முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படாமைக்கு, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று அதிரடியாகத் தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. கோத்தபாயவைக் கைதுசெய்யவேண்டாம் என்று தாம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தார் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன. ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பு அரச தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தாவது-: கோத்தபாய …
Read More »சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக கைவிட்ட வர்த்தகர்கள் கௌரவிப்பு-(படம்)
பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை கிராமத்திற்கு உற்பட்ட சுமார் 13 வர்த்தக நிலையங்களில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களின் விற்பனையை தாமாக முன் வந்து கைவிட்டுள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் இன்று(25) வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக வங்காலை பொது சுகாதார பரிசோதகர் வி.ஜெயச்சந்திரன் தெரிவித்தார். -அவர் மேலும் தெரிவிக்கையில்… பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளின் வரிசையில் வங்காலை பிரதேசத்திற்கு உற்பட்ட …
Read More »வாக்களிப்பு நிலையங்களுக்கு முப்படைப் பாதுகாப்புக்கு ஏற்பாடு
உள்ளூராட்சித் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினரையும் பயன்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. பொலிஸ் திணைக்களத் தினருக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவினருக்கும் இடையே கொழும்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. வாக்களிப்பு நிலையத்திலி ருந்து 400 மீற்றர்களுக்கு வெளியே முப்படையினர் பயன்படுத்தப்படுவார்கள். அவர்கள் எந்தக் காரணத்துக்காகவும் வாக்களிப்பு நிலையத்தினுள்ளேயோ, வாக்கு எண்ணும் நிலையத்தின் உள்ளேயோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். வாக்களிப்பு நிலையத்தி லும், வாக்கு எண்ணும் …
Read More »வன்புணர்ந்தவருக்கு ஒத்திவைத்த கடூழியச் சிறை!!
சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்ந்தவருக்கு 2 வருடம் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இழப்பீடாக 40 ஆயிரம் ரூபா செலுத்த வேண்டும் என்றும் நேற்று உத்தரவிடப்பட்டது. கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு சிறுமியைக் கடத்திச் சென்று கனகராயன் குளம் பகுதியில் தடுத்து வைத்திருந்ததோடு 3 தடவைகள் வன்புணர்ந்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது. அதற்கமைய அவருக்கு எதிராக 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கு யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் …
Read More »கூட்டு அரசு தொடருமா?
கூட்டு அரசை நிறுவும் நோக்குடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்து ணர்வு ஒப்பந்தம் நீடிக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆளும் கட்சியிடம் கேள்வி எழுப்பியமையினால் நேற்றுச் சபையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, மகிந்த அணி நாடாளுமன்றக் குழுத் தலைவர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பியதை அடுத்தே சபையில் சர்ச்சையான நிலமை ஏற்பட்டது. …
Read More »இந்தோனேசிய ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இந்தோனேசிய ஜனாதிபதி ஜக்கோ விதோதோ இன்று இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கிணங்க இந்தோனேஷிய ஜனாதிபதி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது இலங்கை மற்றும் இந்தோனேஷியா ஆகிய இரு நாட்டு தலைவர்களுக்கிடையிலான உத்தியோக பூர்வ சந்திப்பு இடம்பெறவுள்ளது. அத்தோடு பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் இந்தோனேஷிய ஜனாதிபதி சந்திக்கவுள்ளார். இச் சந்திப்பின் போது, இந்தோனேஷியா இலங்கைக்கிடையிலான இரு தரப்பு உறவுகள் …
Read More »அரசாங்கத்துக்கு மஹிந்த சவால்.!
நான் ஆட்சியில் இருக்கும் போது பெறப்பட்ட கடன் தொகையை விட இவர்கள் சர்வதேச நாடுகளிடம் அதிக கடன் தொகையை பெற்றுள்ளனர். ஆனால் பெற்ற கடனுக்கேற்ற வேலைத்திட்டம் இல்லை. ஆனால் என்னால் இப்போதும் எனது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்களை பட்டியலிட்டு காட்ட முடியும். ஆட்சியிலுள்ள அரசாங்கத்திற்கு முடியுமா? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். பதிவி ஆசையில் பதவி காலத்தை 6 ஆண்டுகளாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முயற்சித்தார். …
Read More »மண்டைதீவுக் கடலில் மிதந்த பெட்டியில் வெடிபொருள்கள்!!
யாழ்ப்பாணம், மண்டைதீவுக் கடலில் மிதந்து வந்த மரப்பெட்டி ஒன்றிலிருந்து வெடிபொருள்கள் மீட்கப்பட்டன என்று ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். அதில் 4 கண்ணிவெடிகள், 2 மோட்டார் குண்டுகள், 2 சார்ச்சர் என்பன மீட்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது. “கடலில் நேற்று மாலை 5 மணியவில் பச்சை நிற மரப் பெட்டி ஒன்று மிதப்பதை மீனவர்கள் சிலர் அவதானித்துள்ளனர். அது தொடர்பில் மண்டைதீவு பொலிஸ் காவலரணுக்குத் தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் மரப் பெட்டியை மீட்டனர். …
Read More »காணாமல்போன சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஐ.நாவில் குழப்பம்
வடக்கில் போரின் பின்னர் காணாமல்போன சிறுவர்களில் 611பேர் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் ஐ.நாவில் இடம்பெறும் 77ஆவது அமர்வின் சிறுவர் உரிமை மாநாட்டில் இலங்கை அரசு கூறிய புள்ளி விவரம் இதிலிருந்து மாறுபட்டுள்ளது. இதனால் ஐ.நா அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. ஜெனிவாவில் இடம்பெறும் 77ஆவது ஐ.நா கூட்டத்தொடரின் சிறுவர் உரிமை மாநாடு ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் இலங்கை சார்ந்த விடயம் …
Read More »முள்ளியவளையில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்!!
முல்லைத்தீவு, முள்ளியவளையில் நேற்று இரவு நடந்த வாள்வெட்டு மற்றும் தாக்குதலில் இருவா் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இரவு 7 மணியளவில் நடந்துள்ளது. முள்ளியவளை 4 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெயசீலன் ஜனுராஜ் (வயது -20), முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தங்கராசா டியானு (வயது-20) ஆகியோரே காயமடைந்தனர். ஒருவர் வெட்டுக்காயங்களுடனும், மற்றையவர் அடிகாயங்களுடனும் மாவட்ட மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைலப்பில் முடிந்தது என்றும், …
Read More »