கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் கோயிலின் பின்புற வீதியில் உள்ள புத்தர் சிலையை அகற்றுமாறு பலராலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றபோதும் இன்றுவரை அகற்றப்படவில்லை என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது. பதிலாக இரணைமடுக் குளத்துக்கு அருகிலிருந்த சிலையையே அகற்றியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இரணைமடுக் குளத்தின் அருகில் இருந்த சிறிய இராணுவமுகாம் அகற்றப்பட்ட பின்னர் குளத்தின் அருகில் இருந்த புத்தர் சிலையும் அகற்றப்பட்டுள்ளது. இரணைமடுக் குளத்தின் பொறியியளாலர்கள் அலுவலகம் உள்ள கட்டடத்தில் போரின் பின்னர் இராணுவத்தினர் …
Read More »யாழில் டிப்பர் மோதி குடும்ப பெண் பலி.
யாழ்ப்பாணம் மீசாலைப்பகுதியில் இன்று புதன்கிழமை மாலை 4:00மணியளவில் மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், கணவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது. சாவகச்சேரியில் இருந்து கொடிகாமம் நோக்கி வயோதிப தம்பதிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற சமயம் வீதியின் ஓரத்தில் நின்ற காரின் சாரதி கார் கதவினை திடீரென திறந்த போது …
Read More »நீண்டகாலம் சீரமைக்கப்படாத மின்னங்கட்டுப்பாலம்!
மன்னார் மாந்தை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கள்ளியடிக் கிராமத்துக்குச் செல்லுகின்ற மின்னங்கட்டுப்பாலம் நீண்டகாலமாக சீரமைக்கப்படாது இருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறித்த பாலம் சீரமைக்கப்படாது காணப்படுவதால் அதனூடாகப் பயணிக்கும்போது சிரமத்துக்குள்ளாகும் நிலையில், தற்போது மழைநீரும் தேங்கி நிற்பதால் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்கின்றோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். மண்டக்கல்லாறு, அருவியாறுப் பாலங்கள் தொடர்ச்சியாக சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் மின்னங்கட்டுப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் இதுவரை இடம்பெறவில்லை எனவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே …
Read More »ரெலோவும் தனித்துக் களமிறங்க முடிவு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதில்லை என்று ரெலோ கட்சியும் தீர்மானித்துள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு ரெலோவின் தலைமைத்துவக் கூட்டம் ஆரம்பமானது என்றும் அதில் சற்றுமுன்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் ரெலோக் கட்சியின் 16 முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Read More »வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு இன்று
வடக்கு மாகாண சபையின் 111 ஆவது அமர்வு தற்போது ஆரம்பமாகி நடைபெறுகிறது. யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண அலுவலக கட்டிடத்தில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்று வருகிறது.
Read More »எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனு!
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயம் மற்றும் அவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பாக வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவித்தலுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் 2ஆம் திகதி அமைச்சர் பைசர் முஸ்தபாவால் வெளியிட்டப்பட்ட அரசிதழை இல்லாது செய்ய வேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்பகமுவ பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் விதானகமகே நந்தராஜா மனுவைத் தாக்கல் …
Read More »பிறருக்கு உதவ வேண்டுமென்று நினைப்பவர்களிடம் வசதி இல்லை
‘‘உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களிடம் வசதி இருப்பதில்லை. வசதி இருப்பவர்கள் உதவி செய்வதில்லை. இவ்வாறான சமூகத்திலேயே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.’’ இவ்வாறு வடக்கு மாகாண மக ளிர் விவகார அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன் தெரிவித்தார். பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட விழிப்புணர்வு தின நிகழ்வு யாழ்ப்பாண நகர விடுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாண …
Read More »வயாவிளான் பகுதியில் வெடிபொருள்கள் தொடர்பில் எச்சரிக்கைப் பதாகைகள்
இராணுவத்தால் அண்மையில் விடுவிக்கப் பட்ட பகுதியான வலி. வடக்கு வயாவிளான் பகுதிக்குச் செல்லும் மக்கள் வெடிபொருள்களில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு அங்கு ஆங்காங்கே எச்சரிக்கைப் பதாகைகள் தொங்க விடப்பட்டுள்ளன. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 27 வருடங்களாக இருந்த வயாவிளான் பகுதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்களிடம் மீண்டும் கையளிக்கப்பட்டது. அங்கு ‘மிதிவெடி, வெடிபொருள்களில் இருந்து எமது மக்களைப் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளில் எச்சரிக்கைப் பதாகைகள் பல தொங்க விடப்பட்டுள்ளன. …
Read More »பிரபாகரனின் காலில் விழாத நான் யாரிடமும் மண்டியிடேன்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு முன்பாக முழங்காலிடாத தாம், ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் முன்னிலையிலும் முழங்காவிட மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்திருந்த முதலாவது அரசியல் மக்கள் கூட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை பதுளை வின்சன் டயஸ் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். வலுக்கட்டாயமான மற்றும் போதையுடனான அரசியலை செய்ய …
Read More »குமரன் பத்மநாதன் குற்றமற்றவர்
கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வெளிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கே.பி.யை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்தாணை கட்டளை பிறப்பிக்கக் கோரி விஜித ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுமீது …
Read More »