Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 118)

இலங்கை செய்திகள்

கூட்டமைப்பினரை இலக்குவைக்கும் மகிந்த ஆதரவாளர்கள்

மகிந்த

மகிந்த ராஜபக்ச தரப்பினரை நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோற்கடிப்பதற்கு உதவிய- ஒக்டோபர் 26 ம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்திற்கான நிலைப்பாட்டில் தடுமாற்றமின்றி காணப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை இலக்குவைக்கும் நடவடிக்கைகளை மகிந்தராஜபக்சவிற்கு ஆதரவான சமூக ஊடகங்கள் முன்னெடுத்துள்ளன என கொழும்பு டெலிகிராவ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் பணியாற்றிய பின்னர் நாமல்ராஜபக்சவின் உதவியுடன் ஜனாதிபதி செயலகத்தில் பணியாற்றியவருமான செனானி சமரநாயக்க தனது டுவிட்டர் மூலம் …

Read More »

மைத்திரியின் பிடிவாதம்: தடம் புரளும் தென்னிலங்கை

மைத்திரிபால சிறிசேன

பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு அமையவும், 225 பேரைக் கொண்ட சபையில் பெரும்பான்மையானது நிரூபிக்கப்பட்டால், புதிய பிரதமரை நியமிக்கத் தயாராக இருப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும், மகிந்த ராஜபக்சவுக்கு பெரும்பான்மை இருந்தால் அவர் எந்த தடையுமின்றி பிரதமராக நீடிக்கலாம். அப்படி அவருக்கு பெரும்பான்மை பலம் இல்லை என நிரூபிக்கப்பட்டால், ஆனால், ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு வாய்ப்பு இல்லை. …

Read More »

நடக்கப் போவதை பாருங்கள்! ரணிலின் எச்சரிக்கை

ரணில் விக்கிரமசிங்க

சட்டரீதியான அரசாங்கத்தின் கீழ் சட்டரீதியாக நடத்தப்படும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ளத் தயார் என பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அதிகாரமின்றி அட்டைபோன்று ஓட்டிக்கொண்டிருப்பவர்களை நீக்க தயார் எனவும் ரணில் எச்சரித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் ராஜபக்ச – மைத்திரி தரப்பிற்கு பெரும்பான்மை இல்லை …

Read More »

அதிரடி சவால் விடுத்த சபாநாயகர்!

சபாநாயகர் கரு ஜயசூரிய, மஹிந்த அணியினருக்குச் சவால் விடுத்துள்ளார். சபாநாயகர் பதவிக்குத் தான் பொருத்தமில்லை என்றால், தனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுமாறு, சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமக்கு கூடுதல் ஆசனங்களைத் தர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விடுத்த கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர், இரண்டு பிரதான கட்சிகளுக்கும் தலா 5 ஆசனங்கள் வீதம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ஐக்கிய மக்கள் …

Read More »

இராணுவத்தினரின் கோரிக்கைகளுக்கு எதிராக எதிர்ப்பு

இராணுவத்தை சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் மக்களைத் துன்புறுத்தி, கொன்று குவித்து, உடைமைகளை இல்லாதாக்கிய இராணுவத்தினர் தற்போது குடியிருக்கக் காணிகள் கேட்பது விந்தையானது என முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், வாரம் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள மின்னஞ்சலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி வடக்கு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் என்றபோதிலும் அரசியல் ரீதியாக அவர்களை இரண்டாந்தர பிரஜைகளாக கருத வழி செய்யும் என முன்னாள் …

Read More »

மைத்திரியிடம் வேண்டுகோள் விடுத்துள்ள சு.க.பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

மீண்டும் நல்லாட்சிக்கு திரும்புவோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் தற்போது உருவாகியுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதி தலையிடவேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். ஓக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் காணப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதே தற்போதைய அரசியல் …

Read More »

மாவீரர் நினைவு தின நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு!

மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த தகவல் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாவீரர் நினைவு தின கொண்டாட்டங்கள் தொடர்பாக எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்படவில்லை. அவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என உணரும் வகையில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை என்பதையும் அரசு வலியுறுத்துகின்றது“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

மாவீரர் தின நிகழ்வை தடை செய்ய கோரிக்கை

வடக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை தடைசெய்வதற்குரிய நீதிமன்ற உத்தரவினை பெற்றுக்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர் பொலிஸ்மா அதிபரை நேரில் சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அங்குளுகல்லே சிரிஜினாநந்த தேரர், “நாட்டில் தீவிரவாத அமைப்பொன்றை நினைவுகூருவதற்கு சட்டத்தில் அனுமதியில்லை. எனவே, மாவீரர் தினம் என்பது அரசியல் அமைப்பிற்கு முரணான …

Read More »

தேர்தலை அறிவிக்கும்படி ஜனாதிபதிக்கு கோரிக்கை

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்காக உடனடியாக ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தலை விடுக்குமாறு கோரி ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்திற்கமைய ஜனவரி 9ஆம் திகதிக்கு பின்னர் எவ்வேளையிலும் தேர்தலுக்கான அறிவித்தலை விடுக்க முடியும். இதனால் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைக்கு இதுவே தீர்வாகும் என கூறி ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில …

Read More »

சபாநாயகர் மீது கடும் ஆவேசத்தில் விமல்

ஐக்கிய தேசியக் கட்சியினருக்குப் பக்கச்சார்பாக செயற்படுகின்ற சபாநாயகரை நாம் இனியொரு போதும் சபாநாயகராக அங்கீகரிக்கப் போவதில்லை. ஆகையினாலேயே இன்று அக்கிராசனத்தில் அமர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களே என்று சபாநாயகரை விளித்தேன். இவ்வாறு பக்கச்சார்பாக செயற்படும் சபாநாயகரின் ஊடாக நாட்டின் அரசியல் குழப்பநிலைக்குத் தீர்வுகாண முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றம் இன்று வெள்ளிக்கிழமை கூடிய நிலையில் அமர்வுகளைப் புறக்கணித்து மஹிந்த தரப்பினர் வெளிநடப்புச் செய்திருந்தனர். இதையடுத்து …

Read More »