வடக்கு மாகாணத்தில் இயங்கிவரும் கைத்தொழில் பேட்டைகள் மற்றும் உப்பளங்களை வர்த்தமானியில் பிரசுரித்தல் தொடர்பாக வடக்கு மாகாணசபையின் அபிப்பிராயம் பெற்றுக் கொள்வதற்காக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை நாளைய மாகாண சபை அமர்வில் சமர்ப்பிக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: கைத்தொழில் பேட்டைகள் மற்றும் உப்பளங்களை வர்த்தமானியில் பிரசுரித்தல் தொடர்பாக கொழும்பு அரசு, மாகாண சபையிடம் அபிப்பிராயம் வினவியுள்ளதால் அது தொடர்பான அபிப்பிராயத்தை மாகாண சபையினரிடம் கேட்கும் வகையில் …
Read More »விதை வெங்காயவிலையேற்றம்
விவசாயிகள் விதை வெங்காயத்தின் விலை ஏற்றம் குறித்தும் தட்டுப்பாடு குறித்தும் குழப்பமடைய வேண்டியதில்லை. உண்மை வெங்காய விதையைப் பயன்படுத்தி நாற்று மேடை அமைத்து நாற்றை உரிய வேளையில் நடுகை செய்யலாம். உற்பத்திச் செலவு குறைவு. இந்த முறையில் நல்ல விளைச்சலைப் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு யாழ்ப்பாண மாவட்ட விவசாயத் திணைக்கள பதில் விவசாயப் பணிப்பாளர் அஞ்சலாதேவி ஸ்ரீரங்கன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் விதை வெங்காயத்துக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவ துடன் 50 …
Read More »போதைப்பொருளுக்கு எதிராக சாவகச்சேரியில் சுவரொட்டி!
போதைப் பொருளுக்கு எதிராக, சாவகச்சேரிப் பொலிஸாரால் இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ”போதைப் பொருள்கள் அற்றதோர் நாடு சந்தோஷத்தால் நிறைந்த நாளை உருவாக்குவோம் ” எனும் தொனிப்பொருளில் சட்டம் ஒழுங்குகள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு மற்றும் பொலிஸ் போதைப் பொருட்கள் தடுப்புப்பிரிவினர் இணைந்து போதைப் பொருளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் சாவகச்சேரி பொலிஸாரால், நாவற்குழி பகுதியில் பேருந்துகள், முச்சக்கரவண்டிகள் என்பவற்றுக்கு இன்று காலை முதல் விழிப்புணர்வுச் …
Read More »கள்ளநோட்டுக்கள் விநியோகித்து வணிகர்களை ஏமாற்றிய கும்பல்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பிரதேசத் தில் சந்தைத்தொகுதி மற்றும் உணவகங்களில் கும்பல் ஒன்று கள்ளநோட்டுக்களை கொடுத்து வணிகர்களை ஏமாற்றியுள்ளது. புதுக்குடியிருப்புச் சந்தைப்பகுதியில் நேற்று நண்பகல் தூள்வியாபாரம் செய்யும் வயோதிபப் பெண் ஒருவரிடமும், மட்பாண்டங்கள் வியாபாரம் செய்யும் பெண் ஒருவரிடமும், பழவியாபாரம் செய்யும் பெண் ஒருவரிடமும் இந்த மோசடி கும்பல் ஆயிரம் ரூபா தாள்களைக் கொடுத்து சிறுதொகையில் பொருள்களை கொள்வனவு செய்து மீதிப்பணத்தை பெற்றுக்கொண்டது. அத்துடன் புடவைக் கடை கள் மற்றும் பான்சிகடைகளிலும் …
Read More »தாழ்வுபாட்டு கடல் பகுதியில் 25 மீனவர்கள் கைது
மன்னார் தாழ்வுபாடு பிரதேசத்தை சேர்ந்த மக்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். யுத்தத்தினால் இரண்டு முறை இடப்பெயர்வை சந்தித்த இம் மக்களுக்கு இன்று வரை மாற்று தொழில் வாய்ப்புக்கள் எதுவுமே அரசாங்கத்தினால் செய்து தரப்படாத நிலையில் குறித்த தொழிலையே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். 04.12.2017 இன்று திங்கள்கிழமை காலை தமது அன்றாட கடற்தொழிலில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்து சுமார் 25 மீனவர்களையும் …
Read More »அடிக்கல் நாட்டினார் நீதிபதி இளஞ்செழியன்
யாழ். நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்படவுள்ள புதிய திறந்த நீதிமன்றங்களுக்கான கட்டிடத்தின் அடிக்கல்லானது, இன்றைய தினம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் நாட்டி வைக்கப்பட்டுள்ளது. யாழ். நீதிவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம், மேல் நீதிமன்றம் மற்றும் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ஆகியவற்றின் திறந்த நீதிமன்றங்களுக்காகவே இந்தக் கட்டடத் தொகுதி அமைக்கப்படவுள்ளது. தற்போதைய நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் திறந்த நீதிமன்றங்களுக்கு போதிய இடவசதி காணப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டதனையடுத்து, 2017ஆம் …
Read More »ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பை வழங்கியுள்ள நல்லாட்சி
ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறைகளை இல்லாதொழித்துள்ள எமது நல்லாட்சி அரசாங்கம், தற்போது அந்நிலைமையை மாற்றியமைத்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி ஊடகவியலாளர்களுக்கு பூரண பாதுகாப்பையும் வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நிதி மற்றும் ஊடக அமைச்சு, யுனெஸ்கோ மற்றும் அரசாங்க தகவல் திணைக்களங்கள் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு ஏற்படும் அடக்கு முறைகளுக்கு எதிரான சர்வதேச மாநாடு இன்று கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்ற போதே அவர் …
Read More »கசிப்புடன் மூவர் கைது
வடமராட்சிப் பகுதியின் இருவேறு இடங்களில் வைத்து மூவர் கசிப்புடன் நேற்று அதிகாலை கைதுசெய்யப்பட்டனர். துன்னாலையில் வைத்து 38,48 வயதுடைய இருவர் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்டவர்களின் உடமையிலிருந்து ஒன்றரை லீற்றர் கசிப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதே வேளை நெல்லியடி நகர்ப்பகுதியில் வைத்து 600 மில்லிலீற்றர் கசிப்புடன் இன்னுமொருவர் கைது செய்யப்பட்டார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே நெல்லியடிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடிப் …
Read More »பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு தாமதம் – தேசிய சமாதானப் பேரவை குற்றச்சாட்டு!
கூட்டு எதிரணி வலுவான நிலையில் இருப்பதால் பொறுப்புக்கூறல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு தாமதித்து வருகின்றது என்று தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போதைய அரசு நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டை வாக்குறுதியளித்தபடி முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த செயற்பாடுகள் தாமதம் அடைந்தாலும் முன்னெடுக்கப்படும் என்ற நம்பிக்கை வலுவாகவே உள்ளது. நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாடு தொடர்பாக, புரிந்து கொண்டுள்ள …
Read More »சுயேட்சையாக களமிறங்குகிறார் கருணா!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எந்த பெரும் கட்சிகளுடனும் இணையாது சுயேட்சையாக போட்டியிடப்போவதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கருணா அணி போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி இன்னமும் பதிவு செய்யப்படாமையால், இம்முறை தேர்தலைச் சுயேட்சையாகக் களமிறங்கியே சந்திக்கவுள்ளோம். எந்தவொரு பெருங் கட்சிகளுடனும் சேர்ந்து செயற்படும் முடிவை நாங்கள் …
Read More »