Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 164)

இலங்கை செய்திகள்

வெறுப்புணர்வை தூண்டியோருக்கு எதிராக நடவடிக்கை அவசியம் : பிரிட்டன் வலியுறுத்து

இன, மதங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் செயற்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை அரசிடம் பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தமது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். அண்மையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பெருமளவானோர் அச்சமடைந்துள்ளனர். இந் நிலையில், இன மற்றும் மத ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில், சமூக வலைத்தளங்கள் உள்ளடங்காளாக செயற்பட்ட அனைவருக்கும் எதிராக …

Read More »

ரஷ்யா சென்ற நாமல்

ரஷ்யாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்க கூட்டு எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் எதிர்வரும் 18ஆம திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை சுதந்திரமான கண்காணிப்பாளராக கண்காணிப்பதற்கு வருமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று நாமல் ராஜபக்ஷ ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Read More »

இலங்கையில் பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டது

இலங்கையில் பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது டுவிட்டர் தளத்தில் இதனைப் பதிவு செய்துள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதிகளும்இ ஜனாதிபதி செயலாளருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை ஒன்று இன்று நடைபெற்றது. இதன்போது இனவிரோத பதவிகளை தடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பேஸ்புக் பிரதிநிதிகள் உறுதியளித்தனர். இதன்படி இந்த தடையை நீக்குவதற்கு தாம் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் …

Read More »

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்தக்கூடிய முறையான பொறிமுறையொன்று அவசியமாகும்

Maithripala Sirisena

கண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் எந்தவொரு விடயத்திற்கும் இடமளிக்கப்பட்டபோதிலும், சமூகத்தை சீர்குலைக்கும் விடயங்கள் காணப்படுமாயின் அவற்றை கட்டுப்படுத்தக்கூடிய முறையொன்று அவசியமாகும் எனவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஜப்பானிற்கான அரசமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று(13) பிற்பகல் டோக்கியோ இம்பேரியல் …

Read More »

வன்முறைகளில் 24 பள்ளிவாசல்கள், 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் சேதம்

சிறிலங்காவில் கடந்தவாரம் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில்இ 24 பள்ளிவாசல்கள்இ 445 வீடுகள் மற்றும் வாணிபங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 4ஆம் நாள் கண்டி மாவட்டத்தில் உள்ள தெல்தெனிய மற்றும் திகண பகுதிகளில் தொடங்கிய வன்முறைகளில் முஸ்லிம்களின் பெருமளவு சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நேற்று தகவல் வெளியிட்ட சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர, ”வன்முறைகளின் போதுஇ 445 வீடுகள், வாணிப நிலையங்கள் மீது …

Read More »

மெதுவான முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சர் கவலை

வடக்கு மாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கவலை தெரிவித்துள்ளார். வடக்கிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்காவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரியான போல் கொட்பிறி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தாம் மீண்டும் சந்தித்த போதே அவர் இந்தக் கவலையை வெளியிட்டார் என்று கீச்சகப் பதிவு ஒன்றில், போல் கொட்பிறி குறிப்பிட்டுள்ளார். Pயரட …

Read More »

க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம் வெளியாகும்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைப் பெறுபேறுகள் இந்த வாரம்; வெளியிடப்படவுள்ளன. விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது பூர்த்தியடைந்துள்ளன. இம்முறை பரீட்சைக்கு சுமார் 6 இலட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தோற்றியிருந்தனர். இதேவேளை, தஹம் பாடசாலை தொடர்பான இறுதிப் பரீட்சை இம் மாதம் 24ஆம் 25ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்தப் பரீட்சைக்கு சுமார் 1 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

Read More »

அடுத்த பிரதமருக்கு நான்தான் தகுதியானவன்; ஜோன் அமரதுங்க

இலங்கையின் அடுத்த பிரதமராவதற்கான அத்தனைத் தகுதிகளும் தனக்கு இருப்பதாக சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினருமான ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியிலிருக்கும் அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அடுத்தபடியான சிரேஷ்ட உறுப்பினராக தாம் விளங்குவதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார். கொழும்பு – வத்தளை அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியே …

Read More »

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து மஹிந்த, பஸிலுடன் பேசவில்லை

2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, மஹிந்த ராஜபக்ஷவுடனோ, பஸில் ராஜபக்ஷவுடனோ பேசவில்லை என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போது கலந்துரையாடுவது, மிகவும் முற்கூட்டிய நடவடிக்கையாக அமையும். அதற்கான நேரம்வரும் போது, மஹிந்த ராஜபக்ஷ ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவார். ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தும் போது எந்தவொரு …

Read More »

தகவல் அறியும் உரிமை எங்கே? நாமல் கேள்வி

அரசின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் தகவலறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியதாக மார்தட்டிக்கொள்ளும் அரசு, சமூக வலைத்தளங்களை முடக்கி பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சாடியுள்ளார். சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளமை தொடர்பாக, அவர் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் எந்த அரசும் செய்யாத வகையில் தற்போதைய அரசு சமூக வலைத்தளங்களை முடக்கி வைத்துள்ளது. குறிப்பாக, தமக்கு சாதகமான நிலைப்பாட்டில் சமூக …

Read More »