முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பரப்புரைச் செயலாளர் துசார திசநாயக்க இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “அண்மையில் விடுதலைப் புலிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், அவருக்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் …
Read More »விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் ..
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தை தாம் வரவேற்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரனை விட பாரிய தவறுகளை செய்தவர்கள் பதவியிலிருக்கும் நிலையில் துள்ளும் மீன் இருக்க நெத்தலிக்கு தண்டனையா? என ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் விஜயகலாவிற்கு ராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவியை …
Read More »போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை!
போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை! போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, பௌத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். பௌத்தசாசன அமைச்சில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சமீப காலமாக இடம்பெற்ற கொலைகள் மற்றும் ஏற்கனவே சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களின் திட்டமிடப்பட்ட போதைப்பொருள் இறக்குமதி என்பவற்றை கருத்திற்கொண்டு அமைச்சரவை அமைச்சர்கள் இந்த கூட்டு தீர்மானத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த தீர்மானத்திற்கு …
Read More »விஜயகலாவுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!
தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் உருவாக வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக அரசியலமைப்பின்படி வழக்கு தொடர முடியாது என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் இந்தக் கருத்துக்குப் பின்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தூண்டல் இடம்பெற்றிருக்கலாம் என்றும் சரத் என் சில்வா சந்தேகம் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்தவாரம் …
Read More »விஜயகலாவுக்கு ஆதரவாக கோட்டாபய!
சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக வடக்கில் தீவிரமடைந்துள்ள பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் பாவணை ஆகிய சம்பவங்களின் வெளிப்பாடாகவே விஜயகலா மகேஷவரனின் உரை இடம்பெற்றிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருக்கின்றார். இதனால் மைத்ரி – ரணில் தலைமையிலான தரப்பினர் நாட்டின் ஆட்சியை மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு …
Read More »யாழ். குடாநாட்டில் செயற்படும் ஆவா குழுவினருக்கு எச்சரிக்கை!
எதிர்வரும் இரு வாரங்களில் யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவை முழுமையாக இல்லாமல் செய்வதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டு மக்களிடம் இருந்து கிடைக்கும் முறைப்பாடு மற்றும, மக்கள் வாழ்கைக்கு ஏற்படும் அழுத்தம் அதிகரிப்பு காரணமாக இந்த குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய 100 பொலிஸாரை கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று கடந்த 5ஆம் …
Read More »இராணுவத்தினர் மேற்கொண்டுள்ள தீர்மானம்
நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தடையேற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்களுக்கு இராணுவ முகாம்களுக்கு நுழைய அனுமதி வழங்குவதில்லை என இராணுவம் தீர்மானித்துள்ளது. அத்துடன் அவர்கள் கலந்து கொள்ளும் எந்த வைபவங்களிலும் கலந்து கொள்ளவோ, ஆதரவளிக்கவோ, அனுசரணை வழங்கவோ போவதில்லை எனவும் இராணுவம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. சில சந்தர்ப்பதங்களில் அரசியல்வாதிகள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் மட்டுமல்லாது சிவில் செயற்பாட்டாளர்கள் அரசாங்கம் மற்றும் இராணுவம் முன்னெடுத்து வரும் நல்லிணக்க செயற்பாடுகளை விமர்சித்து வருவதை காண முடிகிறது. …
Read More »விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பலை பார்வையிட தடை
விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய நீர்மூழ்கி கப்பலை இனி பார்வையிட முடியாது என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். 2009ம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சொந்த முயற்சியில் நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட போர் ஆயுதங்களை உருவாக்கியிருந்தனர். இறுதி யுத்தத்தின் போது குறித்த ஆயுதங்களை கைப்பற்றிய இராணுவத்தினர் அவற்றை புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் காட்சிப்படுத்தி பின்னர், புதுமாத்தளன் பகுதிக்கு இடம் மாற்றி இருந்தனர். இந்த நிலையில் குறித்த ஆயுதங்களை இலங்கையில் …
Read More »விஜயகலா தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு
முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆற்றிய உரை அடங்கிய தொகுக்கப்படாத காணொளி காட்சிகளை திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவினரிடம் கையளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் 5 இலத்திரனியல் ஊடகங்ளுக்கு உத்தரவிட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான பொலிஸ் விசாரணைப் பிரிவு விடுத்த கோரிக்கையை ஆராய்ந்த பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சிஹல ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர், …
Read More »கரும்புலிகள் தினம் நடத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை?
கரும்புலிகள தின நிகழ்வினை நடத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தின் பல இடங்களில் கடந்த 5ஆம் திகதி கரும்புலிகள் தின நிகழ்வுகள் நடத்தப்பட்டிருந்தன. இதன்போது, கிளிநொச்சி – அக்கரயான்குளம், ஸ்கந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பிரதான வீதிகளில் உயிர் நீத்த கரும்புலி உறுப்பினர்களின் புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கு ஏற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த நிலையில் கரும்புலிகள் தின …
Read More »