மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார் . நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பல்வேறு …
Read More »மாட்டுவண்டியில் சென்று வாக்களித்த மக்கள்
கிளிநொச்சி, புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த சில பொது மக்கள் இன்று மாட்டு வண்டியில் சென்று தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் ஆகின்ற போதும் தங்களின் உள்ளுர் வீதிகள் அனைத்தும் மாட்டு வண்டிகள் மட்டுமே பயணிக்கக் கூடிய நிலையில் இருப்பதாகவும் எனவே தாங்கள் இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அனைவரினதும் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு தாம் மாட்டு வண்டியில் சென்று வாக்குகளை பதிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளனர்.
Read More »இடையூறு விளைவிக்காது வெற்றியை கொண்டாடுங்கள் ; மஹிந்த
வட்டாரங்களில் வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பங்காளிக்கட்சிகள், வேட்பாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வெற்றிக்காக இரவு பகல் பாராது படுபட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தோல்வியடைந்தவர்களுக்கு எந்தவித இடையூறுமில்லாது வெற்றியைக் கொண்டாடுங்கள், அவ்வாறு நடந்துகொள்வது எமது பொறுப்பாகும் ஏனைய கட்சிகள் எமகு இடையூறு செய்தாலும் நாம் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும். அமைதியான முறையில் வெற்றியைக் கொண்டாட வேண்டும். கால்டன் இல்லத்தில் …
Read More »இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!
இலங்கையில் உள்ள 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள், 278 பிரதேசசபைகள் உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. மொத்தம் 8,536 பதவிகளுக்காக 57 ஆயிரத்து 219 பேர் போட்டியிடுகின்றனர். ஒரு கோடியே 57 லட்சத்து 60 ஆயிரத்து 867பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 13 ஆயிரத்து 420 மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. ஒரு லட்சத்துக்கு 73 ஆயிரத்து 383 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Read More »சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, நவீனநகர நிர்மாணத்தை கச்சிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுங்கள்
சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றி, அந்த நகரை நவீன முறையில் நிர்மாணிப்பதற்கு உகந்த சூழலை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார். முசலிப் பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னணியில்போட்டியிடும்வேட்பா ளர்களை ஆதரித்து, சிலாவத்துறையில் நேற்று (05) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்பங்கேற்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே, அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,, முசலிப் பிரதேசத்தில் மீள்குடியேற்றம் இலகுவாக நடந்துவிடவில்லை. …
Read More »சிறிலங்கா சுதந்திர கட்சிக்குப் பேரிடி!!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐ.தே.க பெரும் வெற்றியைப் பெறும் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி 7 வரையான சபைகளிலேயே வெற்றி பெறும் என்றும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பாக, பல்வேறு குழுக்களும், அரசியல் கட்சிகளும், கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை, உள்ளூராட்சித் தேர்தலில் ஐ.தே.கவே வெற்றியீட்டும் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளன. பல …
Read More »30 நாள்களுக்குள் 6,203 பேருக்கு டெங்கு!!
நாட்டில் மீண்டும் டெங்குநோய் தீவிரமாகப் பரவி வருகின்றது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 6 ஆயிரத்து 203 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள் ளது. இடையிடையே பெய்யும் மழை காரணமாகவே டெங்குநோய் வேகமாகப் பரவ ஆரம்பித்துள்ளது என்று சுட்டிக்காட்டப்பட் டுள்ளது. டெங்கு நுளம்பு பெருகாத வகையில் சுற்றாடலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இலங்கைக்கு டெங்கு நோயால் பெரும் அச்சுறுத்தல் …
Read More »அரசியல் கைதிகளின் வழக்கு வவுனியா நீதிமன்றுக்கு மாற்றம்!!
உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கைதிகளின் வழக்குகள் மீள வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது. மதியரசன் சுலக்சன், கணேசன் தர்சன் மற்றும் இராசதுரை திருவருள் ஆகிய மூன்று அரசியல் கைதிகளினதும் வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களின் வழக்குகளை சட்டமாஅதிபர் திணைக்களம் திடீரென அநுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றியமைக்கு எதிராக மேன் முறையீட்டு …
Read More »இளவாலையில் இளம்பெண் மர்மமான முறையில் சாவு
இளவாலை, சேந்தாங்குளத்தில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. இரு பிள்ளைகளின் தாயான அன்ரன் உதயராஜ் டிலக்சினி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது கணவர் ஒரு பிள்ளையை அழைத்துக் கொண்டு உறவினர் வீடு சென்றுள்ளார். உயிரிழந்தவரின் தங்கை மற்றொரு பிள்ளையை அழைத்துக் கொண்டு தேவாலயம் சென்றுள்ளார். தாய் தெல்லிப்பளை மருத்துவமனை சென்றிருந்தார். டிலக்சினி வீட்டில் தனித்திருந்துள்ளார். மு.ப.10 மணியளவில் கணவர் வீடு …
Read More »வடக்கு, கிழக்கு இணைந்த கூட்டாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு – கிழக்கு இணைப்பைக் கைவிட்டுள்ளது. ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்கு இணங்கி விட்டது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணத்துக்குள் கூட்டாட்சிக் (சமஷ்டி) கட்டமைப்புக்குள்ளே அதிகாரப் பகிர்வு ஏற்பாடுகள் செயற்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வவுனியாவில் …
Read More »