மஹிந்த அணியான பொது எதிரணிக்கு நேரடியாகத் தமது ஆதரவை வழங்கிவரும் ஸ்ரீலங்கா சுதத்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் அதிரடியாகப் பறிக்கப்பட்டிருந்த சூழலில் மேலும் சிலரின் பதவிகள் விரைவில் பறிபோகவுள்ளதாக நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. கடந்த வியாழக்கிழமை மத்துகம மற்றும் நாவலப்பிட்டி தொகுதி அமைப்பாளர்களாக இருந்த குமார வெல்கம, மஹிந்தானந்த அலுத்கமகேவின் பதவிகள் பறிக்கப்பட்டு குறித்த தொகுதிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதேவேளை, அத்தனகல தொகுதியின் புதிய அமைப்பாளராக …
Read More »அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு உடன் தீர்வு வழங்குக! – பிரதமரை வலியுறுத்துகிறார் சி.வை.பி.ராம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூன்று தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துவதற்கு அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை உடன் நிறைவேற்றுதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளர் சி.வை.பி.ராம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வலியுறுத்துகின்றார். இவ்விடயம் சம்பந்தமாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “வவுனியா மேல்நீதிமன்றத்தில் நான்கு வருடங்களாக இடம்பெற்ற தமது வழக்குகளை அநுராதபுரம் மேல் …
Read More »உணவு ஒவ்வாமை காரணமாக 200 பேர் கண்டி வைத்தியசாலையில்!
கண்டி, ஹாரகம ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த சுமார் 200 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள், உணவு ஒவ்வாமை காரணமாக, இன்று காலை கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள், தொழிற்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவை உட்கொண்டதன் பின்னரே, இவ்வாறு திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Loading…
Read More »தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்க! – மைத்திரிக்கு சம்பந்தன் அவசர கடிதம்
சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மேலும் தாமதமின்றி உடன் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவசர கடிதம் எழுதியுள்ளார். அநுராதபுரம் சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், அவர்களின் கோரிக்கை தொடர்பிலும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நேரில் பேசுவதற்கு எதிர்க்கட்சித் …
Read More »தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்: பதிலைத் தந்துவிட்டு யாழ்ப்பாணம் வருக!
“உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் நியாயமானவையாகும். அவற்றைப் புறந்தள்ள முடியாது. நாளைமறுதினம் சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்துக்கு வர இருக்கின்றார். அவர் தனது வருகைக்கு முன்னர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நல்ல ஒரு பதிலைத் தரவேண்டும். பதிலைத் தந்துவிட்டே ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு வரவேண்டும். இதுவே யாழ்ப்பாண ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.” – இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட வணிகர் கழகம் தெரிவித்தது. இது தொடர்பில் …
Read More »யாழ்ப்பாணம், மன்னாரைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியா நுளம்பு!
மன்னார், யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து வவுனியாவிலும் மலேரியாவைப் பரப்பும் நுளம்புகள் இனங்காணப்பட்டுள்ளன என்று வவுனியா மாவட்ட சுகாதார மருத்துவ அதிகாரி திருமதி பவானி தெரிவித்தார். மலேரியா நுளம்புகளை முற்றாக ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தலைமன்னாரில் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியாவைப் பரப்பும் நுளம்புக் குடம்பிகள், யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 19 கிணறுகளில் சில தினங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. தற்போது அவை வவுனியா …
Read More »ஒருசில சாட்சிகளுக்காக வேறு நீதிமன்றுக்கு வழக்கு மாறுவது சட்டப்படி கண்டனத்துக்குரியது!
“சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்துக்கு மாற்றுவது சட்டப்படி கண்டனத்திற்குரியது. ஒன்றரை இலட்சம் படையினர் வடக்கு மாகாணத்தில் குடிகொண்டிருக்கும்போது சாட்சிகள் பயந்து வரத் தயங்குகின்றார்கள் என்பது நொண்டிச்சாட்டாகவே தென்படுகிறது. சாட்சிகளைப் பொலிஸாரே மன்றுக்குக் கொண்டுவந்து திரும்பவும் கொண்டுபோய் அவர்களது வதிவிடங்களில் சேர்ப்பிக்கமுடியும்.” – இவ்வாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ‘ஊடகவியலாளர்களின் கேள்விக்கான முதலமைச்சரின் பதில்’ என்ற தலைப்புடன் அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “தமிழ் அரசியல் கைதிகள் …
Read More »தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பிலும் நாளை போராட்டம்!
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும், அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் கொழும்பிலும் நாளை வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. கொழும்பு ரயில் நிலையத்துக்கு முன்னால் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இந்தப் போராட்டம் இடம்பெறும் என்று அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். Loading…
Read More »போர்க்குற்றத்துக்குச் சான்றான முள்ளிவாய்க்காலில் பப்லோ!
நிலைமாறுகால நீதி, சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை ஆராய உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீள்நிகழாமைக்கான உத்தரவாதங்கள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் விசேடஅறிக்கையாளர் பப்லோ டி கிறிப் இன்று வடக்குக்குச் சென்றார். இதன்போது அவர், இறுதிப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றமைக்குச் சான்றான இடமான முள்ளிவாய்க்காலுக்கும் சென்று அங்குள்ள தற்போதைய நிலைமைகளைப் பார்வையிட்டார். அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறிய மக்களையும் அவர் சந்தித்துப் பேசினார். அதேவேளை, …
Read More »தொடர்கிறது அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம்! வடக்கு ஹர்த்தாலுக்கு வலுக்கிறது பேராதரவு!!
வவுனியா மேல்நீதிமன்றத்தில் 4 வருடங்களாக இடம்பெற்ற வழக்கை சட்டமா அதிபர் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்துக்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தமது வழக்கை மீளவும் வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு வலியுறுத்தியும் அநுராதபுரம் சிறைச்சாலையில் செங்கன் எனப்படும் இராஜதுரை திருவருள், மதியழகன் சுலக்ஷன், கணேசன் தர்ஷன் ஆகிய மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையில் முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று வியாழக்கிழமை 18ஆவது நாளாகவும் தொடர்கின்றது. அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் தொடர்பில் மைத்திரி …
Read More »