Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 199)

இலங்கை செய்திகள்

அர்ப்பணிப்புள்ளவர்களுக்கு வாக்களிக்குமாறு சந்திரிக்கா கோரிக்கை

கட்சி பேதங்கள் பாராது நாட்டுக்காக பணிபுரியக்கூடியவர்களுக்கு எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். வேயங்கொடையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனை தெரவித்தார். கட்சியில் தவறிழைத்தவர்களை நீக்கிவிட்டு புதியவர்களை இணைத்துக்கொண்டே நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சிக்காகவன்றி நாட்டுக்காக முன்னிலையாகும் எவருக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். தேசத்திற்காக தொலைநோக்குடன் செயற்படக் கூடிய அரசியல் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும் …

Read More »

வடக்கில் பிரபாகரனின் பிறந்த நாள் தெற்கில் அதிர்வை ஏற்படுத்தும் – சிவாஜிலிங்கம்

தமிழ்த் தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த தினத்தை நாங்கள் இவ்வாறு கொண்டாடுவது தென்னிலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று தெரிந்தும் தான் நாங்கள் இவ்வாறு கொண்டாடுகின்றோம். இது சட்டவிரோதமான நிகழ்வு அல்ல என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறையில் பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த இடத்தின் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பிறந்த நாள் கொண்டாட்டம், மர நடுகை நிகழ்வு மற்றும் பல்வேறு நலத்திட்ட அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பின்னர் …

Read More »

மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களை நாட்டுவோம் – பொ.ஐங்கரநேசன்

மாவீரர்களுக்காகக் கண்ணீர் சொரியும் இக்கார்த்திகை மாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம். இந்த உயிருள்ள நினைவுச் சின்னங்களில் எம்மாவீரச் செல்வங்கள் தினம் தோறும் முகம் காட்டுவார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் தினம் தொடர்பாக அவர் விடுத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மாவீரர்கள் …

Read More »

தமிழீழ உடை, கொடிகளுடன் கொழும்பில் பேரணி !

தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்டும், சமஷ்டி ஆட்சி வேண்டாம் என்ற வாசகம் அடங்கியதுமான தயாரிக்கப்பட்ட உடைகளை அணிந்தும், கறுப்புக் கொடிகளை நெற்றியில் கட்டியவாறும் கொழும்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்திய பிவித்துரு ஹெல உறுமய, பேரணியையும் ஆரம்பித்துள்ளது. புதிய அரசியலமைப்புக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான பிவித்துரு ஹெல உறுமயவே தமிழீழ வரைபடம் பொறிக்கப்பட்ட உடைகளுடன் கொழும்பிலிருந்து மாபெரும் உந்துருளிப் பேரணி ஒன்றை …

Read More »

தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாட்டம் யாழ்.பல்கலைக்கழகத்தில்

யாழ். பல்கலை

தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63 ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இன்று கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது. மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த நிகழ்வு இன்று முற்பகல் 11 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்துக்கு இடம்பெற்றது. தமிழீழத்தை சித்தரிக்கும் வகையில் கேக் அமைந்திருந்தது சிறப்பு அம்சம். அத்துடன் தலைவர் வே.பிரபாகரனுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் சுவரொட்டிகளும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கு உள்பட வளாகம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

Read More »

யாழ். பொம்மை வெளியில் ஆயுதங்கள் மீட்பு!

யாழ். – பொம்மைவெளிப் பகுதியில், உரப் பையில் கட்டபட்ட நிலையில், சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 10 பழைய ரி.56 ரக துப்பாக்கிகள், 6 எம்.எம் மோட்டார் குண்டுகள் ரவைகள், கைக்குண்டுகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களே இவ்வாறு, இனந்தெரியாத நபர்களினால் குறித்த இடத்தில் போடப்பட்டுள்ளன. இன்று (26) காலை அப் பகுதி மக்கள் அநாமதேய முறையில் பொதி ஒன்று இருப்பதைக் கண்டு யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து, பொலிஸார் மற்றும் விசேட …

Read More »

கனடா செல்ல முற்பட்ட 26 பேர் கைது

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட 26 பேர் புத்தளம் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரிகளால் இன்று(26) கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம்,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். புத்தளம்-தில்அடிய பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் சந்தேகத்திடற்கிடமான நபர்கள் தங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலக்கமையவே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களுடன் பெண்ணொருவரும் இருந்ததாக சிலர் தெரிவித்ததாகவும்,குறித்த சந்தர்ப்பத்தில் அவர் தலைமறைவாகியிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Read More »

34 கிலோ போதைப்பொருளுடன் தலைமன்னார்வாசி கைது

தலைமன்னாரில், ஹாஷிஷ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 34 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தலைமன்னாரின் உருமலை பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையின்போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 34 வயது நபர் என்றும் தலைமன்னாரைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலிஸ் விசாரணை தொடர்கிறது.

Read More »

புகையிரதத் திணைக்களத்தில் பெண்களுக்கு இடமில்லை!

புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றும் பெண்களை வேறு திணைக்களங்களுக்கு மாற்றுவதற்கு அமைச்சரவையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்ட விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று (25) நடைபெற்றபோதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது. வரவு-செலவுத் திட்டத்தைச் சார்ந்து, திணைக்களங்களின் செலவீனங்கள் குறித்த விவாதம் நேற்று பாராளுமன்றில் நடைபெற்றது. வெளிவிவகார, மூலோபாய அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்கள் இதில் பிரதான அங்கம் வகித்தனர். இதன்போது, பல்வேறு சந்தர்ப்பங்களில் புகையிரதத் திணைக்களத்தில் தற்காலிகமாக இணைத்துக்கொள்ளப்பட்ட சுமார் …

Read More »

ஒருமித்த நாடு இதுவே எமது எதிர்பார்ப்பாகும்!

மத்தியிலும், மாகாணத்திலும் காணப்படும் நிறுவனங்களில் அதிகாரத்தை பிரயோகிக்க கூடிய ஒற்றையாட்சியுடன் கூடிய ஒருமித்த நாடு இதுவே எமது எதிர்பார்ப்பாகும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் போச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.எம்.சுமந்திரன் தெரிவித்தார். அரசியலமைப்பு தொடர்பாக மக்களை தெளிவுபடுத்தும் கூட்டம் கல்முனை நால்வர் மண்டபத்தில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், சிங்கள சிவில் சமூகம் அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு பாடுபடுகின்றனர். இது …

Read More »