யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் கைக்குண்டொன்று இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பரமேஷ்வரர் ஆலய வளாகத்திற்குள்ளிருந்தே இக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது இதனால் யாழ் பல்கலை வளாகத்தில் பதற்ற நிலை நிலவி வருகின்றது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஆலயத்தின் சுற்று மதில் அமைப்பதற்கு நிலத்தை தோண்டிய போதே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோப்பாய் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் விசேட …
Read More »நல்லூர் திருவிழாவிற்கு சென்று திரும்பிய பக்தர்களிற்கு முக்கிய செய்தி
நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவின்போது பக்தர்களால் தவறவிடப்பட்ட பொருள்கள்களை ஆதாரம் காட்டி மாநகர சபையில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என்று, யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, தவறவிடப்பட்ட தேசிய அடையாள அட்டை, திறப்புக்கள், கையடக்கத் தொலைபேசிகள், பணப்பைகள் மற்றும் பெறுமதியான பொருள்கள் என்பன யாழ்ப்பாண மாநகர சபையின் உற்சவ காலப் பணிமனையில் …
Read More »ஆட்சிக்கு வருவது உறுதி!- இந்தியாவில் மஹிந்த உறுதி
எதிர்வரும் 2019ஆம் ஆண்டுடன் தாம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி, அங்கு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இந்திய அரசாங்கத்துடன் பல காலமாக நீடித்திருந்த இறுக்கமான உறவை சுமூகமாக்குவதற்கதான நேரம் வந்துள்ளதாகவும், அதற்கான ஆரம்பமாக தனது இவ்விஜயம் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து இலங்கையின் …
Read More »கோத்தபாய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்…
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகி உள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
Read More »மைத்திரியுடன் இணையமாட்டேன்! மஹிந்த திட்டவட்டம்
தனது அனுபவத்தில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாடம் படித்துள்ளார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது “தேர்தல் நடத்தப்பட வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாக கூட, ஜனாதிபதித் தேர்தலை நடத்தமாட்டேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருக்கிறார். இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்திய ஒருவர் விளைவுகளைச் சந்தித்தது பற்றி அவர் கூறியிருக்கின்றார். அவரது அந்தக் கருத்துடன் மட்டும் நான் …
Read More »இனி இந்து ஆலயங்களில் இப்படி ஒரு தடை
இந்து ஆலயங்களில் மிருக பலி பூஜையை தடை செய்யக்கோரும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் இது குறித்த அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Read More »கொழும்பு கடற்கரையில் கடற்படையினர் குவிப்பு
கொழும்பு, வத்தளை கடற்கரை பகுதியில் எண்ணெய் படிமங்கள் பாரியளவில் மிதந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முத்துராஜவெல முனையத்திற்கு கப்பலில் இருந்து எரிபொருளை எடுத்துச் செல்லும் குழாய் ஒன்றில் கசிவு ஏற்பட்டமையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பாரியளவில் கடற்கரை அசுத்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த எண்ணெய் படிமங்ளை அகற்றும் பணியில் கடற்படை அதிகாரிகள் மற்றும் கடல் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் 300க்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். எப்படியிருப்பினும் இதனை அகற்றவதற்கு கிட்டத்தட்ட 3 நாட்கள் …
Read More »பிக்பாஸ் பிரபலம் கொழும்பில்
கொழும்பில் நடைபெறும் நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்காக நடிகை ஓவியா நேற்று மாலை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் அங்கு அவருக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. அதேவேளை கொழும்பு செட்டியார் தெருவில் நவீன வடிவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள நகைக் கடையை நடிகை ஓவியா இன்று திறந்து வைத்தார்.
Read More »பிரான்சில் கத்திக்குத்து தாக்குதல்
பிரான்சின் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் பிரிட்டனை சேர்ந்த இருவர் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளனர் நபர் ஒருவர் கத்தியை பயன்படுத்தி தாக்கியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட நபர் உடனடியாக கைதுசெய்யப்பட்டுள்ளார் அவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் என சந்தேகம் வெளியாகியுள்ளது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரைணைகளின் மூலம் இது பயங்கரவாத நோக்கத்தை அடிப்படையாக கொண்ட சம்பவம் என்பதற்கான எந்த வித ஆதாரங்களும் கிடைக்கவில்லை …
Read More »புதிய பிரதமராக மஹிந்த பதவி பிரமாணம்? ஆட்டங்காணும் தென்னிலங்கை
கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பில் இடம்பெற்ற நிலையில் நள்ளிரவுக்கு முன்னர் நிறைவுக்கு வந்துள்ளது. தற்போது கொழும்பு நகரம் தனது இயல்பு நிலையை பெற்றுள்ளது. இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டத்தின் பின்னர் பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்ற நிலையில், மஹிந்த பிரதமராக பதவி பிரமாணம் செய்து கொண்டதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவசர செய்தி என குறிப்பிட்டு …
Read More »