ரயில்வே சாரதிகளுக்கான உதவியாளர்களை சேர்த்துக்கொள்ளும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை வேலைநிறுத்தம் தொடரும் என ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ரயில்வே சாரதிகள் சங்கம் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தத்தில் இன்று நள்ளிரவு முதல் ரயில்வே நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுபாட்டாளர்களும் …
Read More »யானைத் தந்தங்களுடன் இருவர் கைது
யானைத் தந்தங்களை அனுமதியின்றி வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர்களைக் கைது செய்த நிக்கவரெட்டிய புலனாய்வுப் பொலிஸார், அவர்களிடமிருந்து யானைத் தந்தங்களின் ஏழு பாகங்களைக் கைப்பற்றினர். மீகலேவ மற்றும் கிரிபாவ பகுதிகளில் கைது செய்யப்பட்ட இவ்விருவரும் கல்கமுவை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Read More »முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி
சிவில் பாதுகாப்பு பிரிவி னரால் வன்னிப் பிரதே சத்தில் இயக்கப்படும் முன் பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் கட்டாய இராணுவப் பயிற்சியைப் பெற்றுக்கொள்ளுமாறு நிர்பந்திக்கப்படு கின்றனர். அவர்கள் தமது பணியிலிருந்து இதன் காரணமாக விலகுகின்றனர். இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஆர்னோல்ட் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில், முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட் டது. பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் உரையாற்றிய …
Read More »மகாதேவா சிறுவர் இல்ல குழப்ப நிலையை
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மகாதேவா சிறுவர் இல்லத்தில் தற்போது ஏற்பட்டுள்ள திடீர் குழப்ப நிலை தொடர்பில் ஆராய்ந்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தினார். வடக்கு மாகாண சபையின் 111ஆவது அமர்வு நேற்றைய தினம் கைதடியில் இடம்பெற்றது. இந்த அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பி னர் ஜெயசேகரம் மகாதேவா சிறுவர் இல்லத்தில் உள்ள திடீர் குழப்பநிலை தொடர்பில் மாகாண …
Read More »தமிழ் மக்களின் காணியில் சிங்கள மக்களுக்கு அபிவிருத்தி வேலைகள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணியில் வசிக்கின்ற சிங்கள மக்களுக்கு ஆயிரம் மில்லியன் ரூபா யில் 6 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கு நீரை வழங்கும் அபிவிருத்தித் திட்ட வேலைகள் இடம்பெற்று வருகின்றன என மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றஞ் சாட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையின் 111ஆவது அமர்வு நேற்றையதினம் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்வில் வடக்கு மாகாண …
Read More »பியருக்குச் சண்டை- குடும்பத்தலைவர் கொலை!
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராற்றின் போது ஒருவர், பியர் மதுபான போத்தலால் குத்தப்பட்டு உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நாவலப்பிட்டி மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று முற்பகல் இடம்பெற்றது. உயிரிழந்தவரின் சடலம் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »முல்லைத்தீவு இரட்டைவாய்க்காலில் வெடிபொருள்கள் வெடிப்பு!!
முல்லைத்தீவு, இரட்டைவாய்க்காலில் இன்று மாலை வெடிபொருள்கள் வெடித்ததால் மக்கள் மத்தியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இனந்தெரியாதவர்களால் மூட்டப்பட்ட தீயால் போரில் கைவிடப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்தன என்று கூறப்படுகின்றது. புதுமாத்தளன், ஆனந்தபுரம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் பிரதேசங்களில் இறுதிப்போரில் கைவிடப்பட்ட ஆயுதங்கள் இன்னமும் மீட்கப்படாது காணப்படுகின்றன என்று மக்கள் சுட்டிக்காட்டினர்.
Read More »இலங்கையின் இயற்கை அழிவிற்கு காரணம் இதுவா.?
இலங்கையின் அண்மைக்கால அழிவுகளுக்கு எமது நாட்டின் காபன் துகள்கள் அதிகரித்த தரம் குறைந்த எரிபொருட்களே காரணமாகும். நிலக்கரி, மசகு எண்ணெய் என்பவற்றின் பாவனையே சூழலை பாதித்துள்ளதாக பாரிய நகர் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், உலகம் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகின்றது. சூழலியல் பிரச்சினை காரணமாக உலகில் பல்வேறு நாடுகளில் …
Read More »காற்றின் வேகம் அதிகரிக்கும்!
தெற்கு அந்தமான் தீவுகளில், இலங்கையிலிருந்து 900 கிலோ மீற்றர் தொலைவில் குறைந்த தாழமுக்கம் நேற்று மாலை நிலைகொண்டிருந்தது. இந்தக் குறைந்த தாழமுக்கம் காரணமாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் காற்றின் வேகம் நேற்றைய தினத்தை விட அதிகமாக இருக்கும். இவ்வாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பிமேரலால் தெரிவித்தார். தெற்கு அந்தமான் தீவுகளில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. நேற்றுமுன்தினம் …
Read More »குளத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!
முல்லைத்தீவு மாங்குளம், மதகு வைத்த குளத்திலிருந்து ஆண் ஒருவர் சடலமாக நேற்று நண்பகல் மீட்கப்பட்டார். அதே இடத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான காளியண்ணன் சூரியகுமார் (வயது – 39)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். சூரியகுமாரை நீண்ட நேரமாக் காணவில்லை என அவரது உறவினர்கள் தேடினர். வீட்டின் அருகில் உள்ள மதகு வைத்த குளக் கரையோரமாக அவரின் துவிச்சக்கர வண்டியும், அவர் அணிந்திருந்த பாதணிகளும் காணப்பட்டன. இதை அடுத்து குளத்தினுள் …
Read More »