உயர்தரப்பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு இராணுவத்தின் உதவியுடன் நாளைய தினம் பேருந்து சேவைகளை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணியாளர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக, பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மாலை கொழும்பிலும் ஒருவித அசாதாரண நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், நாளைய தினம் மாணவர்களின் நலனை கருத்திற்கொண்டு இராணுவத்தின் உதவியுடன் …
Read More »சம்பந்தனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சரத் பொன்சேகா
அரசாங்கத்தில் இருந்து விலகப்போவதாக கூறியவர்கள் இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு அரசாங்கத்தில் இருக்கலாம் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், 70 பேர் இருக்கின்றார்கள் என்பதற்காக அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. எதிர்க்கட்சியில் இருக்கும் தமிழ் கட்சியானாலும், ஐக்கிய தேசியக் கட்சியானாலும் அவர்கள் நினைப்பதைப் போன்று அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. …
Read More »யாழ்ப்பாண கோட்டைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட ரகசியம்! 2700 வருடத்திற்கு முந்திய தமிழினம்
யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் 2700 வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமை தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருளியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதியில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் பாரியளவு பெறுமதியான வர்த்தக நிலையம் ஒன்று காணப்பட்டுள்ளதாக வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் விசாரணை அதிகாரி பேராசிரியர் எஸ்.புஷ்பரத்னம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கோட்டைக்கு அருகில் நேற்று நிகழ்த்திய உரையின் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதற்கமைய 2700 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த பகுதியில் …
Read More »வற்றாப்பளை கண்ணகி அம்மனின் மற்றுமொரு அற்புதம்: படையெடுக்கும் பக்தர்கள்
முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாட்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற கண்ணகி அம்மன் பல அற்புதங்களையும், வியப்புக்கள் பலவற்றையும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். எண்ணற்ற அதிசயங்களை நிகழ்த்தியுள்ள கண்ணகை அம்மன் தற்போதும் கூட ஒரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார். வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சொந்தமான மிகவும் பெறுமதி வாய்ந்த அம்மனுடைய வரலாற்றைக் கூறுகின்ற மிகவும் பெறுமதி வாய்ந்த இரண்டு புத்தகங்களை ஒரு திருடன் களவாடி தப்பிச் சென்றுள்ளான். அந்தவேளையில் …
Read More »யாழ். மாவட்டத்தில் அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்! தொடரும் கைது நடவடிக்கை
யாழ். சாவகச்சேரி பகுதியில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிவில் உடையில் வந்த மானிப்பாய் பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் …
Read More »ஜனாதிபதியின் தலையீடு வேண்டும் என கோரிக்கை
சைட்டம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த புலமைப்பரிசில் ரத்து செய்யப்பட்டுள்ள விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் தலையீடு வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சைட்டம் மாணவர்களின் நடவடிக்கை குழு அண்மையில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. மேலும் கூறுகையில், சைட்டம் மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியில் இணைக்கும் தீர்மானம் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்டமை தொடர்பில் தமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எனினும் தற்போது எழுந்துள்ள பிரச்சினைக்கு உடனடியான தீர்வை எதிர்ப்பார்க்கின்றோம். சைட்டம் மாணவர் ஒருவரிடம் வருடாந்த …
Read More »யாழில் தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள்! கிறீஸ் பூதமா என சந்தேகம்
யாழ். அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு நேற்று நள்ளிரவு தீ மூட்டப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், அண்மைக்காலமாக அராலிப் பிரதேசத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்கு கற்கள் எறியப்படுவதுடன், வீட்டு ஜன்னல்கள் மற்றும் கதவுகளும் தட்டப்படுகின்றன. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்குத் …
Read More »பெற்றோருக்கு எச்சரிக்கை – இரண்டு வயது சிறுமி பரிதாபமாக மரணம்
கம்பளையில் இரண்டு வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகல்ல, கூறுகல கிராமத்தை சேர்ந்த ரசிகா ரஷ்மி வீரசேன என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி இரவு உணவுக்காக காட்டுப் பன்றி உட்கொண்டமையினால் சிறுமி சுகயீனமடைந்துள்ளார். பின்னர் நேற்று காலை சிறுமி வைத்தியசாலையில் அனுமதித்த போது உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தற்போது சிறுமியின் சடலம் கம்பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 31ஆம் திகதி அந்தப் பகுதி மக்கள் …
Read More »முல்லைத்தீவில் சிறுவன் நரபலி? பெரும் அச்சத்தில் மக்கள்
முல்லைத்தீவு – தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப் பகுதயில் சிறுவன் ஒருவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் அப் பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தென்னியன்குளத்தினை அடுத்துள்ள காட்டுப்பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தில் புதையல் தோண்டியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப் பகுதியில் சிறுவன் ஒருவனின் பாதணியும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், 8 அடி ஆழமான குழியொன்று வெட்டப்பட்டு, சேவல் ஒன்று பலி கொடுக்கப்பட்டுள்ளமைக்கான அடையாளங்களும், பூஜைகள் இடம்பெற்றமைக்கான தடையங்களையும் …
Read More »இரண்டு வாரத்தில் குற்றச் செயல்களை அடக்குவோம்! வடக்கு முதல்வர்
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கினால், வடக்கில் செயற்படும் குழுக்கள் மற்றும் குற்றவாளிகளை இரண்டு வாரங்களுக்குள் அடக்க முடியும் என முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தின் நிலைமை குறித்து யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் இதனை கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் செயற்படும் குழுக்களை யார் வழிநடத்தி வருகின்றனர் என்பதை எம்மால் கூற முடியாது. எனினும், இராணுவத்தினர் தொடர்ந்தும் பிரதேசத்தில் இருக்க வேண்டும் என்பதால், இப்படியான குற்றச் …
Read More »