Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 126)

இலங்கை செய்திகள்

ஐ.தே.க.யிலிருந்து 20 பேர் கட்சி தாவுவது உறுதி

மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்கி அமைக்கப்பட்டுள்ள அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 20 பேர் விரைவில் இணைந்து கொள்ளவுள்ளதாக வனப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆனந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். கொழும்பு மன்றக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். தாம் தற்பொழுது அந்த 20 பேருடனும் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தான் மிகவும் பொறுப்புடன் இந்தக் கருத்தைக் கூறுகின்றேன். தற்பொழுதும் தனது வாகனத்தில் …

Read More »

இரா.சம்பந்தனே எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தனை மாற்றுவதற்கு எவ்விதத் தீர்மானங்களும் கிடையாது என ஐ. ம .சு.மு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது, 54 சுதந்திரக் கட்சி எம்.பிக்கள் எதிரணியில் இருக்கையில், 16 பேர் கொண்ட தமிழ் கூட்டமைப்பிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்பொழுதும் அதே வாதத்தின் பிரகாரம் எதிரணியில் ஐ.தே.க …

Read More »

எரிபொருள் விலை தொடர்பில் மஹிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

எரிபொருள் விலை சூத்திரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நிதி மற்றும் பொருளாதாரத்துறை அமைச்சராக இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர், அதனை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் போது அதற்கான இலாபத்தை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் எரிபொருள் விலை சூத்திரம் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இந்த …

Read More »

ரணிலுக்கு ஆதரவாகக் களமிறங்கினார் சந்திரிகா!!

கொழும்பு அரசியல் நாளுக்கு நாள் பரபரப்படைந்துவரும் நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையாரும் களமிறங்கியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவை பொதுவேட்பாளராகக் களமிறக்கி ஜனாதிபதியாக்கிய சமரில் முக்கிய வகிபாகத்தை வகித்த சந்திரிகா, தற்போது மீண்டும் களமிறங்கியிருப்பது முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தில் 113 எம்.பிக்களின் ஆதரவைப் பெறுவோர் பிரதமர் என்ற நிலை இருக்கும்போது, மைத்திரி பக்கமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் சந்திரிகா இரகசியப் …

Read More »

இலங்கையின் ரூபாய் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி

அமெரிக்கா டொலருக்கான இலங்கை ரூபாயின் பெறுமதி 175 ரூபாய் 56 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாயின் பெறுமதி, நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை ரூபாயின் வீழ்ச்சியை தடுப்பதற்கு பிராந்திய நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இவ்விடயம் தொடர்பில் எந்ததொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லையென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கல்வி பிரிவின் …

Read More »

மைத்திரிக்கு கடிதம் எழுதிய சபாநாயகர்! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அரசியல் கட்சிகள் சில மற்றும் சர்வதேச நாடுகள் சபாநாயகரிடம் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாக சபாநாயகர் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார். பாராளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி வரை ஒத்தி வைக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டிருந்தநிலையில் சபாநாயகர் இவ்வாறு பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு …

Read More »

நீதிமன்றத்தின் திடீர் அறிவிப்பால் ரணிலிற்கு பேரிடி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

தற்பொழுது கொழும்பில் நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Read More »

பிரதமரான மகிந்த ராஜபக்ச பிறப்பித்துள்ள முதலாவது கைது உத்தரவு!!

பெற்றோலியக் கூட்டுத்தாபன வளாகத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன், தொடர்புடையவர் எந்தப் பதவியில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ச பொலிஸ்மா அதிபருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில் பெற்றோலிய வளங்கள் அமைச்சராகப் பணியாற்றிய அர்ஜூன ரணதுங்க இன்று மாலை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். தெமட்டகொட பெற்றோலியக் …

Read More »

மைத்திரி மீது ரணில் கடுமையான சீற்றம்

maithiri ranil

நாடாளுமன்றத்தை கூட்ட ஜனாதிபதி அனுமதிக்காதமை அரசமைப்புக்கு முரணானது என்றும் இவ்வாறு தெரிவித்தமை பாரதூரமான குற்றம் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அனைத்தையும் குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறேன் என்றும் அவர் கூறினார். புதிய பிரதமர் பதவியேற்ற நிலையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம் குறித்தும் தீர்மானம் குறித்தும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே …

Read More »

மஹிந்தவை பிரதமராக்கி ஐ.நா.வை கேலிக்கூத்தாக்கினார் மைத்திரி!

நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை கேலிக்கொன்றாக மாற்றியுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “இலங்கையின் செயற்பாடுகளில் நம்பிக்கை வைத்தே ஐக்கிய நாடுகள் ஆதரவு வழங்கி வந்தது. ஆனால் நாம் அப்போதே கூறினோம் இலங்கை …

Read More »