Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 132)

இலங்கை செய்திகள்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய போராளி திடீர் மரணம்!!

உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி பிரதீபனின் இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் மதியம் முல்லைத்தீவு முந்தையன்கட்டிலுள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி நேற்றைய தினம் உயிரிழந்திருந்தார். புனர்வாழ்வு பெற்ற குறித்த முன்னாள் போராளி புற்றுநோயினால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய போராளியாக விளங்கிய விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் பணியாற்றிய குறித்த போராளி இறுதி யுத்தத்தின் …

Read More »

யாழில் தொடரும் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்

யாழில் மூன்று இடங்களில் ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். யாழ். நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக்குழு , வாகனங்கள் மற்றும் கடைகளை அடித்து உடைத்து அட்டகாசம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நாச்சிமார் கோவிலடி, ஓட்டுமடம் மற்றும் தம்பி லேன் ஆகிய இடங்களில் இரவு 8.45 …

Read More »

துர்நாற்றம் வீசும் திருகோணமலை கடற்கரை

திருகோணமலை உற்துறைமுக கடற்கரைப்பகுதியில் என்றும் இல்லாதவாறு அதிகளவிலான குப்பைகள் கரையொதுங்கியுள்ளன. கடற்கரை ஓரங்களில் பிலாஸ்டிக் போத்தல்கள், குப்பைகள் என பரவலான பொருட்கள் கரையொதுங்கியிருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் கடற்கரைப்பகுதியின் சில இடங்களில் துர்நாற்றம் வீசுவதாகவும், இதன்காரணமாக அப்பகுதியூடாக பயணிக்கும் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துவருவதனால் நதிகளினூடாக இந்தக் குப்பைகள் அடித்து வரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Read More »

வெள்ளத்தில் மூழ்கும் இலங்கையின் ஒரு பகுதி

அக்குறணையில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாகவும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி நேற்றிரவு பெய்த மழையை அடுத்து பிங்கா ஓயா ஆற்று நீர் கண்டி – மாத்தளை பிரதான வீதி வழியே ஓட ஆரம்பித்ததால் சுமார் 4 அடிவரையான வெள்ளம் நிரம்பி காணப்பட்டது. இதனால் நேற்று மாலை 7 மணியிலிருந்து 8 மணி வரை அப் பகுதிக்கான போக்குவரத்து முற்றாக ஸ்தம்பித்திருந்தது. வெள்ளம் வழிந்து மகாவலி …

Read More »

மைத்திரி – மகிந்த இரகசிய சந்திப்பு ?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க வீட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது சமீபத்தைய கொலை சதி முயற்சிகள் உட்பட முக்கிய விடயங்கள் குறித்து …

Read More »

தமிழர்களின் இடமான திருகோணமலையில் இருந்து தமிழர்களை வெளியேற்ற பாரியதிட்டம்

தனி நாடு (ஈழம்) கேட்டுப் போராடிய புலிகளை அழித்து விட்டோம். இப்போது இருப்பது தமிழர் தலைநகர் என்று சொல்லப்படும் திருகோணமலை நகர் பகுதி. இந்த நகர் பகுதி எப்போதும் சிங்களத்திற்கு ஒரு உறுத்தலாகவே உள்ளது. அதை தவிடு பொடியாக்க வேண்டும் என்று சிங்களம் நீண்ட காலமாக முயன்று வருகின்றது . அதற்கு ஒரே வழி திருகோணமலை நகரை புனித பூமியாக்குவது. அதன் மூலமாக திருமலை திருக்கோணேஸ்வரம் ஆலயம் புனித பூமி …

Read More »

யாழ்ப்பாணம் அழியப்போகின்றது; வெளியான அதிர்ச்சித் தகவல்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கட்டப்படும் கட்டடங்கள் காரணமாக நிலத்தடி நீர் இல்லாமல் போகும் அபாயம் காணப்படுவதாக சிரேஷ்ட பொறியிலாளர் ம.இராமதாசன் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி யாழ். குடாநாடு முழுவதும் நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நிலத்தடி நீரை நம்பிவாழும் யாழ். குடாநாட்டு மக்களின் நன்மையை கருத்திற்கொண்டு, நன்னீர் தேக்கங்கள் மற்றும் …

Read More »

பெரும் சரிவை சந்தித்துள்ள ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தொடர் சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் வரலாற்றில் அமெரிக்க டொலர் ஒன்றிற்கான இலங்கை ரூபாவின் இன்றைய விற்பனை பெறுமதி 171.42 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

சிங்களக் குடியேற்றங்கள் நடந்ததை ஏற்ற மைத்திரி

Maithripala Sirisena

மகா­வலி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யின் ஊடாக முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் காணி­கள் வழங்­கி­யமை எனக்­குத் தெரி­யாது. உட­ன­டி­யாக அங்கு முன்­னெ­டுக்­கப்­ப­டும் அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் நிறுத்­த­வும். இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்­ளார். வடக்கு – கிழக்கு மாகாண அரச தலை­வர் சிறப்­புச் செய­ல­ணி­யின் கூட்­டம் அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்று மாலை இடம்­பெற்­றது. இந்­தக் கூட்­டத்­தி­லேயே மேற்­படி விட­யம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் தமிழ் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­கள், மகா­வலி …

Read More »

நாட்டில் பல இடங்களில் பலத்த மழை

நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினமும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் 150 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்யக்கூடும்.கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ …

Read More »