உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பிலான முதலாவது தேர்தல் முறைப்பாடு பொலிஸாருக்கு நேற்றுப் பதிவாகியுள்ளது. ஆரச்சிகட்டுவ பொலிஸ் பிரிவில் இந்த முறைப்பாடு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார். பெயர் பதாகை ஒன்றுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பிலேயே அந்த முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும், சம்பவம் தொடர்பில் ஆரச்சிகட்டுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
Read More »மன்னாரில் போட்டியிட சிறிலங்கா பொதுஜன பெரமுன இன்று கட்டுப்பணத்தை செலுத்தியது
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன’ கட்சி இன்று மாலை 3 மணியளவில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. ‘சிறிலங்கா பொதுஜன பெரமுன’ கட்சியின் வடமாகாணத்திற்கான அமைப்பாளரும், வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.ரஞ்சித் சமரகோண் தலைமையில் மன்னார் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் தர்மபால, மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.டிலான், …
Read More »தொண்டமான் மகனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு உத்தரவு.!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் புதல்வாரன ஜீவன் தொண்டமானை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு ஹட்டன் நீதவான் நீதிபதி எஸ்.சரவணராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார். தாக்குதல் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவித்து மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம். ரமேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் இன்று காலை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக சென்ற வேளையில் அவர்களை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். …
Read More »மணல் கடத்தல்
போலியான அனுமதிப் பத்திரத்தைத் தயாரித்து டிப்பர் வாகத்தில் மணல் கடத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறிய லில் வைகுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்று உத்தரவிட் டது. முல்லைத்தீவு, புதுக் குடியிருப்புப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மணல் எற்றிச்சென்ற டிப்பர் வாகனங்கள் மறித்து சோதனையிடப் பட்டன. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட் டங்களின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிக்கன்ன வின் உடனடி முறிய டிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி …
Read More »க.பொ.த. சாதாரண தர பரீட்சை நாளைமறு நாள் ஆரம்பம்
கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. 12 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 8.30 மணியளவில் பரீட்சைகள் ஆரம்பமாகும். எனினும் பரீட்சார்த்திகள் 8 மணியளவில் பரீட்சை நிலையங்களுக்கு சமுகமளிக்க வேண்டும். பரீட்சைக்கு சமுகமளிக்கும்போது பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது அங்கீகரிக்கப்பட்ட அடையாள …
Read More »பெற்றோருக்கு முழு அறிவு வேண்டும்!
மாணவர்கள் காப்பீட்டுத்திட்டம் தொடர்பாக பெற்றோர்களும் பூரணமாக அறிந்து வைத்திருக்கவேண்டும். காப்புறுதி பெறுவதில் கடப்பாடுகள் இருக்கின்றன. எனவே பெற்றோர் அதைப்பற்றிய விளக்கத்துடன் இருந்தாலே உரிய நன்மையை இலகுவாகப் பெற்றுக்கொள்ளலாம். வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இலவச காப்பீட்டுத்திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வலய கல்விப்பிரதிநிதியும் தமிழ்பாட ஆசிரிய ஆலோசகருமான நிறைமதி தெரிவித்தார். அவர் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது: மாணவ சமூகத்தை முன்னேற்று வதன் …
Read More »கழிப்பறை வசதி கொண்ட பிரதேசம் ஆறு ஆண்டுகளாகப் பூட்டிய நிலையில்!
கிளிநொச்சியில் 2010ஆம் ஆண்டில் கரைச்சிப் பிரதேச சபையினால் சந்தை அமைக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட 5 கழிப்பறை வசதிகள் கொண்ட பிரதேசம் 6 ஆண்டுகளாகப் பூட்டிய நிலையில் காணப்படுகின்றது எனவும் இதனால் கழிப்பறைகளும் பாழடைகின்றன எனவும் சுட்டிக்காட்டப்படு கின்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் போருக்குப் பின்னர் மீளக்குடியமர்ந்த காலத்தில் மக்கள் போக்குவரத்து இடையூறு காரணமாக வாழ்விடங்களுக்கு அண்மையில் தமக்கான அங்காடிகளை அமைக்க முற்பட்டவேளையில் கரைச்சிப் பிரதேச எல்லைப் பரப்புக்குள் ஏ- 9 வீதியின் …
Read More »வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் விமானப்படை வீரர் படுகாயம்
வவுனியாவில் இன்று மாலை கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் வன்னி விமானப்படைத்தளத்தில் பணியாற்றும் விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று மாலை 4 மணியளவில் வன்னி விமானப்படை தளத்திற்கு அருகில் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்த விமானப்படை வீரரை நுவரெலியாவிலிருந்து வந்த மோட்டார் கார் மேதியதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த வன்னி விமானப்படை வீரர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …
Read More »கூட்டமைப்பில் சமரசம்
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடகிழக்கில் தனித்துக் களமிறங்க தீர்மானித்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் காணப்பட்ட ஆசனப் பகிர்வு தொடர்பான முரண்பாடுகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றிலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டது.
Read More »மகிந்தவைப் பாதுகாப்பதில் ஐ.தே.கவுக்கு லாபம் உண்டு!
மகிந்தவைப் பாதுகாப்பதில் எமக்கு இலாபம் உள்ளது. அவரது பாதுகாப்புக்கு எந்தக் குந்தகம் ஏற்படவும் நாம் அனுமதியளிக்க மாட்டோம். இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், கூட்டு எதிரணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்த்தன வின் கோரிக்கைகுப் பதிலளிக்கையிலேயே ரணில் இவ்வாறு தெரிவித்தார். ‘‘உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவிருக்கும் சூழ்நிலையில் பெருந்தொகையான மக்கள் கலந்துகொள்ளும் பரப்புரைக் கூட்டங்களில் மகிந்த ராஜபக்ச பங்கெடுப்பார். அவருடைய பாதுகாப்புக்கு …
Read More »