Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 202)

இலங்கை செய்திகள்

மைத்திரி, மஹிந்த நேரடிப் பேச்சு! கொழும்பு அரசியலில் பரபரப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. முக்கியமான அரசியல் விடயங்கள் குறித்து மஹிந்தவும்,மைத்திரியும் நேரடியாகச் சந்தித்து பேசுவது நல்லது என்று பொது எதிரணியின் முக்கிய உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களும் பரஸ்பரம் தீர்மானம் ஒன்றை எடுத்ததை அடுத்தே இருவரும் நேரில் சந்தித்துப் பேசுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த விடயம் கொழும்பு …

Read More »

இலங்கையில் அதிரடி சுற்றிவளைப்பு! 4 மணிநேர நேரத்தில் 758 பேர் கைது

பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் விசேட அறிக்கை ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 11 மணியில் இருந்து இன்று அதிகாலை 3 மணி வரை இந்த விசேட சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 758 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் சகல பொலிஸ் பிரிவுகளையும் இணைக்கும் வகையில் 16362 பொலிஸாரின் பங்களிப்புடன் இந்த விசேட சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகத்தின் …

Read More »

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

அம்பலந்தோட்டை, கொக்கல்லை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 12.05 மணியளவில் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தப் போது, மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம்அணியாமல் இருவர் பயணித்ததுடன், அவர்களை தொடர்ந்து சிறிய ரக பாரவூர்தியும் பொலிஸாரின் சமிஞைகளை மீறி பயணித்துள்ளது. மேலும், குறித்த பாரவூர்தி பொலிஸாரின் சோதனை சாவடியின் …

Read More »

மகிழ்ச்சியில் சம்பந்தன், சுமந்திரன்…..!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வரவு செலவுத்திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இந்த வரவு செலவுத்திட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் அடங்கலாக சகலருக்கும் நன்மை தரும் யோசனைகள் அடங்கியுள்ளதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட முன்மொழிவில் சில முன்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக போராளிகளுக்கு சில உதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், பெண்களுக்கு சில …

Read More »

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் குறித்து மைத்திரி வெளியிட்ட தகவல்!

Maithripala Sirisena

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் உலகம் முழுவதும் நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன், சர்வதேச ரீதியில் ஒன்றிணைந்துள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தனி தமிழீழம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கொழும்பு – நாராஹேனபிட்ட இராணுவ வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “சமகாள அரசாங்கம் இராணுவத்தை …

Read More »

பட்­ஜட்டை சாத­க­மாக பார்க்­கின்றோம் : கூட்­ட­மைப்பு தெரி­விப்பு

எதிர்­வரும் 2018 ஆம் ஆண்­டுக்­காக கூட்­ட­மைப்­பி­டத்­தி­லி­ருந்து பெறப்­பட்ட கருத்­துக்கள் வரவு–செல­வுத்­திட்­டத்தில் உள்­வாங்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை சாத­க­மாக பார்ப்­ப­தாக ஊட­கப்­பேச்­சா­ளரும், யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை சமர்ப்­பிக்­கப்­பட்ட 2018 ஆம் ஆண்டு வரவு–செல­வுத்­திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், தற்­போது நல்­லி­ணக்­கத்­தினை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடு­ப­ட­வேண்­டிய நிலை­மைகள் உள்­ளன. அத­ன­டிப்­ப­டையில் எமது தரப்பின் கருத்­துக்­க­ளையும் வரவு …

Read More »

நாடாளுமன்றத்துக்கு சைக்கிள்களில் வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியினர் சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு சைக்கிள்களில் வருகை தந்திருப்பதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டை அடுத்து, பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை எடுத்துக்காட்டும் விதமாக மஹிந்த அணியினர் இவ்விதம் சைக்கிள்களில் நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பதாக குறிப்பிடப்படுகிறது. நல்லாட்சி எனக்குறிப்பிடப்படும் …

Read More »

நாமல் தமிழில் கேட்ட கேள்வி! தக்க பதிலடி கொடுத்தார் சம்பந்தன்

ஒரு நியாயமான நிரந்தரமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும், பிரச்சினைகள் உருவாகுவதற்கு அடிப்படைக் காரணம் ஓர் அரசியல் தீர்வு ஏற்படாமையே ஆகும். எனவேதான் அரசியல் தீர்வு விடயத்தில் கூடிய அக்கறை செலுத்தவேண்டியது எமது கடமை என எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ எதிர்க்கட்சித் தலைவரிடம் தமிழில் ஒரு கேள்வியை எழுப்பியிருநதார். “அதிகாரப்பகிர்வு கிடைக்கும் என்பதைக் காரணங்காட்டி தமிழ் மக்களின் …

Read More »

மன்னாரை தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய அச்சுறுத்தல்: கடந்த வருடத்தை விட பாதிப்பு அதிகம்

யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் 2016ஆம் ஆண்டு 1700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2017ஆம் ஆண்டு 4700 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார். புதிதாக மலேரியா நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு, ஆரம்பத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்த மலேரியா அச்சுறுத்தல் தற்போது யாழ். மாவட்டத்திற்கு வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தொடர்பில் …

Read More »

எரிபொருள் நிலையத்தில் பெற்றோல் வழங்கும் மைத்திரி!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையினால் தான் நன்றாக மக்களிடம் திட்டு வாங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாதுலுவாவே சோபித்த தேரரின் இரண்டாவது நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதாக சிலர் சிந்திக்கின்றனர். மக்கள் அவ்வாறு சிந்திப்பதில் தவறில்லை. வைத்தியசாலையில் ஆர்ப்பாட்டம் செய்தால் என்னை தான் திட்டுகின்றனர். மருந்து வழங்குவது நான் என நினைக்கின்றார்கள். பாடசாலையில் …

Read More »