Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 180)

இலங்கை செய்திகள்

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்குக !

நல்லாட்சி அரசாங்கம் தேர்தல் சட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு அதனை உறுதிசெய்யவுள்ளது. அவ்விலக்கை அடைந்துகொள்வதற்காக அனைவரும் அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்தார். தேர்தல் காலத்தில் ஊடகங்கள் பின்பற்றிச் செயற்படுவதற்கென தீர்மானிக்கப்பட்டுள்ள ஊடக செல்நெறி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு பாராளுமன்றத்தின் அனுமதியைக்கோரும் ஆவணத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒப்பமிடும் நிகழ்வு அலரிமாளிகையில் நடைபெற்றது. அதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read More »

அதற்கு நான் பொறுப்பாளியல்ல மஹிந்த ?

மகிந்த

உள்ளுராட்சிமன்ற தேர்தல் பிரசாரங்களின் போது எனது புகைப்படத்துடன் தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளியல்ல என தெரிவித்துள்ள  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்குமாறு வலியுறுத்தி சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Read More »

பிணை முறி விவகாரம் தொடர்பில் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 3ஆம் திகதி விசேட அறிவிப்பு செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்திவந்த ஜனாதிபதி ஆணைக்குழு, அதன் அறிக்கையை நேற்று ஜனாதிபதியிடம் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

மஹிந்தவை பிரதமராக்கும் பயணம் ஆரம்பம்.!

மகிந்த

சர்ச்­சைக்­கு­ரிய மத்­திய வங்கி பிணை­முறி விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சியே பொறுப்­புக்­கூற வேண்டும். மத்­திய வங்கி பிணை­முறி ஊழல்­வா­தி களுக்கு சட்­டத்தின் மூல­மாக அதி­யுச்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்று பொது எதி­ர­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்த்­தன வலியுறுத்தினார். 2020 இல் மஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக்கும் பயணம் இந்த ஆண்டில் இருந்து ஆரம்­பிக்­கின்­றது எனவும் அவர் குறிப்­பிட்டார். சர்ச்­சைக்­கு­ரிய பிணை­முறி விவ­காரம் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் …

Read More »

துணிச்சல் மிகுந்த ஆண்டாக அமையட்டும்.!

மலரும் புத்­தாண்டு சிறந்த நோக்­கங்­களும் அடையப் பெறும், துணிச்சல் மிகுந்த ஆண்­டாக அமை­ய­வேண்­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். புத்­தாண்­டினை முன்­னிட்டு அவர்­வி­டுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அச்­செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, நீண்ட கால மக்கள் எதிர்­பார்ப்­புக்­களை வெற்றி கொண்டு நாம் பெற்றுக் கொண்ட சமூக, அர­சியல் சுதந்­தி­ரத்தை மிகவும் அர்த்­த­முள்­ள­தாக மாற்­றி­ய­மைக்கும் முக்­கிய பணியை மீண்டும் மீண்டும் நினை­வு­ப­டுத்­திய நிலை­யி­லேயே 2018 ஆம் ஆண்டு பிறக்­கி­றது. நல்­லாட்சி …

Read More »

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி !

ஜனாதிபதி

கடந்த காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும் எம்மை அறிவாலும் அனுபவத்தாலும் பரிபூரணப்படுத்தும் அதேவேளை, மலரும் ஒவ்வொரு நிமிடமும் எமது ஆற்றல்களை பரீட்சித்துப் பார்த்தவண்ணமே இருக்கிறது. இதன்போது நாம் வெளிப்படுத்தும் உன்னத அர்ப்பணிப்பும் உறுதிப்பாடுமே எம்மை வெற்றியை நோக்கி இட்டுச் செல்கின்றன. நிறைவேறும் வருடத்திற்கு விடைகொடுப்பதும் மலரும் புத்தாண்டை எதிர்பார்ப்புக்களுடன் வரவேற்பதும் இந்த அடிப்படையிலேயே நிகழ்கின்றது. அதற்கமைய, கடந்த வருடத்தை ஒரு நாடு என்றவகையில், எமக்கு எண்ணற்ற சாதகமான …

Read More »

கஞ்சா கடத்திய இந்தியர் உட்பட நால்வர் கைது!!!

காக்கைத்தீவு வடக்கில் சட்டவிரோதமாக கேரள கஞ்சாவினை கடத்திய இந்தியர் உட்பட நால்வரை நேற்று இரவு கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 39 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இவ் ஆண்டில் மட்டும் கடற்படையினரால் 949 கிலோ கஞ்சா கைப்பற்றப்ட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

Read More »

தமிழக மீனவர்கள் நாடு திரும்புகின்றனர்

ஊர்காவல்துறை, பருத்தித்துறை மற்றும் தலைமன்னார் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட அறுபத்தொன்பது மீனவர்கள் இன்று (31) நாடு திரும்புகின்றனர். விடுதலை செய்யப்பட்ட இவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். அதன்பின், காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து கடற்படையின் கண்காணிப்புக் கப்பலில் இலங்கையை விட்டுப் புறப்பட்டனர். இவர்கள் அனைவரும் காலை 11.30 மணியளவில் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். அங்கிருந்து அவர்கள் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘அமாயா’ …

Read More »

மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

சிதைக்கப்பட்ட, பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்கான கால எல்லையை மத்திய வங்கி நீட்டித்துள்ளது. பழுதடைந்த அல்லது பழுதாக்கப்பட்ட நாணயத் தாள்களை மாற்றுவதற்காக இன்று வரை, அதாவது டிசம்பர் 31ஆம் திகதி வரை மத்திய வங்கி கால அவகாசம் வழங்கியிருந்தது. எனினும் அந்தக் கால எல்லையை எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை நீட்டித்திருப்பதாக மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. இனியும் அந்தக் கால எல்லை நீட்டிக்கப்பட மாட்டாது என்று தெரியவரும் …

Read More »

இணைய ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரை

மிகவும் பொறுப்புவாய்ந்த, வினைத்திறனான இணைய ஊடகத்துறைக்காக உருவாக்கப்பட்ட ஒழுக்கக்கோவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது இணைய ஊடகவியலாளர் சங்கத்தினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, “இணைய ஊடகத்துறைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒழுக்க நெறிக்கோவை தயாரிப்பு பணியானது மிகவும் முக்கியமானதாகும் என்று தெரிவித்தார். அத்துடன் இது ஊடகத்துறைக்கு மட்டுமன்றி அரசியல் துறை மற்றும் முழு மனித சமூகத்திற்கும் காலத்திற்குத் தேவையானதொரு பணியாகும்.” …

Read More »