கதிர்காமம் கோயிலினுள் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது சில வாரங்களுக்கு முன் கதிர்காமம் கோயிலில் காலை தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது, கோயில் கதவைத் திறப்பதில் கோயில் நிர்வாகத் தரப்புக்கும் ஊழியர் தரப்புக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் குறித்து ஆராய்வதற்கு நிலையான அபிவிருத்தி, வனவிலங்குகள் மற்றும் புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா விசேட குழுவொன்றை …
Read More »இந்தியா புறப்பட்டார் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று காலை இந்தியா புறப்பட்டார். அவருடன் ஜீ.எல். பீரிஸும் இந்தியாவுக்கான விஜயத்தில் இடம்பெற்றுள்ளார். சர்வதேச பெளத்த கலாசார சம்மேளனம் மகராஷ்டிரா மாநிலத்தில் நடத்தவுள்ள பெளத்த கலாசார மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்தியா செல்கின்றார்.
Read More »புகையிரதம் மோதி வயோதிபர் பலி!
சிலாபம் ரயில்வே நிலையம் அருகே நேற்று (26) மாலை வயோதிபர் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்தார். உயிரிழந்தவர் போமுல்லையைச் சேர்ந்த எச்.ரத்நாயக்க (63) என்று தெரியவந்துள்ளது. இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது விபத்தா, தற்கொலையா என்று விசாரணை நடத்திவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More »கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு
வவுனியாவில், கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலத்தை இன்று (27) பிற்பகல் பொலிசார் மீட்டுள்ளனர். வவுனியா – உக்கிளாங்குளம், பிள்ளையார் கோவில் வீதியில் வசித்து வந்த தியாகலிங்கம் ரகுவரன் (26) என்ற இளைஞன் கடந்த மூன்று தினங்களுக்கு முன் காணாமல் போயுள்ளார். இது குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் அளிக்கப்பட்டிருந்தது. வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பினால் மனமுடைந்த நிலையில் ரகுவரன் இருந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று பிற்பகல் 2 …
Read More »மூன்று பிள்ளைகளுடன் தாய் தற்கொலை
“உயிரிழந்த தந்தை குறித்து எனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. அப்பா எப்ப வருவார்? அப்பா கண்திறந்திட்டாரா? எப்ப பார்ப்பார்? ஏன் வரவில்லை? போஸ்மோட்டத்தில் தந்தையைப் பார்த்துவிட்டு எங்கட அப்பா வெள்ளைதானே ஏன் கறுத்தவர்? வெள்ளையா வருவாரா? அப்பா வர நாங்கள் பாக்குக்கு போவோம் என்று அடுக்கடுக்காக என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. எத்தனை காலம் ஏமாற்றுவது?” என, சுனித்ரா எழுதிய கடிதம் …
Read More »உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் துஷார தலுவத்தைக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவரை துஷார தலுவத்தை தாக்கியிருந்தார். இது குறித்த காட்சிகள் ஊடகங்களில் பரவியதையடுத்து அவர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. இடமாற்றம், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை என்பனவற்றுக்கு முகங்கொடுத்திருந்த அவர் மீது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணையகம் தெரிவித்துள்ளது.
Read More »வட்டுவாகல் கடற்படைமுகாம் வீதிமறியல் போராட்டம் கைவிடப்பட்டது
முல்லைத்தீவு வட்டுவாகல் மற்றும் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியை உள்ளடக்கி மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்படை வலயத்துக்குட்பட்ட கோத்தபாய கடற்படை கப்பல் என்னும் கடற்படை தளத்துக்கு இன்றையதினம் நிரந்தரமாக காணி சுவீகரிப்பு பணிகள் நடைபெறவிருந்த நிலையில், குறித்த காணிகளுக்கு சொந்தமான மக்கள் கடற்படை முகாம் அமைக்க நிரந்தரமாக காணி சுவீகரிப்பு அளவீடுக்கு அனுமதிக்க முடியாது என தெரிவித்து வீதிமறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர் கடந்த வர்த்தமானி …
Read More »வடமாகாண தொண்டராசிரியர்கள் போராட்டத்தில்.!
வடமாகாண தொண்டராசிரியர்கள் சிலர் இன்றைய தினம் கைதடியில் உள்ள வடக்கு மாகாண சபை பேரவைச் செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர் நேர்முகத் தேர்வின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட 182 பேருடைய பெயர்கள் வெளியிடப்பட்டும் இதுவரை ஆசியரியர் நியமனங்கள் வழங்கப்படாததை அடுத்தே அவர்கள் இப் போராட்டத்தினை நடத்தினர். மாகாண கல்வி அமைச்சின் அனுமதியோடு மத்திய கல்வி அமைச்சினால் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்று. அதில் 182 பேர் ஆசியர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்டனர். …
Read More »ரீ56 ரக வெற்று தோட்டாக்கள் மீட்பு
நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொத்தலென கெடுமவத்த பகுதியில் 7 வெற்று தோட்டாக்களை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர் கெடுமவத்த பஸ் நிறுத்துமிடத்தில் வைத்து குறித்த ரீ56 ரக வெற்று தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று காலை கெடுமவத்த பஸ் நிறுத்துமிடத்தில் பஸ்ஸிற்காக நின்றுக்கொண்டிருந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமாக இருந்த பொலித்தீன் பையை பார்க்கும் பொழுது அதில் தோட்டாக்கள் இருந்ததை கண்டு உடனடியாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு …
Read More »தேயிலை மலையை முறையாக பராமரிக்க கோரி தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பில்
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டிரதன் செம்புவத்தை தோட்ட தேயிலை மலையை முறையாக பராமரிக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து அத்தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை தோட்ட காரியாலயத்திற்கு முன்பு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். வட்டவளை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஸ்டிரதன் செம்புவத்தை தேயிலை மலை சில வருட காலமாக பராமரிக்க படாமல் காடாக மாறியிருப்பதால் தேயிலை செடிகளில் விஷ பூச்சிகள், பாம்புகள் பயத்தால் இத்தோட்ட தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் …
Read More »