Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 141)

இலங்கை செய்திகள்

யாழ் போதனா வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்! நோயாளிகளின் நிலை என்ன?

யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக இன்று மதியம் அரை மணிநேர கண்டன போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டனர். தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்த வைத்தியர்கள், கைது செய்யப்பாடத விடத்து, தாம் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தனர். யாழ். கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் உள்ள வைத்தியரின் வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி …

Read More »

500 ஏக்கர் காணிகளை விடுவிக்க நிதி ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த காணிகளில் உள்ள படை முகாம்களை வேறு இடத்தில் நிறுவி, அந்தக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் 780 மில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றில், குறித்த நிதியை ஒதுக்கீடு செய்ய திறைசேரி இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வட மாகாணத்தில் அச்சுவேலி, மயிலிட்டி …

Read More »

சிவசக்தி ஆனந்தனைப் போட்டுத் தாக்கிய!! TELO

தமிழ்த் தேசி­யத்­துக்­காக வவு­னியா மாவட்ட தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கத்­தி­னர் ஒற்­று­மை­யா­கப் பய­ணிக்­கின்­றார்­கள். இடை­யிலே குழப்­பி­விட்டு வெளி­யில் சென்­ற­வர்­கள் எங்­க­ளைப் பார்த்து கேள்வி கேட்­ப­தற்கு எந்­தத் தகு­தி­யும் இல்­லா­த­வர்­கள். தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கத்­தைப் பார்த்து நீங்­கள் (நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்­தி­ஆ­னந்­தன்) நடந்து கொள்­ளுங்­கள். நீங்­க­ளும் மீண்­டும் எங்­க­ளோடு இணைந்து தேசி­யத்­தைக் காக்­க­வேண்­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைச் சேர்ந்த வடக்கு மாகா­ண­ச­பை­யின் முன்­னாள் உறுப்­பி­னர் மயூ­ரன் தெரி­வித்­தார். வவு­னியா …

Read More »

வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்த சிறிலங்கா ரூபாயின் மதிப்பு!

சிறிலங்கா ரூபாயின் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்கா ரூபாயின் மதிப்பு இவ்வாறு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று தொடர்ந்து ஆறாவது நாளாக, டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு சரிவைச் சந்தித்தது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி நேற்று 161.55 ரூபாவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆறு நாட்களில், அமெரிக்க டொலரின் மதிப்பு 23 சதங்களால் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஓகஸ்ட் 16ஆம் …

Read More »

வடக்கில் புலிகளை இனி ஒருபோதும் உயிர்ப்பிக்க விடமாட்டோம்! சரத் பொன்சேகா

பொன்சேகா

நாம் வடக்கில் விடுதலைப்புலிகளை ஒழித்துள்ளோம். தற்போது பிரிவினை வாதம் பற்றி பேச அனுமதிக்க முடியாது என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய விசேட செய்தியிலேயே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,நாங்கள் புலிகளை அழித்துள்ளோம். சமாதானம் நல்லிணக்கத்திற்கான பின்னணியை தோற்றுவித்துள்ளோம்.

Read More »

வாகன தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டுக்கள் விநியோகம்

வவுனியா புகையிரத வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுவதாக வவுனியா நகரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா புகையிரத வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறியரக வாகனத்திற்கு 30 ரூபாய் மற்றும் கனரக வாகனத்திற்கு 50 ரூபாய் மட்டுமே வழமையாக அறவிடப்பட்டது.

Read More »

யாழ். சென்ற ரயிலுடன் மோதுண்டு பறிபோன இரு உயிர்கள்

வவுனியா – பறநாட்டன்கல் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு இரு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. குறித்த விபத்து நேற்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளது. பறநாட்டன்கல் புகையிரதக் கடவைக்கு அருகாமையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலுடன் மோதுண்டு இரு நாம்பன் மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இந்த விபத்தின் காரணமாக 15 நிமிடங்கள் தாமதித்தே குறித்த ரயில் பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

யாழ்ப்பாணத்தில் பெற்றோர் பெற்ற கடனுக்காக 11 வயதான மகளுக்கு கிடைத்த தண்டனை

யாழ்ப்பாணம் குடத்தனை பகுதியில் பெற்றோர் பெற்றுக்கொண்ட கடனை செலுத்த முடியாத நிலையில், 11 வயதான மகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்த சிறுமி மாலை நேர வகுப்பிற்கு சென்ற போதே பெற்றோருக்கு கடன் கொடுத்தவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான சிறுமியின் பெற்றோர் வீடு கட்டுவதற்காக 2015ம் ஆண்டு குடத்தனை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் நான்கு லட்சம் ரூபா கடனாக …

Read More »

செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காக ஜெர்மன் தலைநகரில் கவனயீர்ப்பு போராட்டம்

செஞ்சோலை படுகொலைக்கு நீதி கோரும் முகமாக ஜெர்மன் தலைநகரத்தில் பாராளுமன்றத்துக்கு அருகாமையில் (Brandenburger Tor) க்கு முன்பாக பேர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதில் தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு நிகராக கொல்லப்பட்ட ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் மாதிரி கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்தும் வேற்றின மக்களுக்கு ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும், ஜெர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் விளக்கமளிக்கப்பட்டது. 2006 ஆகஸ்ட் 14 …

Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் 21,959 பேர் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக பொது மக்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலக தகவல் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட அலுவலகத்துடன் இன்று தொடர்பு கொண்டு வினவிய போதே இந்த தகவல் கிடைத்துள்ளது. மேலும் இவ்வாறு அதிகரித்து வரும் வறட்சியின் காரணமாக இதுவரை 21,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் …

Read More »