Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 137)

இலங்கை செய்திகள்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூரில் அலையெனத் திரண்டுள்ள பக்கதர்கள்!!

வரலாற்றுப் பெருமையும், ஆன்மீகச் சிறப்பும் மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்று வருகின்றது. அலங்கார கந்தன் இன்று சித்திரத் தேரில் அழகுத்திருக்கோலமாக பவனி வருகின்ற காட்சியைக் காண்பதற்காக உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பெருந்திரளான பக்தர்கள் வருகைத் தந்துள்ளனர். அதிகாலை பூசைகள், அபிஷேகங்கள், வசந்த மண்டப பூஜைகள் முதலியன காலக் கிரமம் தவறாது நிறைவேற்றப்பட்ட பின்னர், முருகப் பெருமான் சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய …

Read More »

தமிழ் பெண்னை மணந்த மைத்திரி…..விக்னேஸ்வரன் இனவாதி அல்ல!

வடமாகாண முதலமைச்சர் திரு.விக்கினேஸ்வரன் ஒரு இனவாதி அல்ல என்று வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வட்டு இந்துக்கல்லூரியில் இன்று காலை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்புவிழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போது இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரன் இனவாதி அல்ல அதனால்தான் அவரது புதல்வர்களை கொழும்பு பக்கத்தில் புத்தமதம் சார்ந்த சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு திருமணம் முடித்து வைத்துள்ளார். மகிந்த …

Read More »

கிளிநொச்சியில் கடுமையான வறட்சி: கவலை தெரிவிக்கும் மக்கள்!

கிளிநொச்சி மாவட்டம் வறட்சியால் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கிளிநொச்சி மாவட்டம் கடுமையான மழை வீழ்ச்சி மற்றும் கடுமையான வறட்சியால் பாதிக்கப்படும் நிலை தொடர்கின்றது. இந்த ஆண்டும் மாவட்டத்தின் பல பகுதிகளை வறட்சி வாட்டி எடுக்கத் தொடங்கியுள்ளது. மேய்ச்சலற்ற நிலையில் கால்நடைகள் பெரும் அவதிற்கு உள்ளாகியுள்ளன. தரையில் எங்குமே புற்களை காண முடியவில்லை. பனை ஓலைகளையும், காய்ந்த தென்னை ஓலைகளையும் தின்று தமது நாட்களை …

Read More »

யாழில் மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்த வாள்வெட்டுக் குழு! மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் – கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் மூவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிள்கள மற்றும் பாரியளவான பொருட்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். வாள்களுடன் சென்ற ஆவா குழுவினரே இந்த நாசகார செயலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இரண்டு வீடுகள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் 70 வயதான முதியவர், …

Read More »

தமிழின அழிப்புக்கு எதிராக நீதிகோரி ஐநாவை நோக்கி ஈருளிபயணம் ஆரம்பம்

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரித்தானியாவில் இருந்து ஐநா நோக்கி ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் இன்று ஐந்தாவது நாளாக பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ள மாவீரர் கல்லறை முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கல்லறைக்கான அகவணக்கத்துடன் மனிதநேய பயணம் ஐநா நோக்கி தொடர்ந்தது. வணக்க நிகழ்வில் உரையாற்றிய மனிதநேயபணியாளர் திரு குமார் அவர்கள் , பெல்ஜியத்தில் அமைந்துள்ள மாவீரர்களுக்கான இக் கல்லறையை இன்றுதான் முதல் தடவையாக தான் காண்பதற்கு …

Read More »

கொழும்பிக்குள் நுளையும் மகிந்த!! கலக்கத்தில் முப்படையினர்…

கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பொது எதிரணியின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக விசேட நீதிமன்றத்திற்கும், நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவிற்கும் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். “விசேட நீதிமன்றத்திற்குள்ளும், விசேட பொலிஸ் பிரிவின் அலுவலகத்திற்குள்ளும் புகுந்து அங்குள்ள ஆவணங்களை அழிப்பதற்கு காடையர் கும்பலொன்று திட்டமிட்டுள்ளது. மிக முக்கியமான இடங்களிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நிதிக்குற்றங்கள் தொடர்பான விசேட பொலிஸ் பிரிவின் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் …

Read More »

ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

மைத்திரிபால சிறிசேன

அரச சொத்துக்களை மோசடி செய்கின்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.அரச சொத்துக்கள் மோசடியில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனால் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும், தண்டனைகள் தாமதமடைகின்றன.அதனை திருத்தி குறித்த சட்டத்தில் மரண தண்டனையையும் உள்ளடக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Read More »

தமிழ் தாயிக்கும் மகனுக்கும் திடீரென நேர்ந்த அசம்பாவிதம்!

மட்டக்களப்பு புன்னச்சோலை கிராமத்தை சேர்ந்த தாயும், மகனும் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு புன்னச்சோலை பகுதியை சேர்ந்த தர்ஷன் ஜோதிமலர் என்ற தாய் மற்றும் அவருடைய நான்கு வயது மகன் ஆகியோரே காணாமல் போயுள்ளனர். வீட்டில் இருந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர்கள் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். காணாமல் போயுள்ள குறித்த பெண்ணின் …

Read More »

வவுனியாவில் இராணுவத்தினரை விரட்ட முதலமைச்சரின் புதிய ஆலோசனை!

வவுனியா பம்பைமடு பகுதியில் உள்ள இராணுவத்தினரை அகற்ற முகாமுக்கு அண்மையில் குப்பைகளை கொட்டினால் எழுப்பமுடியும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யோசனை முன்வைத்துள்ளார். வவுனியா மாவடட அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட செயலக கேட்ப்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் வவுனியா பம்பைமடு பகுதியில் குப்பை கொட்டபடுவது தொடர்பில் பேசப்பட்டது. தற்போது குப்பைகொட்டும் பகுதிக்கு அண்மையில் இராணுவமுகாம் ஒன்று இருக்கிறது அதனை அகற்றித் தந்தால் அவ் விடத்தில் …

Read More »

விக்கிக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுப்பேன்!

“வடக்கு மாகாண முதலமைச்சர் தனது பக்க நியாயங்களைப் பட்டியல்படுத்தியுள்ளார். மறுபக்க நியாயங்களை நாம் முன்வைக்கவேண்டும். அதனை அவசரப்பட்டுச் செய்ய முடியாது. விக்னேஸ்வரன் முன்வைத்த கருத்துக்களை அலசி ஆற அமர இருந்து ஆராய்ந்து உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் பணிமனைத் திறப்பு விழாவில் உரையாற்றும்போது, தமிழ்த் தேசியக் …

Read More »