யாழ்ப்பாணம் நாகவிகாரையின் விகாராதிபதியின் பூதவுடலை யாழ்ப்பாணம் முற்றவெளியில் தகனம் செய்யத் தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொது இடத்தில் பூதவுடலைத் தகனம் செய்வது பொதுத் தொல்லை என மனு தாரரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். அவரின் விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் பொலிஸார் தேரரின் பூதவுடலை முற்றவெளியில் தகனம் செய்ய அனுமதி கோரினர். இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்த நீதிவான், தேர்ரின் பூதவடலை தகனம் …
Read More »2018 உள்ளூராட்சி சபை தேர்தல் : உங்கள் ஆதரவு யாருக்கு?
2018 உள்ளூராட்சி சபை தேர்தல் : உங்கள் ஆதரவு யாருக்கு? கண்டிப்பா உங்களோட வாக்கை பதிவு பண்ணுங்க..!! [poll id=”6″]
Read More »அம்புலன்ஸில் சென்று பரீட்சை எழுதிய – மாணவர்களுக்குப் பாராட்டு
தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இரு மாணவர்கள் நேற்றுமுன்தினம் நோயாளர் காவுவண்டியில் சென்று பரீட்சை எழுதினர். மருத்துவ நிபுணர் தனது மேற்பார்வையில் மாணவர்கள் இருவரையும் பரீட்சை நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். தாதியரும் உதவிக்குச் சென்றனர். ஒருவருக்கு டெங்குக் காய்ச்சல், மற்றையவர் பாம்புக்கடிக்கு இலக்கானவர். இவர்கள் குப்பிளான் மற்றும் வசாவிளான் பகுதியைச் சேர்ந்தவர்கள். ஜி.சி.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுகிறார்கள். பரீட்சை இடம்பெறும் காலத்தில் டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் ஒருவர் …
Read More »தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுவட்டுக்கள் மீட்பு
கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதி யில் விடுதலைப்புலிகளின் முகாம் இருந்த இடத்தில் சில இறுவட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன என இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அவை நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டன. அவற்றில், தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது வீரத்தைப் பிரதிபலிக்கக் கூடிய காணொளிகள் காணப்படுகின்றன என இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதி, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நிலையில், அங்கு வீடு கட்டுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போதே, …
Read More »ஒலுமடுவில் மீளச் செயற்படும் ஆயுள்வேத மருத்துவமனை!
முல்லைத்தீவில் ஒலுமடு உப அலுவலகம் மற்றும் சித்த ஆயுள்வேத மருத்துவமனை என்பன மீள இயங்க ஆரம்பித்துள்ளன. ஒலுமடுப் பகுதியில் உள்ள புதுக்குடியிருப்புப் பிரதேச சபையின் உப அலுவலகம் மற்றும் சித்த ஆயுள்வேத மருத்துவமனை, நூலகம் என்பன கடந்த காலங்களில் சிறப்பாகச் செயற்பட்ட போதும், கடந்த 2009ஆம் ஆண்டு போர் காரணமாக சேதமடைந்தன. மீள்குடியமர்வின் பின்னர் குறித்த பிரதேசம் இராணுவ வசமானது. குறித்த பகுதியை விடுவிக்குமாறு பல்வேறு தரப்புக்களும் விடுத்த கோரிக்கைக்கு …
Read More »தமிழீழ தேசிய அடையாள அட்டை மீட்பு!
விடுதலைப் புலிகளினால் வழங்கப்பட்ட தமிழீழ தேசிய அடையாள அட்டை ஒன்று முள்ளிவாய்க்கால் பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, சாளம்பன்- பாண்டியன்குளத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சுப்பையா வில்வராசா என்பவரின் அடையாள அட்டையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு இறுதிப் போரில், பாதிக்கப்பட்ட பொதுமக்களின் உடைமைகள் சேதங்களுக்குள்ளான நிலையில் இன்றும் முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆங்காங்கே அவதானிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், குறித்த நபரின் அடையாள அட்டை சேதமாக்கப்பட்ட நிலையில் நேற்றைய …
Read More »விபத்து 2 பேர் உயிரிழப்பு
கிளிநொச்சியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் கிளிநொச்சி ஏ9 வீதியில் தட்டுவன் கொட்டிப் பகுதியில் இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த சிங்கராசா செந்தில்நாதன் மற்றும் கரவெட்டி கரணவாயைச் சேர்ந்த நல்லததம்பி துஸ்யந்தன் (வயது –36) ஆகியவர்களே உயிரிழந்தனர். மேலும் பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிரெதிரே …
Read More »பழமைவாய்ந்த நாகலிங்கச்சிலை மீட்பு.!
கலஹா புபுரஸ்ஸ டெல்டா தோட்ட பச்சைக்காட்டுப் பிரிவில் கற்குகை ஒன்றினுள்ளிருந்து பழமைவாய்ந்த நாகலிங்கச்சிலை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அருள் வாக்குக்கூறும் நபரொருவரின் தகவலின் அடிப்படையிலேயே குறித்த சிலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சிலையானது தோட்டத்தில் அமைந்துள்ள ஆறு ஒன்றுக்கு அருகில் இருந்த கற்குகை ஒன்றுக்குள்ளிருந்தே மீட்கப்பட்டுள்ளது. குறித்த தோட்டத்தில் மார்கழி பஜனையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் கரகம் பாலிக்கும் நிக ழ்வு இடம் பெற்றுள்ளது. இதன் போது பஜனை …
Read More »இரணைமடுக் குளத்தின் துருசுக்கதவு சீரமைப்பு!!
இரணைமடுக் குளத்தின் வாய்க்காலில் வீழ்ந்த நீர்ப்பாசன துருசுக் கதவு சீரமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளரின் முயற்சியினால் கதவு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது – என விவசாயிகள் சம்மேளனத்தினர் தெரிவித்தனர். குளத்தின் இடதுகரை வாய்க்காலின் துருசுக் கதவுகள் இரண்டில் ஓர் கதவானது கடந்த 20 தினங்களுக்கு முன்னர் கழன்று வாய்க்காலுக்குள் வீழ்ந்தது. அவ்வாறு வீழ்ந்த கதவை மீட்டு சீர்செய்வதற்கு 15 நாள்களாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஒற்றைக் கதவின் மூலமே தண்ணீர் …
Read More »நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது
நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் 163 ஆவது நாடாக நிலக்கண்ணி வெடித்தடை சர்வதேச உடன்படிக்கை சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. நிலக் கண்ணிவெடித் தடை சர்வதேச உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதைத் தொடர்ந்து இவ்வுடன்படிக்கையில் இன்னும் சேராத நாடுகள் இலங்கையை முன்னுதாரணமாகக் கொண்டு அதனைப் பின்பற்றவேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் உஸ் தெரிவித்துள்ளார்.
Read More »