புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவுக்கு அமைவாக, தீர்ப்பாயத்தால் நடத்தப்பட்ட மூல வழக்கேடுகள் மற்றும் அதன் பிரதிகள் உயர் நீதிமன்றில் நேற்றுக் கையளிக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் திருமதி மீரா வடிவேற்கரசன் மற்றும் உத்தியோகத்தர்கள் நேரில் சென்று வழக்கு ஆவணங்களை உயர் நீதிமன்றப் பிரதிப் பதிவாளர் சட்டத்தரணி கிரிஷானி டி கோத்தகொடயிடம் நேற்றுக் கையளித்தனர். புங்குடுதீவு மாணவி …
Read More »வாழைத்தோட்டத்தில் வாழைக்குலைகள் திருட்டு!
நீர்வேலி தெற்குப் பகுதியில் உள்ள வாழைத்தோட்டம் ஒன்றில் 25க்கும் மேற்பட்ட வாழைக்குலைகள் திருடப்பட்டுள் ளன. இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. வாகனத்தில் வந்த திருடர்கள் குறித்த தோட்டத்துக்குள் நுழைந்து அங்கிருந்த 25க்கும் மேற்பட்ட கதலி வாழைக்குலைகளை களவாடிச் சென்றுள்ளனர். களவாடப்பட்ட வாழைக்குலைகளின் பெறுமதி 30ஆயிரம் ரூபாவுக்கு மேல் என செய்கையாளர்கள் தெரிவித்தனர். இந்தத் தோட்டத்தில் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னரும் திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியிருந்தனர். விவசாயிகளால் பயிரிடப்படும் விளை …
Read More »கூட்டமைப்பின் வெற்றியை யாராலும் அசைக்க முடியாது
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு – கிழக்கில் தரமான – பொருத்தமான வேட்பாளர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறக்கும். கூட்டமைப்பின் வெற்றியை எவராலும் அசைக்க முடியாது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். “கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் தற்போது வேட்பாளர் தெரிவில் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்கள் தெரிவில் இளையோருக்கும், பெண்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் முஸ்லிம்கள் வேட்பாளர்கள் …
Read More »விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு கடூழிய சிறை
கொலை குற்றத்தை ஒப்புக்கொண்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் 7 பேருக்கு தலா 56 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இன்று இந்த தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்தது. இந்த குற்றவாளிகள் மன்னார், வவுனியா, சாவகச்சேரி மற்றும் புத்தளம் பிரதேசங்களை சேர்ந்தவா்கள் என தெரிவிக்கப்பட்டது. எட்டு குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். தேடுதல் ஒன்றுக்காக மருத்துவர் உட்பட 7 …
Read More »பாலியல் ரீதியில் தவறுகள் செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்கம்!
பாலியல் தவறு செய்யும் ஆசிரியர்களுக்கு ஆண்மை நீக்க செய்ய வேண்டும் என்று சபையில் நேற்றுக் கொந்தளித்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இத்தகைய ஆசிரியர்களுக்கு உடனடியாகவே சாவுத் தண்டனை வழங்கப்பட்டுவிடும் என்று சக உறுப்பினர் புவனேஸ்வரனும் அதனை ஆமோதித்தார். வடக்கு மாகாண சபையின் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதம் நேற்று இடம்பெற்றபோது, மாணவ, மாணவிகளைக் குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்துவது குறித்துப் …
Read More »அதிக விலைக்கு தேங்காய் விற்ற 28 பேருக்கு சட்ட நடவடிக்கை
மத்திய மாகாணத்தில் நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு தேங்காய் விற்பனை யில் ஈடுபட்ட 28 வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக 9, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே நிர்ணய விலையை விடக் கூடுதல் விலையில் தேங்காய் விற்பனை செய்த வியாபாரிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார சபையின் …
Read More »டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினது விளக்கமறியல் நீடிப்பு.!
11 இளைஞர்களின் கடத்தல் மற்றும் காணாமற்போதலுடன் தொடர்புபட்டாரென்ற சந்தேகத்தின்பேரில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி.கே.பி தசநாயக்க உள்ளிட்ட ஐவரினதும் விளக்கமறியல் எதிர் வரும் 22ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு முதன்மை நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2008 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதியில் 11 இளைஞர்கள் காணாமல்போன சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட சி.ஐ.டி விசாரணைகளின்போது வெலிசரவில் அமைந்துள்ள கடற்படைத் தளத்தில் வைத்து முன்னாள் …
Read More »மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து.!
புகையிரத சேவை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் நீடித்தால் புகையிரத பருவகால சீட்டுக்களை வைத்திருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு தனியார் பேருந்துகளில் இலவச போக்குவரத்து சேவையை வழங்க தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணி பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் இடம்பெறுமானால் புகையிரத பருவகால சீட்டுக்களை வைத்திருக்கும் மாணவர்களுக்கு தனியார் பேருந்துகளில் இலவசமாகச் செல்ல சந்தர்ப்பம் அளிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் …
Read More »மாணவர்களுக்கு அமைச்சர் வாழ்த்து!
ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அனைவரும் சித்தியடைந்து எதிர்காலத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வாழ்த்தியுள்ளார். ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகவுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது: இம்முறை 5ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங் களில் 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 விண்ணப்பதாரி கள் தோற்றவுள்ளனர். பரீட்சை சட்டதிட்டங்க ளுக்கு உட்பட்டு அனைத்து …
Read More »யாழ்ப்பாணத்தில் 2ஆவது சுயேச்சை களத்தில்!
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு இரண்டாவது சுயேச்சைக் குழு நேற்றுக் கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தி வருகின்றன. யாழ்ப்பாணத்தில், சங்கானை பிரதேச சபையில் போட்டியிடுவதற்கு சுயேச்சைக்குழு கட்டுப் பணம் செலுத்தியிருந்தது. இந்த நிலையில் வல்வெட்டித்துறை நகர சபையில் போட்டியிடுவதற்கு சுயேச்சைக் குழு நேற்றுக் கட்டுப் பணம் செலுத்தியுள்ளது. மேலும், சாவகச்சேரி நகர சபைத் …
Read More »