அமைச்சு பதவியை இராஜினாமா செய்யும் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளார். சற்று முன்னர் தனது இராஜினாமா கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன் கையளித்துள்ளதாக தெரிய வருகின்றது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச நிகழ்வு ஒன்றில் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகளில் மீள்வருகை குறித்து பேசியிருந்தார். இது தென்னிலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து பல்வேறு தரப்பினர்களும் விஜயகலா மகேஸ்வரனை பதவி …
Read More »பிரபாகரனின் காலம் இன்று வந்திடாதோ! விஜயகலாவின் கூற்றில் என்ன தவறு உள்ளது?
எங்களுக்குப் புனர்வாழ்வளிக்க வேண்டுமா என்று முடிவெடுக்க ரஞ்சன் ராமநாயக்கவை வடக்கிற்கு கௌரவத்துடனும் அன்புடனும் அழைப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் முதலமைச்சரிடம் கேட்கப்பட் கேள்விகளும், அவற்கு முதலமைச்சரின் பதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கேள்வி – விக்கி, விஜயகலா, சிவாஜிலிங்கத்திற்கு விசுவமடு முகாமில் புனர்வாழ்வளியுங்கள் என்று பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார். இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன? பதில் – நான் சிங்களத் திரைப்படத்துடன் …
Read More »நீதிமன்றில் பரபரப்பை ஏற்படுத்திய கடவுள்! இலங்கையில் நடந்த விசித்திரம்
கடவுளின் உத்தரவிற்கு அமைய வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டேன் என சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி நீதவான் நீதிமன்றின் நீதவான் சாலிய சன்ன முன்னிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “கடவுள் கனவில் தோன்றி நீதிமன்றை உடைக்குமாறு பணித்தார், நான் உடைத்தேன். அதன் பின்னர் வங்கியைக் கொள்ளையிடுமாறு பணித்தார். அதன் அடிப்படையில் நான் வங்கியைக் கொள்ளையிட்டேன். இன்று நீதிமன்றிலிருந்து தப்பிச் செல்லுமாறு கடவுளே பணித்தார்.” என சந்தேக நபர் தெரிவித்துள்ளார். …
Read More »விடுதலைப் புலிகள் விவகாரம்! விஜயகலா தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு
இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். வடக்கில் நேற்றைய தினம் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் பதவியில் உள்ள ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட முடியாது என்று …
Read More »அவசரமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் விஜயகலா
சிறுவர் மற்றும் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார். அதற்கமைய அவர் தற்போது யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று மாலை 6.30 மணியளவில் அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழில் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து …
Read More »இராணுவத்தின் தந்திரோபாயம் வெற்றிபெற்று விட்டது!
தமிழ் அரசியல் தலைமைகள் அரசாங்கத்தின் தனிப்பட்ட சலுகைகளைப் பெற்றுக்கொண்டிருப்பதாலேயே வடக்கு, கிழக்கில் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களையும் அடக்குமுறைகளையும் தடுக்க முடியாதிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இராணுவத்திடமோ அரசாங்கத்திடமோ நன்மைகளைப் பெறும்போது தூரச் சிந்தனையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும் இல்லையேல், அவர்களின் அன்பின் அடிமைகளாக ஆண்டாண்டு தோறும் அவதியுற நேரிடும் என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பு வார நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “ரத்னப்பிரிய …
Read More »யாழில் தொடரும் அவலம் – மற்றுமொரு இளைஞன் தற்கொலை
யாழ்ப்பாணம் தென்மராட்சி கச்சாயில் இளைஞன் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கச்சாய் பிரதேசத்தில் வசிக்கும் சத்தியசீலன் எனும் இளைஞன் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி டிப்ளோமாவை அண்மையில் பூர்த்தி செய்திருந்ததார். இவ்வாறான நிலையில் இனைஞனின் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதேவேளை தென்மராட்சிப் பகுதியில் பெண்ணொருவர் தற்கொலை செய்துள்ளார். இன்று தென்மராட்சி நாவற்குளி 300 வீட்டுத் திட்டப் …
Read More »விக்னேஸ்வரனை சீண்டும் சுமந்திரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார். இதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புகள் …
Read More »இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்களே!
இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே என்று ஒரு குண்டைத்தூக்கிப் போட்டு வருகின்றீர்களே! சிங்களப் பேராசிரியர்கள் இதுவரை கூறிவந்ததை முற்றாக மாற்றும் வண்ணம் உங்கள் கருத்து அமைந்துள்ளது. உங்கள் கூற்று சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் அல்லவா என்று வினவியுள்ளனர். அதற்கு பதலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உண்மையை சில தருணங்களில் கூறாது விடுவது பொருத்தமானதாகும். சில தருணங்களில் அதனை இடித்துக் கூற வேண்டியுள்ளது. உண்மையானது சில தருணங்களில் வெளிக்கொண்டுவரப்படாது நம்மால் மௌனம் …
Read More »யாழில் பிரபாகரன் வருவார் என மக்கள் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு!
சுழிபுரத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி றெஜினாவுக்கு நீதிகோரி சுழிபுரப் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளோர் தழிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவார் என்று கோசம் எழுப்பியதால் சற்று பரபரப்பு நிலவியது. சங்கானை பிரதேச செயலகம் நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணி நகர்ந்துகொண்டிருக்கின்றது.
Read More »