ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தவுள்ளார். இந்நிலையில், அன்றைய தினத்தில் நண்பகல் 12 மணிமுதல் 2 மணிவரை நியூயோர்க்கில் ஐ.நா. தலைமையகத்திற்கு முன்பாக ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. …
Read More »48 மணி நேரத்துக்குள் ‘ஆவா’வுக்கு ஆப்பு வைப்போம்
யாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை அடங்குவதற்கு சிறிலங்கா அதிபரிடன் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்தால், 48 மணி நேரத்துக்குள் ஆயுதக் குழுக்களை அடக்கிவிட முடியும் என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. யாழ்.படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெற்றியாராச்சி பலாலியில் உள்ள படைத தலைமையகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். ”தற்போது சட்டம் ஒழுங்கு என்பன காவல்துறையிடம் உள்ளன. …
Read More »தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் ராணுவத்தினரை பற்றி அதிரடி கருத்து வெளியிட்ட சுமந்திரன்
தமிழ் அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய இராணுவத்தினரையும் ஒரே நிலையில் வைத்து எடைபோட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தடுப்பில் உள்ள விடுதலைப் புலிகள் மற்றும் போர்க்குற்றம்சாட்டப்பட்ட படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் பொதுமன்னிப்பு அளித்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற யோசனை ஒன்றை அமைச்சர் சம்பிக்க ரணவக்க முன்வைத்திருந்தார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், …
Read More »யாழ்பாண நாகபூசனி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அதிசயம்! பக்தி பரவசத்தில் படையெடுக்கும் மக்கள்
யாழ்பாணத்திலுள்ள நையினாத்தீவு நாகபூசனி அம்பாள் ஆலயத்தில் நாகம் ஒன்று மலர்களை அழகாக எடுத்து அம்மன் அருகில் சென்று அந்த மலர்களை கொண்டு பூஜை செய்கிறது. இந்த அற்புத காட்சியை கண்ட மக்கள் பக்தி பரவசத்தில் அம்மன் புகழை பாடியுள்ளனர்.மேலும் இந்த செய்தி அறிந்ததும் பக்தர்கள் பலர் அந்த கோவிலுக்கு படையெடுக்கின்றனர்.
Read More »கிளிநொச்சியில் பதற்றம்! மக்கள் மீது அடாவடி..
கிளிநொச்சி, சாந்தப்புரம் பகுதியிலுள்ள மக்களின் குடியிருப்புகளுக்கான கொட்டகைகளை சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் அகற்ற முற்பட்டமையினால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தினால் அப்பகுதியில் தொடர்ச்சியாக ஒரு மணிநேரத்துக்கு மேலாக அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “சாந்தப்புரம் பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் விவசாயம் மேற்கொள்ளப்பட்டிருந்த காணி, கைவிடப்பட்டிருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகுதி மக்கள் அங்கு தமது …
Read More »கடல் கொந்தளிக்கும்…பலத்த காற்று வீசும்! எச்சரிக்கும் வானிலை மையம்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் சீற்றத்துடன் …
Read More »வடக்கு முதலமைச்சரிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
வடக்கு முதலமைச்சர் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளை மேன் முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதேவேளை முலமைச்சர் தரப்பு சட்டத்தரணிகள் இணக்கப்பாட்டுக்கு வர மறுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
Read More »யாழில் தொடரும் குழப்பம்!! விசேட அதிரடிப்படையினர் களமிறங்கும் சாத்தியம்
வடமராட்சி பருத்தித்துறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னிலங்கை மீனவர்களை தம்மிடம் ஒப்படைக்க வேண்டுமென காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் மீனவர்களை ஒப்படைக்க முடியாதென்றும் தமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் மக்கள் தெரிவித்திருந்தனர் இந் நிலையில் அங்கு வந்த காங்கேசன்துறை துறை காவல்துறை அத்தியட்சகர் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்காவிட்டால் விசேட அதிரடிப்படையின் களமிறக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்த நிலையில் திடீரென தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்களை …
Read More »மோடியைக் கண்ட பின் மகிந்தவுக்கு ஏற்பட்ட மாற்றம்
தவறான புரிதலை மீள் திருத்தும் வகை யில் டில்லிச் சந்திப்புகள் அமை ந்தன. அது மாத்திரம் அல்லாதுஇலங்கை – இந்திய உறவை மேலும் பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இந்தியப் பயணம் அமைந்தது என்று முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார். கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை பாரதிய ஜனதாக் கட்சியின் மூத்த உறுப்பினரான சுப்ரமணி சுவாமியின் அழைப்புக்கு அமைவாக மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு முன்னாள் அரச தலைவர் மகிந்த …
Read More »மைத்திரியின் மிகப் பெரும் பெய்
மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையிலேயோ அல்லது வேறு வகையிலேயோ முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற வில்லை என்று அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன நேற்று மீண்டும் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடகப் பிரதானிகளுடன் அரச தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்ததாவது, தமது பகுதியில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுகின்றனர் என்று தெரிவித்து – அதற்கு எதிராக முல்லைத்தீவில் அண்மையில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. …
Read More »