Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 146)

இலங்கை செய்திகள்

வவுனியாவில் கடையை உடைத்து பணம் திருட்டு

வவுனியா வைரவபுளியங்குளம் தொடருந்து நிலைய வீதியில் அமைந்துள்ள சில்லறை கடையை இரவு இனம்தெரியாத நபர்களால் உடைத்து, அங்கிருந்த 20 ஆயிரம் ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளனர். குறித்த கடையின் உரிமையாளர் நேற்று இரவு வர்த்தன நிலையத்தை மூடிவிட்டு இன்று காலை மீண்டும் திறப்பதற்காக வருகை தந்த போதே, கடையின் பூட்டு உடைக்கபட்டு பணம் களவாடப்பட்டதை அறிந்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்

யாழ்ப்பாணம் – பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு அருகில் இருந்த அன்னதான மடத்தில் 22 வருடங்களாக தங்கியிருந்த கடற்படையினர் வெளியேறியுள்ளனர். குறித்த அன்னதான மடத்திற்கான உரிமையாளர்கள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இன்று மாலை ஆவிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து கடந்த 1996 ஆம் ஆண்டு அரச படைகள் யாழ்.குடாநாட்டைக் கைப்பற்றியபோது, பொன்னாலையும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஒரு சில மாதங்களின் பின்னர் பொன்னாலை …

Read More »

உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வெலிகட காவல்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி கமல் அமரசிங்கவுக்கு கொழும்பு நீதவானால் வழங்கப்பட்ட ஒரு வருட சிறைதண்டனையை, உடநடியாக அமுல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் நேற்று உத்திரவிட்டுள்ளது. சட்டதரணி ஒருவருக்கு துப்பாக்கியை காண்பித்து அச்சுறுத்தி தாக்கிய சம்பவம் ஒன்று தொடர்பிலேயே அவருக்கு குறித்த கொழும்பு நீதவானால் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து குறித்த காவற்துறை அதிகாரி உயர்நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More »

யாழ் வேலணை மக்களுக்கு அவசர வேண்டுகோள்

வேலணை பிரதேச சபைக்கு உட்பட்ட நல்ல தண்ணீர் கிணறுகள் உவர் நீராக மாற்றுவதால் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலணை பிரதேச சபை, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கப்படுகின்றது. சாட்டி பிரதேசத்தில் உள்ள 11 கிணறுகளில் இருந்து இந்த நல்ல தண்ணீர் பெறப்படுகின்றது. இந்த கிணறுகளில் இருந்து மேலதிகமாக தண்ணீர் எடுக்கபட படுவதால், உவர் நீர் …

Read More »

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். நபர்: விசாரணைகள் தீவிரம்

கிளிநொச்சி – கல்மடு குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. கல்மடு குளத்தில் தொழிலுக்குச் சென்ற 63 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான சுந்தரம் புலேந்திரன் நேற்று காணாமல் போயுள்ளதாக தர்மபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதேவேளை, சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் – கரவெட்டியைச் சேர்ந்தவர் என்றும், இது தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை …

Read More »

வேதனையில் திலீபனின் மனைவி: ஆங்கில ஊடகம்

தமது பெண் குழந்தையை வளர்ப்பதற்கு தந்தையின் உதவி அவசியம் இந்தநிலையில் தமக்கு வேறு வழிகள் எவையும் தெரியவில்லை என்று கார்த்திகா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கையில் தமது கணவரின் பாதுகாப்பு குறித்தும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது. வீசா அனுமதி நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கையரான திலீபன் ஞானேஸ்வரன், மனைவி மற்றும் ஒரு வயது குழந்தை ஆகியோரை பிரிந்த நிலையில் நேற்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அவருடன் மேலும் 17 …

Read More »

உலகின் மோசமான நாடுகள் பட்டியலில் சிறிலங்கா! பிரித்தானியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

உலகில் மனித உரிமை கரிசனைகள் உள்ள 30 நாடுகளின் பட்டியலில், பிரித்தானியா தொடர்ந்தும் சிறிலங்காவை உள்ளடக்கியிருக்கிறது பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், 2017ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் ஆண்டு அறிக்கை நேற்று லண்டனில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், ‘மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகள்” என்று 30 நாடுகளின் பட்டியல் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான், பஹ்ரெய்ன், பங்களாதேஸ், பர்மா, புரூண்டி, மத்திய ஆபிரிக்க குடியரசு, சீனா, …

Read More »

இராணுவம் வடக்கில் இருக்க வேண்டும் என்றால் நான் கூறியதைச் செய்யுங்கள்

போர்க்காலம் போல் இப்பொழுதும் அதிகாரங்கள் இருப்பதாக இராணுவத்தினர் நினைப்பது தவறு. உண்மையில் வடமாகாணத்தில் படையினர் தொடர்ந்திருக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் இன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளும், முதலமைச்சர் வழங்கிய பதிலும் கீழே தரப்பட்டுள்ளது… கேள்வி – முழுமையான அமைச்சரவையை உருவாக்கும் ஆலோசனையை ஆளுநருக்கு வழங்குங்கள் என்று உறுப்பினர்கள் நேற்று தீர்மானம் எடுத்துள்ளார்களே? …

Read More »

யாழ்ப்பாணம் விரையும் ரணில்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

யாழ்ப்பாணத்தில் தொண்டர் ஆசிரியகளுக்குரிய நியமனங்களை பிரதமர் வழங்கி வைப்பார் என வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தொணடர் ஆசிரியர்களுக்குரிய தமைகளை பூர்த்தி செய்த 457 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதி பிரதமர் ரணில் விகர்மசிங்க தலைமையில் நடைபெறவிருப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தொண்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய மாகாணஙகளிலும் …

Read More »

9,818 ஏக்கர் தனியார் காணிகள், பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன…

யாழ். மாவட்டத்தில் இதுவரை 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில் 9,818 ஏக்கர் தனியார் காணிகள் பாதுகாப்பு தரப்பிடம் இருந்து பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். இதில் 2014 ஆம் ஆண்டு வரை 5,980 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 3,838 காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மேலும் 4,000 ஏக்கர் காணிகள் இன்னும் …

Read More »