Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 173)

இலங்கை செய்திகள்

இன்னும் சில நாட்களில் நான் இறந்து விடுவேன்!! அதிர்ச்சி கொடுத்த ரணில்!!

19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் பிரதமரை நீக்குவதற்கான ஏற்பாடுகள் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தள்ளார். இன்னும் சில நாட்களில் நான் மரணித்துவிடலாம். மரணித்து விடக்கூடும். அப்படி ஏற்பட்டால் பிரதமர் பதிவிக்கு வேறொருவரை நியமிக்க முடியும். பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்வதற்கான காரணங்கள் எதுவுமில்லை என பிரதமர் கூறியதை கேட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சங்கடத்துக்குள்ளாகியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு முடிவடைந்ததை …

Read More »

மாகா­ண­சபைத் தேர்­தல்­கள் செப்­டெம்­பரில்

மாகா­ண­சபைத் தேர்­தல்­களை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் நடத்த உத்­தே­சிக்­கப்­பட்­டுள்­ளது என்றும் அதற்­கான ஏற்­பா­டுகள் எதிர்­வரும் மே மாத­ம­ளவில் ஆரம்­பிக்­கப்­படும் எனவும் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார். இதே­வேளை, நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லின்­போது, ஏதேனும் அர­சியல் கட்சி அல்­லது வேட்­பா­ளர்கள், பணம், பொருட்கள் அல்­லது வேறேதும் பெறு­ம­தி­யான பொருட்­களை வாக்­கா­ளர்­க­ளுக்கு வழங்­கி­யது உறு­திப்­ப­டுத்­தப்­பட்டால், அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு தேர்தல் ஆணைக்­குழு நட­வ­டிக்­கை­களை எடுக்கும் …

Read More »

போர்க்குற்றச்சாட்டுக்களை இலங்கை ஒப்புக் கொண்டது?

போர்க் குற்றச் செயல், குற்றச்சாட்டுக்களை இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது என பிரிட்டன் வெளிவிவகார செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கம் தனது படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச் செயல், குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதனால், பிரிட்டன் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அன்டன் கேஸின் போர் இரகசியங்கள் பற்றிய ஆவணங்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார செயலகம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை கொழும்பு ஊடகமொன்றுக்கு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் …

Read More »

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி!

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சமகால பிரதமரை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் பல்வேறு சர்ச்சையான நிலை காணப்பட்டது. இந்நிலையில் நாட்டில் காணப்பட்ட அரசியல் மோதல் நிறைவுக்கு வந்துள்ளதாகவும், தானே தொடர்ந்து பிரதமராக செயற்படப் போவதாகவும் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இளம் உறுப்பினர்களுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முகம் …

Read More »

அடுத்த பிரதமர் இவர்தானா? மைத்திரி தெரிவிப்பு!!

மைத்திரிபால சிறிசேன

நடந்த உள்ளூராட்சி தேர்தலில் தோல்வியால் பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசங்க விலகிமாறும், கரு ஜயசூரியவை அப்பதவியை ஏற்க அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியை இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இதன்போது அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம், ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.இதேபோல் , ஐ.தே.க. அமைச்சர் சுஜீவ சேனசிங்கவும் மைத்திரியிடம் ரணிலை பதவியில் இருந்து …

Read More »

ரணிலின் அதிரடி அறிவிப்பு சூடு பிடித்துள்ள தெற்கு அரசியல்

அரசாங்கம் வாக்குறுதி

நான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் அரசியலமைப்பின் பிரகாரம் நான் தொடர்ந்து பிரதமராக பதவி வகிப்பேன். என்னை யாரும் பதவி நீக்க முடியாது. எதிர்காலத்தில் சிறந்த தலைமைத்துவக்குழு ஒன்றை உருவாக்க கட்சியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார். எதிர்ப்புக்கள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் ரணில் விக்கிரமசிங்க இந்த அதிரடி அறிவிப்பை இன்றைய தினம் வெளியிட்டுள்ளார். மேலும் ரணில் தனது பதவியை ராஜினாமா செய்து …

Read More »

முடிவுக்கு வரும் நல்லாட்சி! மஹிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

மகிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அடுத்த வெசாக் போயா தினத்திற்குள் முற்றுப்பெறும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். மஹரகமவில் உள்ள விகாரையில் காலஞ்சென்ற பெல்லன்வில விமலரத்ன தேரரின் நினைவுதான நிகழ்வு நடைபெற்ற போது அதில் கலந்து கொண்ட பின்னர், சமகால அரசியல் நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், இந்த அரசாங்கத்தின் ஆயுள் இன்னும் இரண்டு வருடங்கள் …

Read More »

என் குடும்பத்துடன் விளையாடியவர்களை என்ன செய்கிறேன் பார்…! மிரட்டும் மஹிந்த

கடந்த காலங்களில் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிராக செயற்பட்ட அரசியல்வாதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதியுடனான இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது இந்த எச்சரிக்கை விடுத்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழுவினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின் …

Read More »

பாராளுமன்ற பெரும்பான்மையுடன் புதிய பிரதமர்!

நல்லாட்சி அரசு ஸ்திரத்தன்மை குறைந்திருக்கும் நிலையில், புதிய பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் செயலாளரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான மஹிந்த அமரவீர ஜனாதிபதியிடம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தகவலை, திலங்க சுமதிபால வெளியிட்டுள்ளார். குறிப்பாக, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக் காட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்தினர் ஒருவரையே பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளதாகவும் …

Read More »

தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்காளியாகவும் இருக்கவேண்டாம், பகையாளியாகவும் இருக்கவேண்டாம்

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்கும் சபைகளில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி பங்காளியாகவும் இருக்கவேண்டாம், பகையாளியாகவும் இருக்கவேண்டாம். தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஆட்சியமைக்கும் சபைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் பங்காளியாகவோ, பகையாளியாகவோ இருக்காது எனவும் ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலின் பின்னான நிலமைகள் தொடர்பாக நேற்று மாலை யாழ்.நகரில் நடைபெற்ற ரெலோ அமைப்பின் ஊடகவியலானர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே என்.சிறீகாந்தா மேற்கண்டவாறு கூறியுள்ளார். …

Read More »