புதிய அரசமைப்பு குறித்தும் அதன் முக்கியத்துவம் தொடர்பிலும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு விளக்கமளிக்க அரசு முடிவுசெய்துள்ளது. புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சூழலில் அதன் உள்ளடக்கம் குறித்து உள்நாட்டில் மாத்திரமல்ல சர்வதேச ரீதியிலும் கருத்தாடல்கள் வலுப்பெற்று வருகின்றன. தெற்கில், நாடு இரண்டாகப் பிளவுபடக் போகின்றது. சமஷ்டியைக் கொண்டுவரப் போகின்றனர் என அரசியல் இலாபத்துக்காக தீவிர இனவாதப் பிரசாரத்தில் மஹிந்த அணியான பொது எதிரணி …
Read More »கோட்டாவைக் கைதுசெய்து ‘ஹீரோ’வாக்க வேண்டாம்!
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்வதை தடுத்துநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர், இந்தக் கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர். கோட்டாபய ராஜபக்ஷவைக் கைதுசெய்து நாட்டு மக்கள் மத்தியில் அவரைப் பெரியாளாக்கிவிட வேண்டாம் என்றும், அவரைக் கைதுசெய்வதைத் தடுக்குமாறும் அவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், நீதித்துறையின் சுயாதீன செயற்பாடுகள் மீது தன்னால் தலையிட முடியாது என்றும், அவரைக் …
Read More »புதிய அரசமைப்பில் தமிழருக்கு தீர்வு கிடைக்குமா? – அறிவதில் அமெரிக்கா நாட்டம்
இலங்கையின் புதிய அரசமைப்பு முயற்சிகள் தொடர்பாக அறிந்துகொள்வதில் அமெரிக்க அதிகாரிகள் ஆர்வம் கொண்டிருந்தனர் எனத் தெரியவருகின்றது. இந்த முயற்சியின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்குமா என்பதைத் தெரிந்துகொள்வதே அவர்களின் நோக்கமாக இருந்துள்ளது. அமெரிக்காவுக்கு கடந்த மாத இறுதியில் சபாநாயகர் கரு ஜயசூரியா தலைமையில் குழுவொன்று விஜயம் செய்தது. இதில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, சந்திரானி பண்டார, இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, நாடாளுமன்ற உறுப்பினர்களான …
Read More »ஒருமித்த தீர்மானம் எடுக்க களமிறங்குகின்றார் சந்திரிகா அம்மையார்!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினுள் மாறுபட்ட நிலைப்பாடுகள் உருவாகியுள்ள நிலையில் அவற்றுக்கு முடிவுகட்டி ஒருமித்த தீர்மானமொன்றை எடுக்க களமிறங்கியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் சு.க வின் சிரேஷ்ட ஆலோசகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. புதிய அரசமைப்பொன்றை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில் வெஸ்மினிஸ்டர் எனப்படும் பிரதமர் தலைமையிலான ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சி முன்மொழிந்துள்ளது. அதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட நிறைவேற்று …
Read More »திருப்பதியில் மைத்திரி தரிசனம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார். நேற்று பெங்களூர் வழியாக திருப்பதி சென்ற ஜனாதிபதி மைத்திரி, அவரது துணைவியார் ஜயந்தி புஸ்பா குமாரி, மகன் தஹம் சிறிசேன ஆகியோர் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தனர். இன்று அதிகாலை அவர்கள் ஏழுமலையான் ஆலயத்தில் சுப்ரபாத சேவையின்போது வழிபாடுகளை மேற்கொண்டனர். இதையடுத்து. அவர்களுக்கு திருப்பதி ஆலயத்தின் சார்பில், நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளால் ஜனாதிபதி கௌரவிக்கப்பட்டு, ஆலய …
Read More »தமிழருக்கு உடன் தீர்வு வேண்டும்! – நாடாளுமன்றில் வலியுறுத்தினார் சம்பந்தன்
“நீண்டகால ஆயுதப் போராட்டத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. அவர்கள் தமது அடையாளத்தையும், கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள நீண்டகாலப் போராட்டங்களை நடத்திவந்துள்ளனர். ஆயுதப் போராட்டத்துக்கான காரணங்களாக அமைந்த விடயங்கள் இன்னமும் நீடிப்பதனால் அவற்றுக்கு விரைவாகத் தீர்வு காணப்படவேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன். இலங்கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவையொட்டி நேற்று நடைபெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு …
Read More »ஒருமித்த நாட்டுக்குள் சகலருக்கும் சம உரிமை தீர்வு! – நாடாளுமன்றில் மைத்திரி உறுதி
“பிரிக்க முடியாத – பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் அனைத்து மக்களின் உரிமைகளை சக்திமயப்படுத்தும் பின்புலத்தில் உருவாகும் புதிய அரசமைப்புக்கு நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்தும் உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டும்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையில் நாடாளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவையொட்டி நேற்று நடைபெற்ற விசேட நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- “அரசு என்ற அடிப்படையில் நாம் …
Read More »மத்திய வங்கி ஆளுநர் வடக்குக்கு இருநாள் பயணம்!
மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு நாளைமறுதினம் வடக்குக்குச் செல்லவுள்ளார். வடமாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய அனைத்து மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு அந்த மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பில் ஆளுநர் பார்வையிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6ஆம் திகதி முல்லைத்தீவில் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் பேச்சு நடத்தவுள்ளதோடு, முல்லைத்தீவு பிரதேச செயலகத்துக்கும் செல்லவுள்ளார். 7ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஆளுநர் …
Read More »182 தொண்டராசிரியர்களுக்கு வடக்கில் ஆசிரியர் நியமனம்! – மத்திய கல்வி அமைச்சு அனுமதி
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களில் நிரந்தர நியமனம் வழங்க தெரிவாகிய 182 பேரின் பெயர்ப் பட்டியல் வடக்கு மாகாணக் கல்வி அமைச்சுக்கு கிடைத்தது. வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களிலும் தற்போது தொண்டர் ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்களை இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்க்கும் நோக்கில் மத்திய கல்வி அமைச்சால் நேர்முகத் தேர்வு நடாத்தப்பட்டது. நேர்முகத் தேர்வில் ஆயிரத்து 44பேர் பங்கு கொண்டிருந்தனர். அவர்களில் பலர் நேர்முகத் தேர்வில் கோரப்பட்ட தகமைகளை நிறைவு …
Read More »அப்பாவிச் சிங்களவர்களை தவறாக வழிநடத்துகிறீர்கள்! – சம்பந்தன்
புதிய அரசமைப்புத் தொடர்பில் அப்பாவி சிங்கள மக்களை நீங்கள் தவறாக வழிநடத்துகின்றீர்கள் என்று மஹிந்த அணியைச் சேர்ந்த ஜி.எல்.பீரிஸிடம் நேருக்கு நேர் காட்டமாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்ததாக, பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான பங்களாதேஷ் தூதுவரின் கொழும்பு இல்லத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இரவுநேர விருந்து நிகழ்வொன்றில் பங்கேற்றபோதே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இந்தக் குற்றச்சாட்டை ஜி.எல்.பீரிஸிடம் முன்வைத்ததாக அது …
Read More »