Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 195)

இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் மீன்பிடித்துறையில் பல்கலைக்கழகம்

முல்லைத்தீவில் மீன்பிடித்துறையில் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பது குறித்த நடவடிக்கையை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்காந்தராசா முன்னெடுத்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரிடம் அனுமதி பெற்ற பின் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவரிம் குறித்த யோசனையைச் சமர்ப்பித்து நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடியுள்ளார்.

Read More »

இலங்கை வருகிறது ஐக்கிய நாடுகள் சபைச் செயற்குழு

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்படுவதற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபைக் செயற்குழுவின் மூவர் அடங்கிய குழு ஒன்று இலங்கை வரவுள்ளது. ஜோஸ் அன்டோனியோ குவேரா பேர்மடஸ், லீ தூமேய் மற்றும் எலினா ஸ்டெயிநெர்டே ஆகிய மூன்று பேரே இலங்கை வரவுள்ளனர். டிசம்வர் மாதம் 4ம் திகதி முதல் 15ம் திகதி வரையில் இந்த குழு இலங்கையில் தங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் இலங்கையில் உள்ள சிறைச்சாலை, காவற்துறை நிலையங்கள், ஏதிலிகள் …

Read More »

யாழ்ப்பாணத்தில் மேலும் 29 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன(படங்கள்)

யாழ். குடா நாட்டில் வலி வடக்கு – வயாவிளான் பகுதியில் படையினர் வசமிருந்த 29 ஏக்கர் காணி 27 வருடங்களின் பின்னர் இன்று விடுவிக்கப்பட்டது. வயாவிளான் ஜே 205 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட ஒட்டகபுலம் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மற்றும் சென். அன்ரனிஸ் தேவாலயம் உட்பட மக்களின் 29 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டது. பொதுமக்களின் காணியை அவர்களுக்குக் கையளிக்கும் இன்றைய நிகழ்வில் யாழ். மாவட்ட கட்டளைத்ததளபதி மேஜர் …

Read More »

இலங்கையை தாக்கிய புயல்

இலங்கையில் புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 4 பேர் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. தென் மேற்கு வங்க கடலில் இலங்கை அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது புயலாக மாறி இன்று இலங்கையை தாக்கியது. இதனால், இலங்கை முழுவதும் பலத்த காற்று வீசியதுடன் கனமழை பெய்து வருகிறது. அப்போது ஏற்பட்ட விபத்துகளில் 4 பேர் பலியாகியுள்ளனர் எனக் கூறப்படுகிறது. மேலும், நான்கு …

Read More »

சமூக வன்முறைகளுக்கு நீதிகோரி பெண்கள் களத்தில் குதிப்பு!

சமூக வன்முறைகளுக்கு நீதிகோரி ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டமொன்று, “நீதி கோரும் சகோதரிகளாக நாம் ஒன்றிணைவோம்” எனும் கருப் பொருளில், மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் இன்று (30) நடைபெற்றது. மட்டக்களப்பு அனர்த்த முகாமைத்துவப் பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மூவின சமூகங்களையும் சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர். “வன்முறைகளற்ற வீடு, சமூகம், நாடு எமக்கு வேண்டும்”, “காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த உண்மை, நீதி, சமாதனம் எமக்கு வேண்டும்”, “இனங்கள் இணைந்து …

Read More »

உருவாகிறதா சூறாவளி? எதிர்வுகூறும் வானிலை அவதான நிலையம்

இலங்கைக்குத் தென்மேற்குத் திசையில், அரேபியக் கடலில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம், அடுத்த சில மணிநேரங்களில் புயல் காற்றாக உருமாறக்கூடும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இலங்கைக்கு சுமார் 300 கிலோமீற்றர் தொலைவில் உருவாகியிருக்கும் இத்தாழமுக்கம் நாட்டின் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகள் ஊடாகக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நாட்டின் அனேக பகுதிகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று என்பன ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை …

Read More »

சாரதிகளுக்கு ஒரு முக்கிய கோரிக்கை.!

இலங்கைக்கு தென்மேற்குக் கடலில் உண்டாகியிருக்கும் காற்றழுத்தம் கடும் தாழமுக்கமாக மாறியிருக்கிறது. கொழும்புக்கு சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இத்தாழமுக்கம் மேலும் வலுப்பெற்று இலங்கையைக் கடந்து அரேபியக் கடல் பிராந்தியத்தை அடையவிருக்கிறது. இதனால், இன்று முழுவதும் தற்போதைய சீரற்ற காலநிலையே தொடரும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களை 60 கிலோமீற்றர் வேகத்தில் செலுத்துமாறு சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை …

Read More »

நிரம்பி வழியும் கெசல்கமுவ! குடும்பங்கள் வெளியேற்றம்!!

கடும் மழையின் எதிரொலியாக ஹட்டன், கெசல்கமுவ ஆற்றின் நீரேந்துப் பகுதிகள் நிரம்பி வழிவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு அதிகரித்து வருவதாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொகவந்தலாவ எஸ்டேட், நோர்வூட் ஆகிய பகுதிகளில் வீடுகள் சில வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. இதையடுத்து, அப்பகுதியில் வாழும் சுமார் 68 குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தேங்கும் நீரின் அளவு அதிகரித்து வருவதையடுத்து கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று …

Read More »

தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் குறித்து ஆராயும் ஐ.நா. செயற்­குழு இலங்கை வரு­கி­றது.!

தன்­னிச்­சை­யாக தடுத்து வைத்தல் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடு­களின் செயற்­கு­ழுவின் மூவர் கொண்ட உறுப்­பி­னர்கள் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திக­தி­வரை இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். நாட்டின் மனித உரிமை நிலைமை குறித்து ஆராய்ந்து மதிப்­பிடும் நோக்­கி­லேயே இந்த செயற்­கு­ழுவின் விஜயம் அமை­ய­வுள்­ளது. ஜோஸ் அன்­டோ­னியோ லீ டூமி மற்றும் எலினா ஸ்டீனிர்ட் ஆகிய மூவரே இலங்­கைக்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். ஐக­கிய நாடு­களின் இந்த …

Read More »

மின்தடை : திருத்தப்பணிகள் தாமதமாகுமாம் !

மின்தடை ஏற்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தப்பணிகளில் தாமதமேற்படுமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்றபட்ட கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையையடுத்து மரங்கள் முறிந்து மின்சாரக்கம்பங்கள் மற்றும் மின்சார இணைப்பு வயர்கள் மீது விழுந்துள்ளதால் நாட்டின் பல பாகங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டுள்ள கொழும்பு, மாத்தறை, காலி, பதுளை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தடைப்பட்டுள்ள மின்சாரத்தை மீளவழங்குவதில் தாமதமேற்பட வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. …

Read More »