தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்குப் பல வழிகளிலும் நாம் முயற்சித்தோம். அரசமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கும் உத்தேசித்திருந்தோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயற்படாததாலேயே அந்த முயற்சிகள் கைகூடவில்லை. இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். அவர் தெரிவித்தாவது-, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டியிலிருந்து நான் இன்னும் பின்வாங்கவில்லை. அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்பதற்காகத் என்னால் விடுக்கப்பட்ட அழைப்புகளை சம்பந்தன் நிராகரித்தே …
Read More »புதுக்குடியிருப்பில் அரச தலைவரின் கட்டவுட் தீக்கிரை!!
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர் அலுவலகம் ஒன்றில் காட்சிப் படுத்தப்பட்டிருந்த அரசதலைவரின் படம் பொறிக்கப்பட்ட விளம்பரப் பதாகை இனந்தெரியாத நபர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சம்பவவம் குறித்து தெரியவருவதாவது: புதுக்குடியிருப்பு பிரதேசசபை தேர்தலில் மல்லிகைத்தீவு, மந்துவில், சிவநகர் மற்றும் ஆனந்தபுரம் போன்ற கிராமங்களை ஒன்றிணைத்த புனிதவளநகர் 6ஆம் வட்டாராம் தேர்தல் தொகுதியில் சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அ.பரமதாஸ் என்பவர் போட்டியிடுகின்றார். இவர் தனது தேர்தல் பரப்புரைக்காக கட்சி அலுவலகம் ஒன்றை …
Read More »அறுவடைசெய்த நெல்லை சாலைகளில் உலரவிடும் மாங்குளம் விவசாயிகள்!!
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் அறுவடை செய்யும் நெல்லை உலர வைப்பதில் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மாங்குளம் பகுதியில் நெல்லை உலரவைக்கும் தளங்கள் இல்லாத காரணத்தால் இவ்வாறு நெல்லை சாலைகளில் கொட்டி உலரவைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலையருகில் நெல்லைக் கொட்டுவதால் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. வாகனச் சாரதிகள் முகம்சுளிக்கின்றனர் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வன்னி மாவட்டத்தில் தற்போது காலபோக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும் விவசாயிகள் …
Read More »3 வயதுக் குழந்தை வெட்டிக் கொலை
கோடாரியால் வெட்டியதில் மூன்று வயது பெண்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்ததுடன், கொலையாளி தானும் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று இன்று காலை யாழ்.வண்ணாா் பண்ணை பகுதியில் இடம்பெற்றது. வண்ணாா் பண்ணை பத்திரகாளி வீதியில் உள்ள குணரத்தினம் என்பவருடைய வீட்டிலேயே மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், கொலையாளியின் தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டில் …
Read More »லசந்த கொலை வழக்கில் அதிர்ச்சித் திருப்பங்கள்!
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்ட 2009 ஜனவரி 9ஆம் திகதிக்கு முதல் நாள், அவரது அலுவலகத்தை மருதானை திரிப்போலி இராணுவ புலனாய்வு முகாமைச் சேர்ந்த இராணுவ புலனாய்வாளர்கள் சிலர் கண்காணித்திருக்கும் அதிர்ச்சித் தகவலை புலனாய்வுப் பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். தாம் இதுவரை முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இது உறுதியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கூறியுள்ளனர். மேலும் கொலை இடம்பெற்ற பின் அதை விசாரித்து வந்த …
Read More »விடுதலை புலிகளின் தங்கத்தை தேடி முள்ளிவாய்க்காலில் தேடுதல் வேட்டை
இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் விடுதலை புலிகளால் புதைக்கபட்டதாக நம்பப்படும் தங்கத்தை தேடி, தேடுதல் நடவடிக்கை ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இராணுவம், பொலிஸ் மற்றும் கடற்படையினரின் பங்குபற்றலுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு நடவடிக்கை நடைபெற்றது. இறுதிவரை இடம்பெற்ற அகழ்வில் எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணி நிறுத்தப்பட்டது.
Read More »கமல்ஹாசனை தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த கட்ட நடவடிக்கை!
கமல்ஹாசன் குடியரசு தினத்தை ஒட்டி தன் தமிழகத்தில் தன் அரசியல் பயணத்தின் சுற்றுப்பயணத்தை தொடங்கவுள்ளார். இதற்கான அறிவிப்புகளை அவர் வெளியிட்டுவிட்டார். தற்போது அரசியல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே ரஜினிகாந்த் புத்தாண்டை ஒட்டி தன் அரசியல் அறிவிப்பை அறிவித்திருந்தார். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கான உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள், கட்சியின் சின்னம், பெயர் என பலவற்றிற்கான வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் அவரின் 2.0 படம் வெளியாகவுள்ளது. …
Read More »ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மனு நிராகரிப்பு
தெஹியத்தகண்டிய பிரதேசசபைக்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நீதியரசர் பிரியசாத் டெப், சிசிர த ஆப்ரூ மற்றும் நலின் பெரேரா ஆகியோர் அடங்கிய Trial at Bar தீர்ப்பாயம் முன்னிலையிலேயே மனு தாக்கல் செய்யப்பட்டது.
Read More »மகிந்தவின் எச்சரிக்கை
உள்ளூராட்சித் தேர்தலில் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி பெரு வெற்றிபெற்றாலும், ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடனோ நாம் இணையமாட்டோம். இவ்வாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கமாட்டோம் எனத் தெரிவித்துள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் எனத் தெரிவித்திருந்தது. இவ்வாறானதொரு நிலையிலேயே, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச …
Read More »நாடுகடந்த அரசு உறுப்பினர் நாட்டுக்குள் நுழையத் தடை!
கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் ஒருவருக்கு இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாடு கடத்தப்படுவதற்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சுரேஸ்நாத் இரத்தினபாலன் (வயது –-48) தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அபுதாபி வழியாக கடந்த வியாழக் கிழமை மாலை 3.45 மணியளவில் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வந்திறங்கினார். குடிவரவு அதிகாரிகளால் அவர்களின் கடவுச்சீட்டுகள் …
Read More »