யாழ். வல்வெட்டித்துறை பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று இரவோடு இரவாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழு மோதலில் ஈடுபட்டார்கள் என்ற அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வு ஒன்றினை அடுத்து இரு குழுக்களுக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் அது …
Read More »தன்னை கேலி செய்தவர்களிடம் மஹிந்த் விடுத்துள்ள சவால்
வரி அறவீடுகளை 20 வீதமாக குறைத்து காண்பிக்குமாறு தற்போது சவால் விடும் நபர்கள் அன்று போரை முடிவுக்கு கொண்டு வந்து காட்டுமாறு தனக்கு சவால் விடுத்தார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போது எனக்கு சவால் விடுவோர் நான் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என நினைக்கவில்லை. நான் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் காரணமாகவே அவர்கள் எந்த அச்சமும் சந்தேகமும் இன்றி வடக்கு, கிழக்கிற்கு செல்கின்றனர். …
Read More »நாடு முழுவதும் சுற்றிவளைப்பில் 3666 பேர் கைது
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 11 மணிநேர சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம் 3666 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அந்த வகையில் இவ்வாறு கைது செய்யப்பட்ட 3666 பேரில் 998 பேர் பிடியணை பிறப்பிக்கப்பட்ட கைதிகள் எனவும் 648 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் எனவும் ஏனையோர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
Read More »இலங்கை இராணுவம் தொடர்பில் சீ.வி வெளியிட்ட தகவல்
இலங்கை இராணுவத்தை 9 பிரிவுகளாக பிரித்து நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் நிலை நிறுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கத்திடம் யோசனை முன்வைத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அரச அலுவலகம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த யோசனையை அமுல்படுத்துவதன் மூலம் 9 மாகாணங்களுக்கு இராணுவப் பிரிவுகள் கிடைக்கும். வடக்கில் அதிக எண்ணிக்கையிலான இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதை தமிழ் மக்கள் ஏற்க …
Read More »அசைவ உணவு பரிமாறப்படுகின்ற நிகழ்வுகளிலும் கலந்துகொள்வேன்!
அசைவ உணவு பரிமாறப்படுகின்ற நிகழ்வுகளிலும் கலந்துகொள்வேன்! சி.வி. விக்னேஸ்வரன் முஸ்லீம் இறைவழிபாட்டிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறவிருக்கின்ற இப்தார் கஞ்சி அருந்தும் நிகழ்விலும் கலந்துகொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன் என வடமாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். யாழ். பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற சிறப்பு இப்தார் விஷேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்த போது எனது உணவுப் பழக்கவழக்கங்கள் …
Read More »முள்ளியவளையில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை! நடந்தது என்ன?
மொரட்டுவ பல்கலைக்கழக மாணவி ஒருவர் முள்ளியவளை பகுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் Information Technologg and management பிரிவில் கல்விகற்று வரும் 24 அகவையுடைய இராசநாயகம் நிறோசிகா என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு கடந்த …
Read More »முன்னாள் ஜனாதிபதியிடம் இரகசிய விசாரனை! மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படுமா?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இரகசிய விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பாகவே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, விசாரணைகளுக்கான நாளை மஹிந்த தெரிவிக்க வேண்டும் எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே இந்த விடயம் தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர் வழங்கிய முக்கிய தகவல்களின் அடிப்படையிலேயே …
Read More »வடக்கு முதலமைச்சரின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்
போருக்கு பின்னரான காலத்தில் இளைஞர், இளம் பெண்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்ளும் நோக்கில் தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு விரைவில் நடைபெறும் என்று மாகாண முதலைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார். இளைஞர் யுவதிகளை ஒன்றிணைத்த இளைஞர் மாநாட்டுக்கான ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. அதில் உரையாற்றிபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவை அரசியல் …
Read More »எதிர்கால சந்ததிக்கு அச்சுறுத்தல்! மைத்திரிக்கு எச்சரிக்கை
நாட்டில் அதிகரிக்கும் சூழல் மாசடைவுகள் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும், இதனை கருத்திற்கொண்டு அனைவரும் சூழலை பாதுகாக்க கைகோர்க்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கேகாலை நகரில் நேற்று இடம்பெற்ற சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”சூழல் கட்டமைப்பினைப் பாதுகாப்பதற்கு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதுடன், அது எவ்வகையிலும் தவிர்க்கப்பட முடியாத …
Read More »வடக்கு முதலமைச்சரின் யுக்தி!
கடந்த வாரம் நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உலகப் புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மொஹமட் அலியின் வெற்றிக்கான யுக்தியைப் பற்றி விளக்கியிருந்தார். மொஹமட் அலியிடமிருந்து தமிழ் மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அவரது அந்த விளக்கத்துக்கான காரணம். அதனை அவர் வெளிப்படையாகவும் கூறியிருந்தார். தன்முகத்தில் அடிபடாமல் வைத்துக்கொண்டு எதிரியைக் களைப்படைய வைத்து தோற்கடிப்பது தான் மொஹமட் அலியின் யுக்தி என்று முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். …
Read More »