Tuesday , August 26 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 163)

இலங்கை செய்திகள்

இலங்கை குறித்த அறிக்கை ஐ.நா.-வில் நிறைவேற்றம்!

இலங்கை குறித்த பூகோள கால மீளாய்வு அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரின் நேற்று (திங்கட்கிழமை) அமர்வில் இலங்கை குறித்த முதல் விவாதமாக பூகோள கால மீளாய்வு அறிக்கை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி முதல், 17ஆம் திகதிவரை, ஜெனீவாவில் நடைபெற்ற பூகோள கால மீளாய்வு பணிக்குழு அமர்வில், இலங்கை தொடர்பாக …

Read More »

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி யாழ். விஜயம்

யாழ். பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப கூடத்தினை ஜனாதிபதி இன்று திறந்து வைத்துள்ளார். யாழ். ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஜனாதிபதி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைத்துள்ளார். பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 3 கோடி ரூபா நிதி செலவில் இந்த தொழில்நுட்ப ஆய்வுகூடம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப கூடத்திற்கான அடிக்கல் கடந்த …

Read More »

மக்கள் விரும்பினால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார்? போன்சேகா

மக்கள் கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட தயாராக இருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வரலாற்றில் சவால்களை ஏற்றுக்கொண்டவன் என்ற வகையில் மக்கள் வழங்கும் எந்த சவாலாக இருந்தாலும் அதனை புறந்தள்ளாது ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் பொன்சேகா கூறியுள்ளார். பொது வேட்பாளர் எண்ணக்கரு ஊடாக எதிர்பார்த்த விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும் இது தனது தனிப்பட்ட கருத்து. அன்று நான் வெற்றி பெற்றிருந்தால், சகல …

Read More »

சட்டவிரோத செயற்பாடுகளால் பாதிக்கப்படுபவர்பளின் முறைப்பாடுகளை விசாரணைசெய்ய பொறிமுறை

காணாமல்போனோர் குடும்பங்களின் அங்கத்தவர்கள், மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்ட நபர்கள், மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நபர்கள் அடங்கலாக பொதுவான சட்டமுறையற்ற கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்கள் பற்றிய சம்பவங்களை சட்ட மற்றும் ஒழுங்கு அமைச்சு அவ்வப்போது அறிந்து கொண்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசு தனது சகல பிரஜைகளினதும் பாதுகாப்பை எப்பொழுதும் உறுதி செய்ய கடமைப்பட்டுள்ளது. இலங்கை பொலிஸாருக்கு …

Read More »

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுவது உறுதி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்கட்சி கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கைச்சாத்தினைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன. மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த தகவலை வழங்கியுள்ளார். அத்துடன் இந்த பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பிரேரணை எதிர்வரும் 20ஆம்இ 21ஆம் அல்லது 22ஆம் திகதிகளில் ஏதாவதொரு தினத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் …

Read More »

உணவில் மலட்டுத்தன்மை மாத்திரை உண்மைக்குப்புறம்பான பிரசாரம்

உணவில் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் மருந்தைக் கலப்பதன் மூலம் கருத்தரிப்பதைத் தடுக்க முடியும் என்று முன்னெடுக்கப்படும் பிரசாரம் உண்மைக்குப்புறம்பானது என இலங்கையின் சிரேஷ்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞான ரீதியில் இந்தக் கூற்று எந்த விதத்திலும் அடிப்படையற்றது என்றும் கூறியுள்ளனர். இலங்கை வைத்தியர் சங்கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது. இலங்கையின் 134 சிரேஷ்ட மருத்துவ நிபுணர்களின் கையொப்பத்தில் வெளியான அறிக்கை இங்கு வெளிடப்பட்டது. …

Read More »

சர்வதேச குற்றவியல் மன்றில் இலங்கையை நிறுத்துங்கள்! கஜேந்திரகுமார் கோரிக்கை

சர்வதேச குற்றவியல் மன்றில் இலங்கையை நிறுத்துங்கள் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கையில் குற்றவிலக்களிப்புக் கொடூரம் தொடர்ந்து தலைவிரித்தாடுகின்றது. அதனை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது இடைக்கால சர்வதேச குற்றவியல் மன்றம் ஒன்றை அமைத்து அதனிடம் கையளியுங்கள. இலங்கையில் மனித உரிமைகள் …

Read More »

வடக்கு ,கிழக்கில்; சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகள் தொடர்பில் விசாரணை

இந்திய மருத்துவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது பற்றி விசாரணை நடத்தப்படவுள்ளது. இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனுமதியின்றி மருத்துவ சேவைகளில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி விசாரணை நடத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மருத்துவ சேவைகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்று வெளியான செய்திகளை அடுத்து சுகாதார அமைச்சு இது பற்றி கவனம் செலுத்தியுள்ளது. வெளிநாடுகளைச் …

Read More »

அவசரகாலச் சட்டத்தை தொடரும் எண்ணத்தில் அரசாங்கம்

அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார கருத்து வெளியிட்டிருந்தார். ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும் பாதுகாப்புச் சபைக் கூடி பாதுகாப்பு நிலைமை குறித்து ஆராய்ந்த பின்னர் அவசரகாலச் சட்டம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் மத்துமபண்டார குறிப்பிட்டிருந்தார். அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தி நாட்டை ஆட்சி செய்யும் …

Read More »

நியூயோர்க் ஐ.நா. தலைமையகம் முன்னால் இலங்கை முஸ்லிம்களுக்காகப் போராட்டம்

அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்னால் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்கா வாழ் இலங்கை முஸ்லிம்களும், தமிழர்களும் கலந்துகொண்டனர்.

Read More »