முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தில் அனைத்து உறவுகளும், அமைப்புக்களும் , அரசியல்கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியாக ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும் என்று ஜனநாயகப் போராளிகள் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ளதாவது-, இலங்கைத் தீவில் தமிழ் மக்களும் இறையாண்மை உள்ள ஆட்சி அதிகாரங்களுக்கு உரித்துடையவர்கள். இந்தச் செல்நெறிப்போக்கு கடந்த காலங்களில் இடர்பாடுகளை எதிர்கொண்ட வேளைகளில்தான் தமிழர்கள் தமது தார்மீக அடிப்படையிலான …
Read More »பருத்தித்துறையில் வீடு புகுந்து 6 பேருக்கு வாள் வெட்டு
பருத்தித்துறை, கற்கோவளத்தில் நேற்றுமுன்தினம் நடந்த வாள்வெட்டில் 6 பேர் காயமடைந்துள்ளனர். பருத்தித்துறைப் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூன்று வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர் பில் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவேயில்லை என்று மக்கள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையிலேயே நான்காவது சம்பவமாக இது நடந்துள்ளது. பருத்தித்துறை, சுப்பர்மடம், தும்பளை ஆகிய இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் அடுத்தடுத்து வாள்வெட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாருடைய அணுகுமுறையில் சந்தேகம் …
Read More »வாகன விபத்தில் 25 பேர் காயம்
குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து நேற்று முன்தினம் இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர். தனியார் பேருந்தொன்று எரிபொருள் ஏற்றிவந்த வாகனத்தின் மீது மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றது எனக் கூறப்பட்டது. காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்ட்டனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.
Read More »ஆசிரியையின் கூந்தலை அறுத்துக் கொடுமை கொக்குவிலில் சம்பவத்தின் பின்னனி
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக் குள் புகுந்த இருவர் அங்கிருந்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த ஆசிரியையும், தாயும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 2.45 மணியளவில் கொக்குவில் மூன்றாம்கட்டையில் (தாவடிக்கு அண்மையில்) நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வீட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆசிரியையின் கூத்தலை வெட்டிக் அவரைக் கொடூரமாகக் கொடுமைப்படுத்தினர். …
Read More »மட்டக்களப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வு மட்டக்களப்பு வெல்லாவெளியில் இன்று நடைபெற்றது. வெல்லாவெளியில் அமைந்துள்ள போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது.
Read More »வீதி விபத்தில் சிக்கி – காயமுற்ற நாகபாம்பின் மயக்கம் நீக்கி வழிபாடு!!
விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாகபாம்புக்கு பால் ஊற்றி வழிபாடு செய்து அதன் மயக்கத்தைப் போக்கினர் பக்தர்கள். இந்தச் சம்பவம் நேற்று மாலை வல்லை நாகதம்பிரான் ஆலய வீதியில் நடந்துள்ளது. வீதியை நாகபாம்பு கடக்க முயன்றது. அப்போது மோட்டார் சைக்கிளுக்குள் சிக்கி அது காயமடைந்தது. அதைக் கண்டவர்கள் பாம்மை நாகதம்பிரான் ஆலயத்தில் வைத்து பாலூற்றி அதன் மயக்கத்தைப் போக்கினர். பின்னர் அந்தப் பாம்பை வழிபட்டனர். பாம்பு மயக்கம் நீங்கி …
Read More »துப்புரவாக்கப்பட்ட காணியில் வெளிப்பட்டது நிலக்கீழ் அறை!!
பளை, அரசர்கேணியில் நிலக்கீழ் பதுங்கு குழி ஒன்று நேற்றுக் கண்டுபிடிக்கப்பட்டது. காணியின் உரிமையாளர் நேற்றுக் காணியைத் துப்புரவு செய்தபோதே நிலக்கீழ் பதுங்குழி தென்பட்டது. இந்தப் பதுங்கு குழி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பால் பயன்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகின்றது. பதுங்கு குழி இருப்பது தொடர்பில் இராணுவத்தினருக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். பதுங்கு குழியை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த இராணுவத்தினர், அதுவரை காணியில் எந்த …
Read More »முல்லைக் கடலில் கண்டெடுக்கப்பட்ட விசித்திரச் சங்கு
முல்லைத்தீவு கடற்கரையில் விசித்திரமான சங்கு ஒன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடற்கரையோரப் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது இந்தச் சங்கு கண்டெடுக்கப்பட்டது. சங்கின் வெளிப்பகுதி தோற்றம் ஒரு பூசணிக்காய் போன்று காணப்படுவதாகவும், உள்பகுதி ஒரு பறவை போன்று விசித்திரமாக காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More »தமிழரின் கை தவறிப் போனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்து
தமிழரின் தாயக பூமியான, வடக்கு– – கிழக்கு மாகாணம் தமிழரின் கையை விட்டுச் சென்றால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். இந்தப் பேராபத்தைக் கருத்திற் கொண்டு – கரிசனையில் எடுத்து இந்திய அரசு தமது அயலுறவுக் கொள்கையில் மாற்றங்களை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்று ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். இந்தியப் பத்திரிகையாளர் தி.ராமகிருஸ்ணன் எழுதிய ‘ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூல் அறிமுக விழா …
Read More »நாடு திரும்பினார் அரச தலைவர் மைத்திரி
பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றிருந்த அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர். கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அவர்கள் நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரச தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் கடந்த 15 ஆம் திகதி லண்டன் சென்றிருந்தனர்.
Read More »