முச்சக்கரவண்டியில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 16 வயதுச் சிறுமி ஒருவர் தவறான முடிவெடுத்துத் தற்கொலைக்கு முயன்ற நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இது தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டு பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்தக் கூட்டு வன்புணர்வு வவுனியா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. வன்புணர்வின் பின்னர் சிறுமியை குகன் நகரில் உள்ள ஆள்களற்ற வீடு ஒன்றில் குற்றவாளிகள் அநாதரவாக விட்டுச் சென்றனர். ஒருவாறு நேற்று வீடு வந்து …
Read More »தப்பியோடிய ஆவா குழுத் தலைவர் மடக்கிப்பிடிப்பு!
யாழ்.கோண்டாவில் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில்சந்தேகநபராக அடையாளம் காணப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டு இன்று மல்லாகம் நீதிமன்றில் வேறு வழக்கில் ஆஜர் செய்யப்பட்டநிலையில் நீதிமன்றிலிருந்து தப்பி ஓடிய நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெறும் வாள்வெட்டுச் சம்பவங்கள் போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகளவில்இடம்பெற்றிருந்தன. இவ்வாறு பொது மக்கள் மீதான வாள்வெட்டுக்களின் தொடராக பொலிஸார் …
Read More »நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவின் எதிரொலி! களமிறங்கியது விசேட பொலிஸ் குழு
யாழ்.மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு வேளைகளில் வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசம் மீண்டும் அதிகரித்துள்ளன. இதனையடுத்து யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுக்களைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேற்படி பொலிஸ் குழுக்கள் யாழில் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை(14) இரவு யாழ். கோண்டாவில், நல்லூர், சங்குவேலி, ஆறுகால் மடம் உள்ளிட்ட ஆறு பகுதிகளில் ஒரே இரவில் அடுத்தடுத்து நடாத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவங்களில் ஒன்பது பேர் படுகாயமடைந்ததுடன் பல இலட்சம் ரூபா …
Read More »வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்துள்ள அவசர பணிப்புரை
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு வடமாகாணத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவசர பணிப்புரையை பிறப்பித்துள்ளார். யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அரச சட்டவாதி நாகரட்னம் நிஷாந் மற்றும் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினருக்கு இடையில் இன்றைய தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே மேற்படி பணிப்புரையானது நீதிபதியால் …
Read More »யாழ் .பல்கலைக்கழக கல்வி செயற்பாடுகள் மீள ஆரம்பம்
யாழ். பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் நாளை மீள திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த பீடங்களை சேர்ந்த மாணவர்கள் இன்றைய தினத்திற்குள் தமது விடுதிகளுக்கு திரும்புமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் தொடர் போராட்டம் …
Read More »நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு யார் காரணம்?
நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு யார் காரணம் என்பதனை முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விளக்கியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் வீழ்ச்சி அடைவதற்கு மத்திய வங்கியின் சில அதிகாரிகளே காரணம் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். மத்திய வங்கியின் சில அதிகாரிகளின் செயற்பாடுகளினால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் முன்னாள் நிதி அமைச்சர் …
Read More »மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறிது நேரம் காலிமுகத்திடல் மைதானத்தில் மரம் ஒன்றில் ஓய்வாக அமர்ந்து மக்களுடன் கலந்துரையாடியுள்ளார். இதன்காரணமாக மக்கள் மத்தியில் ஜனாதிபதி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதுடன், மக்களின் பாராட்டினையும் பெற்றுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த எளிமை போக்கு மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனிடையே கொழும்பு காலி முகத்திடலில் இன்றைய தினம் தேசிய நீரிழிவு தின நடைப் பயணம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன …
Read More »மகிந்தவை வியக்க வைத்த யாழ் இளைஞன்!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரின் செயற்பாடு கண்டு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வியந்து போனதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. டீ.ஏ.ராஜபக்சவின் நினைவு தினம் கடந்த வாரம் தங்காலையில் இடம்பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர். குறித்த நினைவு தின நிகழ்வில் மகிந்தவின் அரசியல் வேலைகளை முன்னெடுக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த இளைஞன் …
Read More »கேப்பாபுலவு காணிகளை விரைவில் விடுவிக்க வேண்டும்!
இராணுவத்தால் கையக்கப்படுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு காணியை விரைவில் விடுவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தின் பிரதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், பாதுகாப்பு செயலாளர், இராணுவத்தலைமைக் கட்டளை அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளரினால் ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டவாறு, 133 ஏக்கர் காணியை இம்மாதம் …
Read More »கடவுச்சீட்டு, ஆள் அடையாள அட்டை பெறுவோருக்கு விசேட அறிவித்தல்!
2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட யோசனைக்கு அமைய அரசாங்க சேவைகளுக்காக அறிவிடப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச சேவைக்கான கட்டணமாக நூற்றுக்கு 15 வீதம் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த கட்டணம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய கடவுச்சீட்டு, அடையாள அட்டை, தபால் கட்டணம், மிருகக்காட்சி சாலை கட்டணம், நீதிமன்ற சேவை கட்டணம் மற்றும் ஏனைய அனைத்து அரசாங்க சேவைகளின் கட்டணங்களும் நூற்றுக்கு 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. …
Read More »