யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது
Read More »சிவராத்திரி நாளில் கடவுள் சிலைகள் உடைப்பு
மன்னாரின் மூன்று இடங்களில் இந்துக்களின் கடவுள் சிலைகள் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. 3 சிலைகள் திருடப்பட்டுள் ளன. இந்துக்கள் சிவராத்திரி விரதத்தை நேற்றுக் கடைப்பிடித்த நிலையில் இந்த விசமச் செயல்கள் செய்யப்பட்டன. இந்தச் சம்பவங்கள் நேற்றுமுன்தினம் நடந்துள்ளது. மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் 1988 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய இராணுவத்தால் அமைக்கப்பட்ட ‘லிங்கேஸ்வரர்’ ஆலயத்தில் காணப்பட்ட மூன்று சிலைகள் திருடப்பட்டுள்ளன. மன்னார் – தாழ்வுபாடு பிரதன வீதி, கீரி …
Read More »இன்று மாலை ஜனாதிபதியுடன் பலதரப்பு பேச்சு
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளனர். இதன் பிரகாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மனோகணேசன் உட்பட பலர் இன்று மாலை 6 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று …
Read More »இதுவரை தீர்மானம் இல்லை ?
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி வேறு எந்த கட்சிகளுடனும் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானம் ஒன்றையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மேலும் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை முன்னெடுப்பது தொடர்பில் இன்னும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
Read More »பிரதமர் பதவியா ? ஜனாதிபதியிடமே கேட்கவேண்டும் – கோத்தா
நான் அமெரிக்க பிரஜையென்பதால் என்னால் எவ்வாறு பிரதமர் பதவியை வகிக்க முடியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அமெரிக்காவில் இருந்து இன்று காலை நாட்டுக்கு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மீண்டும் தேவையென்பதை நாட்டு மக்கள் தேர்தல் மூலம் நிரூபித்துள்ளனர். பொய்ப் …
Read More »வடக்கு,கிழக்கில் பெரும்பான்மை சபைகள் தமிழ் கூட்டமைப்பு வசம்
வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெரும்பான்மையான சபைகளை வெற்றிகொண்டுள்ள போதிலும் யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி இரு சபைகளை கைப்பற்றியுள்ளதுடன் பெருமளவான சபைகளில் கணிசமான உறுப்பினர்களை தன்வசப்படுத்தியுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பெரும்பான்மையான சபைகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. யாழ். மாநகர சபையில் 16 உறுப்பினர்களை பெற்று அதிகூடிய ஆசனங்களை கைப்பற்றிய கட்சியாக கூட்டமைப்பு …
Read More »பாராளுமன்றைக் கலைக்குமாறு மஹிந்த அதிரடி அறிவிப்பு !
பாராளுமன்றைக் கலைத்து விட்டு பொதுத் தேர்தலொன்றுக்கு சென்று உறுதியான அரசாங்கத்தை அமைக்க முன்வருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். பத்தரமுல்லை நெலும்மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுனவின் தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவிக்கையிலேயே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் உறுதியான அரசாங்கத்தை அமைக்கும் பொருட்டு அரசாங்கம் உடனடியாக பாராளுமன்றைக் கலைத்துவிட்டு பொதுத்தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும். …
Read More »கூட்டமைப்பு- காங்கிரஸ் இணைந்தாலே ஆட்சி!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இணையாமல் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புக்கள் வெகு குறைவாகவே உள்ளன. வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் இதைத் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபையிலும், திருகோண மலை மாவட்டத்தின் வெருகல் பிரதேச சபையிலும் மாத்திரமே தனித்து ஆட்சி அமைக்க முடியும். ஊர்காவற்றுறைப் பிரதேச சபையில் ஈ.பி.டி.பி. தனித்து ஆட்சி அமைக்க …
Read More »தேர்தலில் வரலாறு காணாத வெற்றி ; இரு பிரதான தலைவர்களும் படுதோல்வி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆறாயிரத்திற்கும் அதிகமான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இவ்வெற்றியானது வரலாறு காணாத வெற்றியாகும். இதன் மூலம் அரசாங்கத்திற்கான மக்கள் ஆதரவு இல்லாது போயுள்ளது. ஆகவே அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நாட்டு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடனும் தாமரை மொட்டு சின்னத்துடனும் இணைந்திருக்கின்றனர். ஆகவே அரசாங்கத்தின் பிரதான தலைவர்கள் இருவரும் …
Read More »மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகின்றோம் ; ஐ.தே.க.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு நாம் தலைவணங்குகின்றோம். மக்கள் எமக்கு வழங்கிய எச்சரிக்கையாகவே தேர்தல் முடிவினை கருதுகின்றோம். இது தொடர்பில் ஆழ்ந்து சிந்தித்து எமது செயற்பாடுகளை சரியான முறையிலும் வேகமாகவும் முன்னெடுக்க நாம் பாடுபடுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டில் சமூக பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்கு மக்கள் எமக்கு பொறுப்பு வழங்கினர். அதே …
Read More »