்பெற்றிருக்கின்றது. தனித்து இருவரும் சுமார் 45 நிமிட நேரம் மனம் விட்டுப் பேசியிருக்கின்றனர். புதிய அரசமைப்பு உருவாக்கம் உட்பட தற்போதைய அரசியல் நிலைவரம் குறித்து அவர்கள் மந்திராலோசனை நடத்தியிருக்கின்றனர் எனத் தெரியவந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் அவரது கொழும்பு விஜேராம மாவத்தை இல்லத்தில் …

Read More »

நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை அரசுக்கு அழுத்தம் தொடரும்! – இலங்கைத் தமிழரை இந்தியா கைவிடாது என சம்பந்தனிடம் சுஷ்மா உறுதி 

“இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளையும் பெற்று சுதந்திரமாக வாழவேண்டும். நிரந்தர அரசியல் தீர்வே இந்த நிலைமையை ஏற்படுத்தும். எனவே, நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை இலங்கை அரசுக்கு இந்தியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.” – இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா  சுவராஜ். “இலங்கைத் தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது” எனவும் வாக்குறுதியளித்தார். கொழும்பில் நேற்று ஆரம்பமாகிய இந்தியப் …

Read More »

20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவைப்பெற அரசு பகீரதப் பிரயத்தனம்! – முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்களுடன் ஆளுநர் அவசர சந்திப்பு

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டவரைபுக்கு வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் அனுமதியைப் பெறும் முயற்சியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதன் ஓர் அங்கமாக கிழக்கு மாகாண முதலமைச்சர், தவிசாளர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம அவசர சந்திப்பொன்றை நடத்தியுள்ளார் என அறியமுடிகின்றது. இதற்காக தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இராப்போசன விருந்தை ஏற்பாடுசெய்த ஆளுநர், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தின் முக்கியத்துவம், அது …

Read More »

கிரிக்கெட் அணியின் தோல்வி – நாடாளுமன்றத்தில் விவாதம் கோரும் கூட்டு எதிர்க்கட்சி

இலங்கை கிரிக்கெட் அணியின் தோல்வி தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை கோர கூட்டு எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த யோசனையை முன்வைத்துள்ளனர் எனவும் அடுத்த கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். பொரளையில் கூட்டு எதிர்க்கட்சி இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட் போட்டியில் …

Read More »

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் திருத்தச் சட்டமூலத்தில் கையொப்பமிட்டார் சபாநாயகர்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று காலை கையெழுத்திட்டுள்ளார். இந்த திருத்தச்சட்டமூலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் சட்டமூலத்தில் கையெழுத்திட்டுள்ளதால், அது தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். இதனடிப்படையில், தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சி சபைத் தேர்தலை துரிதமாக நடத்தவுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 9 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை …

Read More »