Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 147)

இலங்கை செய்திகள்

இலங்கை விவசாயிகள் வயலில் இறங்குவதில்லை

அபிவிருத்தி இலக்கை அடைய வேண்டுமாயின் இலங்கையை தொழிநுட்ப துறையில் மேலும் வலுப்படுத்த வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில், இலங்கையின் மனித வளத்தின் பலவீனம் காரணமாக வெளிநாட்டவர்களை சுற்றுலா வீசா அனுமதியில் இலங்கைக்கு அழைத்து தொழில்களில் ஈடுபடுத்துகின்றனர். எமது நாட்டில் கணனி செயலிகளை உருவாக்குபவர்கள், தேயிலை, இறப்பர், ஆடை உற்பத்தி ஆகிய …

Read More »

வடக்கில் இராணுவத்தை இலக்கு வைத்த விக்னேஷ்வரன்! அடுத்து என்ன??

வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்தினருக்கு சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகளை வழங்கத் தேவையில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரச அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளார். அதேவேளை சிறிலங்கா இராணுவத்தினர் சிவில் நிர்வாகத்துடன் தொடர்புடைய தரவுகள் உட்பட தகவல்களை கோரினால், அது குறித்து தனக்கு அறிவிக்குமாறும் வட மாகாண முதலமைச்சர் அரச அலுவலகர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய கட்டடம் யூலை 12 ஆம் திகதியான இன்று …

Read More »

வடமாகாணத்தை முன்னேற்ற நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இலங்கைஅரசு முட்டுக்கட்டை – சீ.வி.விக்னேஸ்வரன்

வடமாகாணத்தை முன்னேற்றுவதற்கு நாங்கள் எடுக்கின்ற முயற்சிகளுக்கு மத்தியஅரசு முட்டுக்கட்டைகளையும் தடைகளையும் ஏற்படுத்தி வருகின்ற போதும் நாம் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து முன்நோக்கிச் செல்வதற்கு முடிந்தவரை முயற்சிக்கின்றோம் என வடமாகாண முதலைமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய அலுவலகக் கட்டடத்திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்க்கவே இலங்கை இந்திய ஒப்பந்தம், 13வது திருத்தச் சட்டத்திற்கு வழி வகுத்தது. அதனை முழு …

Read More »

நாளை மற்றும் நாளை மறுநாள் வடமாகாணம் முழுவதும் மின் வெட்டு

அனுராதபுரம், வவுனியா ஊடான பிரதான மின் விநியோக மார்க்கங்களில் அவசர திருத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் வடமாகாணம் முழுவதிலும் எதிர்வரும் (14.07.2018, 15.07.2018 சனி, ஞாயிறு) ஆகிய இரு தினங்களிலும் காலை 8 மணி தொடக்கம் மாலை 05 மணி வரை மின் விநியோகம் முற்றாக துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. வட மாகாணத்திலுள்ள முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம், ஆகிய மாவட்டங்களிலேயே மின் …

Read More »

அச்சத்துடன் பெண்கள்- குழந்தை பிர­ச­வித்­த­வர்­க­ளின்- விவ­ரம் திரட்­டு­கின்­றது ரிஐடி!!!

கிளி­நொச்சி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 25ஆம் திகதி முதல் 30ஆம் திக­தி­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யில் குழந்தை பிர­ச­வித் த­வர்­க­ளின் விவ­ரத்தை பங்­க­ர­வா­தக் குற்­றத் தடுப்­புப் பிரி­வி­னர் கோரி­யுள்­ள­னர். மருத்­து­வ­ம­னை­யி­லும், வீடு­க­ளி­லும் குழந்தை பிர­ச­வித்­த­வர்­க­ளின் விவ­ரங்­கள் கோரப்­பட்­டுள்­ளன என்று அறிய முடி­கின்­றது. அதற்­கான கார­ணம் வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்­பில் மாகாண சுகா­தார அமைச்­சின் செய­லா­ளர் எஸ்.திரு­வா­க­ர­னைத் தொடர்­பு­கொண்டு கேட்­டோம். ‘குழந்த பிர­ச­வித்­த­வர்­க­ளின் விவ­ரங்­க­ளைப் பயங்­க­ர­வாத குற்­றத் தடுப்­புப் பிரி­வி­னர் …

Read More »

புதிய அர­ச­மைப்பு விடயத்தில்- தலை­வர்­க­ளுக்கு ஆர்­வ­மில்­லை- அமைச்சர் மனோ!!

