எம்மை கட்சியில் இருந்து விரட்டி கட்சிக்கு நாம் தேவையில்லை என்று கூறினர். அதனாலே தாமரை மொட்டு உருவாகியது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று முற்பகல் மொனராகலை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களை சந்தித்தார். இதன் போது கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார். இங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 67 …
Read More »வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம்
மதுபோதையில்- இரும்பு கம்பிகளுடன் வீடொன்றுக்குள் புகுந்த மூன்று பேரைக் கொண்ட இளைஞர் குழு ,வீட்டின் வாயிலை உடைத்து சேதப்படுத்தியதுடன், வீட்டின் மீது கற்களை எறிந்தும் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவம் வவுனியா சாந்தசோலைப் பகுதியில் நேற்று நடந்துள்ளது. தாக்குதலில் குடும்பத்தலைவர் மற்றும் கர்ப்பவதியாக அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் உட்பட ஐந்து பேர் செய்வதறியாது தவித்ததுடன், வீட்டின் கதவை மூடிவிட்டு உள்ளேயே இருந்துள்ளனர். பின்னர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். பொலிஸார் …
Read More »நல்லூரில் கோலகலமாக மஹா கும்பாபிஷேக திருவிழா
ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஷண்முகர் ஸ்வர்ண விமான தங்கவிமான மஹா கும்பாபிஷேக திருவிழா இன்றைய தினம் நல்லூரில் கோலகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் சிதம்பரம் நடராஜர் கோயில், பழனி தண்டாயுதபாணிஸ்வாமி கோயில், திருப்பதி , ஸ்ரீ ரங்கநாதர் கோயில், காஞ்சி காமாக்ஷியம்மன் கோயில் போன்ற ஆலயங்களில் தங்க விமானங்கள் உள்ளன. இன்றைய தினத்துடன் இலங்கையில் பொற்கூரை வேய்ந்த முதல் ஆலயம் நல்லூர் என்பது குறிப்பிடத்தக்கது. நல்லூர் ஆலய மகோற்சவம் சிறப்பாக …
Read More »அரசியல் முகத்தை வெளிப்படுத்தும் கோத்தபாய
உத்தரவுகளை மட்டுமே பிறப்பிக்கத் தெரிந்த கோத்தபாய, அழைப்புகளையும் விடுக்கத் தொடங்கினார்… இலங்கையின் அனைத்து தேசப்பற்றுள்ள சக்திகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள “மக்கள் சக்தி கொழும்புக்கு” என்ற அரச எதிர்ப்பு பேரணிக்காக செப்டம்பர் மாதம் 05ம் திகதி ஒன்று கூடுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார். ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் புத்திஜீவிகளிடமும் அவர் இந்த வேண்டுகொளை விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ ஆட்சிக் …
Read More »என்ன நடக்கும் எனும் அச்சத்தில் மைத்திரி
சக்திவாய்ந்த சில பெரு நிறுவனக் குழுக்கள் (corporate groups) அரசாங்கங்களை கவிழ்க்கும் சூழ்ச்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாக சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் நேற்று ஆரம்பமான பிம்ஸ்ரெக் நாடுகளின் தலைவர்களின் நான்காவது உச்சிமாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். சில சக்திவாய்ந்த பெரு நிறுவனக் குழுக்கள் அரசாங்கங்களை கவிழ்ப்பதில் சிலவேளைகளில் வெற்றிபெற்றிருக்கின்றன. எனவே, இந்தப் பெரு நிறுவனக் குழுக்கள் விடயத்தில், நாடுகளின் தலைவர்கள் விழிப்பாக இருக்க …
Read More »இலங்கைக்கு அருகில் பாரிய நிலநடுக்கம்!
காலியில் இருந்து 3,700 கி.மீ தொலைவில் கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு தெற்கே இந்து சமூத்திரத்தில் 5.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. எனினும் இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்பும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Read More »கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு நீதி கோரி நடத்தப்பட்ட போராட்டங்கள்
முல்லைத்தீவு – திருமுறிகண்டியை பகுதியில் இளம் குடும்பப் பெண் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் கொலையாளிகளை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக் கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் முல்லைத்தீவு – முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் கறுப்பையா நித்தியகலா என்ற 32 வயதுடைய இளம் குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டிருந்தார். கிளிநொச்சி – அறிவியல் நகர பகுதியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராக …
Read More »பத்து ஆண்டுகளின் பின்னர் முகமாலையில் தோன்றிய மாதா!
கிளிநொச்சியில் பத்து வருடங்களின் பின்னர் புதைந்து போயிருந்த மாதா சிலை ஒன்று காட்டில் இருந்து கிடைத்துள்ளது. முகமாலையிலுள்ள மாதா தேவாலயத்தில் இருந்த உருவச் சிலையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போர் அனர்த்தம் காரணமாக முகமாலையில் உள்ள தேவாலயம் அழித்து போய்விட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பகுதி மக்கள் இன்னமும் தங்கள் இடங்களுக்கு சென்று குடியேறாத நிலையில் அவர்கள் இடைக்கிடையே, சென்று தமது காணிகளை பார்த்து வருகின்றனர். இந்த வாரம் தங்கள் …
Read More »முல்லைத்தீவில் சிங்கள குடியேற்றத்திற்கு இவர் தான் காரணம்!
நல்லாட்சி அரசு ஆட்சிப் பீடம் ஏறிய பின்னர் முல்லைத்தீவில் எந்தச் சிங்களக் குடியேற்றத்தையும் மேற்கொள்ளவில்லை. அங்கு நடைபெற்ற சிங்களக் குடியேற்றங்கள் எல்லாம் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டவையே. முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் முன்னெடுக்க ப்பட்டமைக்குரிய சாட்சியங்கள் இருந்தால் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசுடன் பேச்சு நடத்தவேண்டும். அதை விடுத்து இனவாதம் கக்கிக் கொண்டிருக்கக் கூடாது. இவ்வாறு அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அரச …
Read More »வெள்ளை கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் பேரணி
வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்களும், வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களும் எங்கே என வினவி, மன்னாரில் பாரிய கவனயீர்ப்பு பேரணியொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டே இப்பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச விசாரனையை வலியுறுத்தி மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு பேரணி ஆரம்பமானது. குறித்த பேரணி மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதியூடாக …
Read More »