முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் அத்துமீறி நுழைந்தமையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது . சட்டவிரோத மீன்பிடியை தடை செய்யக்கோரி முல்லைத்தீவு நகர்பகுதியில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்த மீனவர்கள் கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்துக்குள் அத்துமீறி புகுந்துள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கலந்து கொண்டு “சட்டவிரோத கடற்தொழில்களை உடனடியாக தடைசெய்ய வேண்டும்” என்று கோசம் எழுப்பிக்கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் தடுமாறி வருகின்ற நிலையில், அருகிலுள்ள …
Read More »யாழில் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ள விசேட மோட்டார் சைக்கிள் படையணி!
யாழில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி ஒன்று களமிறக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இன்று தெரிவித்தார். யாழ் .குடாநாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் யாழப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் விசேட ரோந்து நடவடிக்கைகளுக்காக சுமார் 10 மோட்டார் சைக்கிள்கள் அடங்கிய விசேட பொலிஸ் …
Read More »யாழில் பட்டப்பகலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம்!! அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்..
யாழ். கொக்குவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹயஸ் வான் ஒன்றுக்கு தீவைத்ததுடன், வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றுள்ளது. கொக்குவில், ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாள்களுடன் வந்த எட்டு பேர் கொண்ட குழு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன், வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. வாள்களுடன் புகுந்த கும்பல், வீட்டின் முன் தரித்து …
Read More »விச ஊசி ஏற்றப்பட்டதால் முன்னாள் போராளி ஒருவர் மரணம்..?
முன்னாள் போராளி ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். சாவகச்சேரி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கோணாமலை பிரதீபன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழை இலை வெட்டுவதற்காக வீட்டின் பின்னால் உள்ள கிணற்றடிக்கு சென்றவரை நீண்ட நேரம் காணவில்லை என்று தேடிச் சென்ற போது தண்ணீர்த் தொட்டியில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். இதனையடுத்து, உடனே சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிகிச்சை பலன் இன்றி அவர் …
Read More »2025ஆம் ஆண்டில் மீண்டும் விடுதலைப்புலிகள்? சர்ச்சையை கிளப்பும் கமால் குணரத்ன
அன்று வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்றோர் பெற்றுக்கொள்ள முடியாததை இன்று, நிபந்தனைகளை முன்வைத்து புதிய அரசியல் அமைப்பு மற்றும் அரசியல் சீர்திருத்தம் என்ற போர்வையில் வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிப்பதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் அன்றிருந்த பயங்கரவாதத்தை இல்லாமல் செய்த பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத்தினரின் சக்தியை தற்போதைய …
Read More »மரண தண்டனையை அமுல்படுத்த சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும்
மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிப்பது பொருத்தமானது என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். போதைப் பொருள் கடத்தல்காரர்கள், விற்பனையாளர்கள் மற்றும் சிறாரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் நபர்களை தூக்கிலிட வேண்டும். இது குறித்து 10 ஆயிரம் மக்களிடம் கருத்து கணிப்பு நடத்திய போது …
Read More »தேவையற்ற சதிக்குள் சிக்க வேண்டிவரும்! மகிந்த விடுத்துள்ள எச்சரிக்கை
இந்த அரசாங்கத்தின் கணிப்பற்ற அரசியல் நாட்டை பிராந்திய ஆட்டத்திற்குள் சிக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கை, பிராந்திய சக்திகளின் ஆட்டத்துக்குள் தேவையின்றி இலங்கைத் தீவைச் சிக்கவைக்கும். நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் …
Read More »வானில் தோன்றிய இரத்த நிலா! இலங்கை மக்களுக்கு கிடைத்த அபூர்வ வாய்ப்பு
21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் பயணித்த சந்திர கிரகணத்தை அதிகளவான இலங்கையர்கள் பார்க்கக் கூடிய வாய்ப்பு நேற்று ஏற்பட்டுள்ளது. சந்திர கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஒரே நேர் கோட்டில் வரும் போது ஏற்படுகின்றது. அதற்கமைய நேற்று இரவு 10.45 மணிக்கு ஆரம்பமாகி இன்று அதிகாலை 4.58 மணி வரை இந்த சந்திரகிரகணம் நீடித்துள்ளது. சந்திர கிரகணம் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சந்திரன் சிவப்பு நிறத்தில் காட்சி கொடுக்கின்ற …
Read More »யாழில் தேர் இழுத்த இராணுவத்தினர்!
யாழ்ப்பாணம் – அச்சுவேலி உலவிக்குளம் சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த் திருவிழாவில் இராணுவத்தினரின் செயற்பாடு அனைவராலும் பேசப்படுகின்றது. இதில் அச்சுவேலி இராணுவ முகாமை சேர்ந்த இராணுவத்தினர் சித்திவிநாயகர் தேரின் வடம் பிடித்து இழுத்துள்ளனர். அச்சுவேலி சித்திவிநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது ஆலயத்திற்கு வருகைத்தந்திருந்த 100க்கும் மேற்பட்ட இராணுவத்தினர், தமது சீருடையின் மேலங்கியை கழட்டி விட்டு தேர் வடம் பிடித்து தேர் இழுத்தனர். …
Read More »25,000 வருடங்களுக்கு முன் இலங்கையில் தமிழன் வாழ்ந்த இடம்! இதுவரை யாரும் அறிந்திடாத புகைப்படம்
இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் ஒரு அழகிய தீவே இலங்கை ஆகும். இநது சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை பல சமய, பல இன, பல மொழிகள் பேசுவோரின் தாயகமாக உள்ளது. சிங்களவர், இலங்கைத் தமிழர், இலங்கைச் சோனகர், இந்திய வம்சாவளித் தமிழர், பறங்கியர், இலங்கை மலாயர், இலங்கை ஆப்பிரிக்கர் மற்றும் பூர்வீகக் குடிகளான வேடுவர் ஆகியோரின் தாயகமாகும். ஆனால் தற்போது இது …
Read More »