புதிய அர­சமைப்­பு கொண்­டு­வ­ரப்­ப­டாது என்று தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யா­டல், அரச கரும மொழி­கள் மற்­றும் நல்­லி­ணக்க அமைச்­சர் மனோ கனே­சன் தெரி­வித்­தார். ஐ. டப்­ளியூ.பி.ஆர். எனப்­ப­டும் போர் மற்­றும் சமா­தா­னம் தொடர்­பி­லான அறிக்­கை­யி­டல் கற்கை நிலை­யம் சார்­பாக, அமைச்­சர் மனோ கணே­சனை அமைச்­சில் நேற்றுச் சந்­தித்த புல­னாய்வு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டமே இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: புதிய அர­சமைப்­பைக் கொண்­டு­ வ­ரு­வ­தில் தலைமை அமைச்­ச­ருக்­கும், அரச தலை­வ­ருக்­கும் எந்த ஆர்­வ­மும் …

Read More »

மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்!!

வெளிநாட்டில் பணிக்காகச் சென்று நாடு திரும்பிய மனைவியை, கணவர் நடுவீதியில் வைத்து வெட்டி கொலை செய்துள்ளார் என்று கெக்கிராவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ9 வீதியின் கைலபத்தான சந்தியில் நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயான எம்.ஜீ.தம்மிக்கா குணதிலக்க என்ற 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் …

Read More »

வீதிகளின் ஆரம்பத்திலும் முடிவிலும்- நல்லூர் பிரதேச சபையின் வரவேற்பு வளைவு!!

நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் எல்­லைக்­குட்­பட்ட பிர­தான வீதி­க­ளின் ஆரம்­பத்­தி­லும் முடி­வி­லும் சபை­யின் வாச­கம் அடங்­கிய வர­வேற்பு வளைவு அமைப்­பது எனத் தீர்­மா­னம் நிறைவேற்றப்பட்டது. நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் அமர்வு சபை மண்­ட­பத்­தில் தவி­சா­ளர் தியாகமூர்த்தி தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. இந்த அமர்­வில் குறித்த பிரே­ர­ணையை தவி­சா­ளர் முன்­மொ­ழிந்­தார். பிரே­ர­ணை­யில் தெரி­வித்­தா­வது: சபை­யின் எல்­லைக்­குட்­பட்ட பிர­தான வீதி­க­ளில் வர­வேற்பு வளை­வு­களை நிறுவத் தீர்­மா­னித்­துள்­ளோம். அதைப் பிரே­ர­ணை­யாக இந்தச் சபை­யில் முன்­மொ­ழி­கின்­றேன். இதை …

Read More »

கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன்- முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சந்திப்பு

இலங்கைக்கான கனடா நாட்டின் தூதுவார் டேவிட் மைக்கன் யாழ்ப்பாணத்திற்கு இன்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சர் செயலகத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுடன் சுமார் 1 மணி நேரம் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார். இந்தக் கலந்துரையாடலில் வடமாகாண அபிவிருத்திகள் ,டொரான்டோ மாநிலத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் யாழ்.மாவட்ட அபிவிருத்தி உட்பட பல அரசியல் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

Read More »

சித்திரவதைகள் -தொடரும் நாடுகள் பட்டியலில் -இலங்கைக்கு மீண்டும் முதலிடம்

உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும், துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்று , சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளும் பன்னாட்டு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய இலங்கை ஏழாவது ஆண்டாகவும் (2017ஆம் ஆண்டு புள்ளிவிபரங்கள்) இந்தப் பட்டியலில் முன்னணியில் திகழ்கின்றது. தேசிய அரசு ஆட்சி பீடம் ஏறி மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் இன்னமும் இலங்கையில் மிகவும் கொடூரமான …

Read More »