Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 139)

இலங்கை செய்திகள்

யாழ் வீதியில் பொலிஸாருக்கு ஏற்பட்ட பரிதாபம்

யாழ். மணியந்தோட்டம் பகுதியில் சற்று முன்னர் நடமாடும் பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரே பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த முச்சக்கரவண்டியை இடைமறித்து விசாரித்தவேளையிலேயே பொலிஸார் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இதன்போது படுகாயமடைந்த ஒரு பொலிஸ் அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மற்றொரு பொலிஸாரும் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Read More »

வவுனியாவை வாட்டியெடுக்கும் வறட்சி! மக்கள் கடும் அவதி

வவுனியாவில் நிலவும் வறட்சி காரணமாக 2014 குடும்பங்களை சேர்ந்த 7389 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலக பிரிவுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக செட்டிகுளம் பிரதேச செயலக மக்களே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் 1394 குடும்பங்களை சேர்ந்த 5160 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. த்துடன் வவுனியா தெற்கு பிரதேச செயலக …

Read More »

இரகசிய முகாம் இருந்தது கருணாவிற்கு தெரியும்! உண்மையை போட்டுடைத்த சட்டதாரணி

கருணா

கம்­பகா – படு­வத்­த­வில் இரா­ணு­வத்­தின் இர­க­சிய முகாம் இருந்­தது தமக்­குத் தெரி­யும் என்று இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வின் முன்­னாள் பணிப்­பா­ள­ரான மேஜர் ஜென­ரல் அமல் கரு­ணா­சே­கர தெரி­வித்­துள்­ளார். 2008ஆம் ஆண்டு மே மாதம் ஊட­க­வி­ய­லா­ளர் கீத் நொயார் கடத்­தப்­பட்டு சித்­தி­ர­வதை செய்­யப்­பட்ட பின்­னர் விடு­விக்­கப்­பட்ட சம்­ப­வம் குறித்து நடத்­தப்­ப­டும் விசா­ர­ணை­க­ளின் ஒரு கட்­ட­மாக, மேஜர் ஜென­ரல் அமல் கரு­ணா­சே­கர கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார். அவர் தக­வல்­களை வெளி­யிட மறுக்­கி­றார் …

Read More »

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு கேட்டு போராடும் விஜயகலா

விஜயகலா

கல்விச் சான்றிதழ்கள் இன்மையால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கிவரும் முன்னாள் போராளிகளுக்கு விசேட வர்த்தமானி ஊடாக வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது ஒன்றுகூடல், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், ”வடக்கு கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி மிகவும் முக்கியமானது. …

Read More »

நல்லூர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் பவனி

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 12ஆம் நாள் திருவிழா அடியார்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்றது. முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், வள்ளி – தெய்வானை கிளி வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்கடாட்சம் புரிந்தனர். இதன்போது பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன்களை செலுத்தி முருகப்பெருமானின் அருள் பெற்றுச் சென்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம், கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. திருவிழா நாட்களில் ஒவ்வொரு …

Read More »

தேசிய அடையாள அட்டையை தொலைத்து விட்டீர்களா?? இதனை வாசியுங்கள்

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆவது வயது பூர்த்தியடைந்து முதற்தடவையாக பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பத்திற்காக 100 ரூபாவும், தேசிய அடையாள அட்டையொன்றின் திருத்திய இணைப்பிரதி ஒன்றை வழங்குவதற்காக 250 ரூபாவும், காணாமல் போன …

Read More »

திடீரென்று தேம்பி தேம்பி அழும் ஒட்டுமொத்த பிக்பாஸ் போட்டியாளர்கள்- மஹத் ஏதாவது செய்தாரா?

பிக்பாஸ் போட்டியாளர்கள் 100 நாட்கள் தங்களது குடும்பத்தை பிரிந்த தான் வீட்டிற்குள் இருக்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வந்த சில நாட்களில் போட்டியாளர்கள் பலர் கஷ்டப்பட்டனர், நேற்று மஹத் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதும் பிக்பாஸ் வீடே சோகமானது. இப்போது வந்த புதிய புரொமோவில் ஒட்டுமொத்த போட்டியாளர்களும் தேம்பி தேம்பி அழுகின்றனர். காரணம் அவரவர் வீட்டில் இருந்து வந்த கடிதம். இதுநாள் வரை யாஷிகா அழுவாரா என்று கேட்ட ரசிகர்கள் இப்போது அவர் …

Read More »

மண்ணையும், மொழியையும் காத்து நில அபகரிப்பினை தடுத்திடுவோம்! சிவனேசன்

மண்ணையும், மொழியையும் காத்து நில அபகரிப்பினை தடுத்திடுவோம் என வட மாகாண விவசாய அமைச்சர் சிவனேசன் தெரிவித்துள்ளார். மகாவலி திட்டம் மூலம் நில அபகரிப்பு மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், சிங்கள மக்களை குடியேற்றுவதற்கு சாத்தியம் இல்லாத பிரதேசங்களில், தமிழ் பேசும் காணி உரிமையாளர்களிடம் அவர்களின் சொந்த நிலங்களை, இராணுவத்திடமிருந்து பெற்று கையளிப்பதாக …

Read More »

34 வருடங்களின் பின் மீண்டும் தன் இடத்தில் அமர்ந்த பிள்ளையாரைப் பார்க்க படையெடுக்கும் பக்தர்கள்

பொத்துவில் பகுதியில் 34 வருடங்களின் பின் மீளவும் தன் இடத்தில் அமர்ந்த பிள்ளையாரைப் பார்க்க பெருந்திரளான பக்தர்கள் வருகைதருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 1984ஆம் ஆண்டு 60ஆம் கட்டை பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில், அங்கிருந்த பிள்ளையார் சிலையொன்றும் எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அப்பகுதியிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் தமது பூர்வீக நிலங்களில் குடியமர்வதற்கான தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் பொத்துவில் தமிழ் …

Read More »

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் காலமானார்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் (64) யாழ்ப்பாணத்தில் காலமானார். இன்றைய தினம் நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது ஜனாசா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவர் தற்போது மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளதுடன் மாகாண சபை …

Read More »