நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை தொடர்ந்து நீடித்தால், பொலிஸ் உத்தியோகத்தர்களை அவசர நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்குத் தயார் நிலையில் வைத்திருக்குமாறு சட்ட ஒழுங்குகளுக்கான அமைச்சர் சாகல ரத்நாயக்க பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நாட்டில் திடீரென ஏற்பட்டிருக்கும் அசாதாரண காலநிலையால் நாட்டின் பல பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலை மேலும் தொடர்ந்தால், அங்கு உதவி மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை அனுப்பி வைக்குமாறு …
Read More »பதினைந்து பேர் தேசிய வைத்தியசாலைகளில்!
நிலவும் அசாதாரண காலநிலையால், பதினைந்து பேர் தேசிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திடீரென வீச ஆரம்பித்த காற்று, அதனுடன் கூடிய கடும் மழை என்பவற்றால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை பதினைந்து பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போதிய போக்குவரத்து வசதிகளை உடனடியாகப் பெற முடியாததால், பாதிக்கப்பட்ட பலர் இன்னும் மருத்துவ உதவிகளைப் பெற முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
Read More »தாழமுக்க அனர்த்தம்! சுழல்காற்றினால் உடைமைகள் சேதம்!
தாழமுக்கம் காரணமாக தற்போது இலங்கையின் கரையோரப் பகுதிகளில், குறிப்பாக காலி, மாத்தறை, களுத்துறை, ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை, நுவரெலிய பகுதியிலும் கடுமையான காற்றுடன் மழை பெய்து வருகிறது. கொழும்பு, தெஹிவளை பகுதியிலும் கடுமையான காற்று வீசி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் வீதிகளில் மர முறிவு ஏற்பட்டதால் போக்குவரத்திலும் இடைஞ்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் …
Read More »ஆவா குழு உறுப்பினர்கள் கொழும்பில் கைது!
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டுவிட்டு கொழும்பில் தலைமறைவாகியிருந்த ஆவா குழு உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு நேற்று இரவு அழைத்துவரப்பட்டுள்ளதாக, பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரால் தேடப்பட்டு வந்த முஸ்லிம் இளைஞன் என நம்பப்படும் இக்ரம் உள்ளிட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும், கொழும்பில் மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற சிறப்பு பொலிஸ் குழுவே, குறித்த நபர்களை கைதுசெய்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடம் தீவிர …
Read More »மாலைதீவில் இலங்கை மீனவர்கள் கைது!
எல்லை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில், இலங்கையின் மீனவப் படகுகள் இரண்டையும் அதில் மீன்பிடித்துக்கொண்டிருந்த பத்து மீனவர்களையும் மாலைதீவு பாதுகாப்புப் படையின் கடலோரப் பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர். மாலைதீவின் கடல் எல்லைக்கு உட்பட்ட வாவு அட்டோல் பகுதியில் இவ்விரண்டு படகுகளும் மீன்பிடித்துக்கொண்டிருந்தன. இதை, மாலைதீவு பாதுகாப்புப் படையின் கடலோர ரோந்துப் படகு ஒன்று அவதானித்தது. இது பற்றிய தகவல்களை கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அறியத் தந்த பின்னரே இரண்டு படகுகளையும் கைப்பற்றியதுடன், அதில் …
Read More »மன்னார் கடலில் கொந்தளிப்பு!
இலங்கையில் சீரற்ற காலநிலையில் தீவிரமடைந்துள்ள நிலையில் மன்னாரில் இன்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மன்னார் – வவுனியா பிரதான வீதியில் மன்னார் மேம்பாலத்தை அண்மித்த பகுதிகளில் வீதிக்கு மேலாகக் கடல் அலைகள் எழுந்தன. இலங்கையை அண்மித்த பகுதியில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடை மழை பெய்து வருகிறது. மன்னாரை அண்டிய கடற்பகுதியில் தாழமுக்கம் நிலை கொண்டுள்ளமையினால், ஏற்பட்ட சுழற்சியின் காரணமாக கடல்நீர் நிலப்பகுதியை நோக்கி நகர்கின்றன. …
Read More »பேச்சுத் தோல்வி போராட்டம் தொடரும்!!
“இலங்கை போக்குவரத்துச் சபையின் உயர் அதிகரிக்கும் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்துக்கும் இடையே வவுனியாவில் இன்று நண்பகல் இடம்பெற்ற பேச்சுக்களின் போது சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை. அதனால் தொழிற்சங்க பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும்” இவ்வாறு வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பிரதான முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரை வடக்கிலிருந்து உடனடியாக இடமாற்றக்கோரி வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஊழியர்கள் நேற்று செவ்வாய்கிழமை தொடக்கம் பணிப்புறக்கணிப்பில் …
Read More »எமது சிங்களத் தலைவர்களை விட பிரபாகரனே சிறந்த தலைவர்!
சிங்களத் தலைவர்களை விடவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே சிறந்த தலைமைத்துவத்தைக் கொண்டிருந்ததாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அங்கு மேலும் கருத்து வெளியிட்ட அவர்; விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தாலும், இலங்கை இராணுவத்தில் இருந்தாலும், சிங்களவராக இருந்தாலும், தமிழ், முஸ்லிமாக இருந்தாலும் மக்களே என்பதை நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம்.விடுதலைப் புலிகளின் …
Read More »தகுதியற்றவர்களின் பெயர்கள் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது
2017 வாக்காளர் பெயர் பட்டியலில் தகுதியற்றவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் வாக்காளர்களின் பெயர் உரிய வகையில் அவர்களது உள்ளுராட்சித் தொகுதிக்கான பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்காவிட்டாலும், அதுதொடர்பில் அடுத்த மாதம் 5ம் திகதிக்கு முன்னதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்த முடியும். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் கையொப்பத்துடனான ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2017ம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையில் …
Read More »பிரத்தியேக வகுப்பிற்கு வந்த சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம்
வவுனியாவில் கணிதபாட ஆசிரியர் ஒருவர் 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவருக்கு பிரத்தியேக பரீட்சை வகுப்பு நடாத்துவதாகத் தெரிவித்து அச்சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ள குற்றத்திற்கு இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறித்த ஆசிரியரை குற்றவாளியாக அடையாளங் கண்டதையடுத்து இறுதி தீர்ப்பை அடுத்தவாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். நீதிபதி குறித்த ஆசிரியரைக் குற்றவாளியாக அடையாளங் கண்டதையடுத்து ” இந்த வழக்கானது ஓர் விசித்திரமான வழக்காகும் பள்ளிச்சிறுவன் தனக்கு …
Read More »