போர்க் காலத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் சிலர் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். வவுனியா தபால் நிலையத்துக்கு அருகாமையில் இன்று (13) நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காணாமல் போனோர் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எதுவித நடவடிக்கையையும் எடுக்க முன்வரவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.
Read More »பெண்களும் மதுபானம் வாங்கலாம், விற்கலாம்
இலங்கையில் பெண்கள் மதுபானம் வாங்குவது மற்றும் விற்பதற்கு இருந்த தடை 38 வருடத்திற்கு பின் நீக்கப்பட்டு உள்ளது இலங்கை கடந்த 1979ம் வருட தொடக்கத்தில் திறந்தவெளி சந்தை பொருளாதார நிலையை தனது நாட்டில் கொண்டு வந்தது. அதில் இருந்து பெண்கள் மதுபானம் வாங்குவதற்கும் மற்றும் விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நடைமுறையில் இருந்த நிலையிலும் பல தொழில் நிறுவனங்கள் பெண்களை மதுபானம் பரிமாறும் மற்றும் விற்கும் பணியில் ஈடுபடுத்தியது. …
Read More »கோவிலில் மயங்கிய பூசகர்- உயிரிழந்தார்!!
பூசைக்காக கோவில் மண்டபத்தைக் கழுவிய பூசகர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவம் கொடிகாமம் வெள்ளாம்போக்கட்டியில் நேற்று இடம்பெற்றது. அதே இடத்தைச் சேர்ந்த ப.திருலோகநாதன் (வயது – 61) என்பவரே உயிரிழந்தார். நெஞ்சுவலி என்றுகூறியபடி மயங்கி வீழ்ந்துள்ளார். வாகனம் அங்கு வரவழைக்கப்பட்டு அவர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவர் அதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டமை தெரியவந்தது. சடலம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்ட்டது.
Read More »தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர் கைது!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
Read More »போர்க்குற்றங்கள் இராணுவ அதிகாரியிடம் பிரிட்டன் விசாரணையாம்!
இராணுவ அதிகாரியிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரிட்டன் விசாரணை நடத்தியிருப்பதாக சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொண்ட இராணுவ அதிகாரியிடமே, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எப்போது இந்த விசாரணை நடத்தப்பட்டது, விசாரணைக்குள் ளாக்கப்பட்ட இராணுவ அதிகாரி யார் என்ற விவரங்கள் எதையும் சிங்கள ஊடகம் வெளியிடவில்லை. புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கைக்கு அமையவே பிரிட்டன் இந்த விசாரணையை நடத்தியிருப்பதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
Read More »மருத்துவமனைக்கு அருகில் சிசு மீட்பு
கிளிநொச்சி பொது மருத்துவமனைக்கு அருகில் சிசுவொன்று மீட்கப்பட்டது. மருத்துவமனைக்கு அருகில் இன்று சிசுவைக் கண்ட மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். அதன் பிரகாரம் சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், சிசுவை மீட்டு மருத்துவனையில் ஒப்படைத்துள்ளனர். தற்போது சிசு நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். கைவிடப்பட்ட சிசுவின் தாயை கண்டறியும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
Read More »மயில்வாகனபுரத்தில் முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன
மயில்வாகனபுரம் காட்டுப்பகுதியில் அனுமதியின்றித் தறிக்கப்பட்ட 15 முதிரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தருமபுரம் பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயில்வாகன புரம் காட்டுப்பகுதியில் தொடர்ச்சியாக மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. சம்பவதினம் அங்கு சென்ற பொலிஸார் தறிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட 15 முதிரை மரக்குற்றிகளை கைப்பற்றினர். சந்தேகநபர்கள் எவரும் கைதுசெய்யப்படவில்லை. விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகளை நீதிமன்றில் பாரப்படுத்துவதுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது …
Read More »காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்தார் ஹரி ஆனந்த சங்கரி
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் உ.ஹரி ஆனந்த சங்கரி முல்லைத்தீவு மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும், கேப்பாபுலவில் போராட்டம் நடத்தும் மக்களையும் விடுவிக்கப்பட்ட இடங்களையும் பார்வையிட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன் காணாமல்போனோர்கள் நடத்திவரும் போராட்ட கொட்டகைக்கு நேற்றுக் காலை சென்ற அவர் அங்கு காணமல் போனவர்களின் உறவினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, ‘முந்நூறு நாள்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமற் போனவர்களின் விடயத்தில் இங்குள்ள அரசியல்தலைவர்களையோ அரச …
Read More »யாழ்ப்பாணத்தை மீட்டது நான் தான்!
கிளிநொச்சியையும், முல்லைத்தீவையுமே மகிந்த ராஜபக்ச அரசு விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டது. யாழ்ப்பாணத்தை மீட்டது நான்தான். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். ஈவெயாங்கொட பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: போரை வென்றதாகக் கூறுகின்றார்கள். போரின் மூன்றில் இரண்டு பங்கை யார் முடித்தது. யார் யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து கைப்பற்றியது? எனது அரசு ஆட்சியை பொறுப்பேற்ற ஓராண்டு காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து …
Read More »கொழும்பு அதிவேக உள்ளிட்ட சில வீதிகள் இன்று முதல் மூடப்படும்.!
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியில், களனி பாலம் அருகில், களனி மற்றும் வத்தளை பகுதி நோக்கி வாகனங்கள் வெளியேறுவதற்காக பயன்படுத்தப்படும் வீதிகள் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளது. உத்தேச புதிய களனி பால நிர்மாணப் பணிகளுக்காக இந்த இரு வெளியேறும் பாதைகளும் இவ்வாறு மூடப்படுவதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டது. அதன்படி இன்று முதல், கட்டுநாயக்க அதிவேக பாதை ஊடாக களனி, பேலியகொடை பகுதிகளுக்குள் வருவதற்கு பேலியகொடை வெளியேறும் …
Read More »