Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 131)

இலங்கை செய்திகள்

யாழில் பலர் அதிரடியாக கைது

யாழ்ப்பாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும், ஏனை குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த 7 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய 16 பேர் உள்ளிட்ட 40 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர, போக்குவரத்து தொடர்பிலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் மொத்தமாக 152 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்திற்கு பொறுப்பான …

Read More »

அடக்கி ஆளும் சிந்தனைகளே நாட்டில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளன

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

அடக்கி ஆளும் சிந்தனையே குடும்பங்களிலும் நாட்டிலும் பல பிரச்சினைகளை உருவாக்கி வந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற கலாலயா இசை நடனப் பள்ளியின் வருடாந்த நவராத்திரித் திருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “உரிமைகளும் கடமைகளும் ஒரு சல்லிக் காசின் இருபக்கங்கள். ஒன்றை மட்டும் நாம் வலியுறுத்தி மற்றதை மறந்து நடக்கும் போது குடும்பங்களில் …

Read More »

தமிழரின் பதவி உயர்வினை தடுக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை

ரணில் விக்கிரமசிங்க

தமிழர்களினதோ அல்லது தமிழ் பேசுபவர்களினதோ பதவியுயர்வுகளைத் தடுக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்குக் கிடையாது. அவ்வாறான பதவி உயர்வுகள் அதிகரிக்கப்படுவதையே விரும்புகின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நிர்வாகசேவை தரம் மூன்றுக்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த பரீட்சை இரத்துச் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ளஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார். இதற்கு …

Read More »

போலி பேஸ்புக் கணக்கு பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் 2,200 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கிடைத்துள்ள முறைப்பாடுகளில் அதிகளவானவை போலிக் கணக்குகளை முன்னெடுப்போர் குறித்தே பதிவாகியுள்ளது. கனிணி அவசர ஒழுங்குபடுத்தல் பிரிவின் சிரேஷ்ட பொறியியலாளர் ரொசான் சந்திர குப்த இதனை குறிப்பிட்டார். கடந்த வருடம் இவ்வாறான 3,600 முறைப்பாடுகள் பதிவாகியிருந்ததாகவும் அவர் கூறினார். இதன்காரணமாக, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அறியாத நபர்களை நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டாம் …

Read More »

இலங்கையர்களையும் விட்டு வைக்காத சிம்மயி!

இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா பெண் ஒருவரிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதே போல பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக டுவிட்டரில் பிரபலங்கள் பெயர்களை அவர் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பெண் ஒருவர் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தனக்கு பாலியல் …

Read More »

ஆவா குழுவை ஒடுக்க 300 காவல்துறையினரை களமிறக்கி பாரிய தேடுதல்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாள்வெட்டுகள் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும், ஆவா குழுவினரைக் கைது செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாணத்துக்குப் பொறுப்பான காவல்துறை மூத்த அதிகாரியான பிரதி காவல்துறை மா அதிபர் ரொஷான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார். ”அதிகளவு குழு மோதல்கள் நிகழும் பகுதிகளான இணுவில் மற்றும் கொக்குவில் பகுதிகளை உள்ளடக்கியதாக, கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் காவல்துறைப் பிரிவுகளில் இந்த சிறப்புத் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நேற்றைய சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போது, ஆவா …

Read More »

தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மஹிந்தவிடம் வழங்கப்பட வேண்டும்

அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இடைக்கால …

Read More »

வவுனியாவில் திடீரென தூக்கில் தொங்கிய இளைஞன்…கதறி துடிக்கும் குடும்பம்

வவுனியா, கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கோவில்குளத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 28 வயதுடைய லதுசன் என்ற இளைஞனே நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இவர் கடந்த இரண்டு மாத காலத்திற்குள் வெளிநாடு ஒன்றில் பணி புரிந்து இலங்கை திரும்பி இருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா …

Read More »

விஜயகலாவிற்கு முக்கிய தடைகளை விதித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு

விஜயகலா

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் சற்றுமுன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை கைதுசெய்யப்பட்ட அவர், புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது 5 லட்சம் ரூபா சரீரப்பிணையில் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த வழக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 7ஆம் மீள விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது, விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் …

Read More »

விரல்கள் இல்லாதபோதும் பரிட்சையில் சாதனை படைத்த பாடசாலை மாணவன்

குருணாகலில் மாணவன் ஒருவரின் அபார திறமை குறித்து ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.குருணாகலில் மாணவன் ஒருவரின் அபார திறமை குறித்து ஊடகங்களில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவன் இப்பாகமுவ, கிரிபமுன வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.பிறக்கும் போதே கை மற்றும் கால்களில் விரல்களை இழந்த நிலையில் பிறந்துள்ளார்.உடலில் எவ்வளவு குறைகள் இருந்தாலும், உணவு உட்கொள்வது ஆடை, அணிந்து கொள்வது உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் தனியாகவே சமோதிய செய்து வந்துள்ளார். ஒருபோதும் தனது …

Read More »