Wednesday , August 27 2025
Home / செய்திகள் / இலங்கை செய்திகள் (page 115)

இலங்கை செய்திகள்

ரணில் விடயத்தில் மைத்திரி விடாப்பிடி

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “ரணிலுடன் இப்போது மற்றுமல்ல எதிர்காலத்திலும் கூட இணைந்து பணியாற்றும் விருப்பம் எனக்கு இல்லை. இதுவே எனது தீர்க்கமான முடிவாகும். மேலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் ஒருவரை பிரதமராக தெரிவு செய்ய முடியுமென அரசியலமைப்பில் எங்கும் …

Read More »

மைத்திரி மோசமாக செயற்படுவதற்கு காரணம் இதுதான்!

பொன்சேகா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவாரென அறிவிக்கப்பட்டதை தொடர்ந்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூர்க்கத்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பு – வத்தளை பகுதியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார. மேலும் அவர் தெரிவிக்கையில், “ஐனாதிபதி சிந்திக்காமல் ஒவ்வொரு நேரத்துக்கும் ஒவ்வொரு விதமாக பேசுகின்றார். மக்களுக்கு …

Read More »

மஹிந்த இன்று நாட்டு மக்களுக்கு விசேட அறிவிப்பு?

நாட்டில் அரசியல் நெருக்கடி உச்சம்தொட்டுள்ள நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று(ஞாயிற்றுக்கிழமை) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சியமைப்பதற்குரிய பெரும்பான்மை பலத்தை (113) ஐக்கிய தேசியக்கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி உறுதிப்படுத்தியுள்ளதால் பிரதமர் பதவியை துறக்கும் முடிவையே மஹிந்த அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நவம்பர் 26 ஆம் திகதி முதல் டிசம்பர் முதலாம் திகதிவரை நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தவுள்ள மஹிந்த, பொதுத்தேர்தலை …

Read More »

அரசியல் நெருக்கடி குறித்து சம்பந்தன் வெளியிட்ட அறிவிப்பு

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பது தொடர்பில் இன்னும் இரண்டொரு தினங்களில் ஜனாதிபதி முக்கிய தீர்மானம் ஒன்றை எடுப்பார் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தச் சந்திப்பின் …

Read More »

நாட்டு மக்களிற்கு எதுவும் ஏற்படாது

மைத்திரி மஹிந்த

தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக நாட்டு மக்களின் வாழ்க்கையில் எந்தவிதமான அழுத்தங்களும் ஏற்படக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நிரந்தர நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மக்கள் சேவைகள் பாதிப்படைவதற்கு இடமளிக்காதிருக்கும் பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அனைத்து அரசாங்க அதிகாரிகளிடமும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது …

Read More »

மைத்திரியின் மனநிலையை அம்பலப்படுத்திய மஹிந்த அணி

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு போதும் நியமிக்கமாட்டார் என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “வரலாற்றிலேயே முதன் முறையாக ஆளுங்கட்சி இல்லாமல் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது எமது நாட்டில் மாத்திரமே ஆகும். நாடாளுமன்றத்தில் நடுநிலைமையாக செயற்பட வேண்டிய சபாநாயகர் …

Read More »

பாராளுமன்றம் கலைக்கபடுவது குறித்து மைத்திரியின் முடிவு என்ன?

Maithripala Sirisena

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைப்பதற்கான முயற்சிகளை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் இதனை தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலிற்கு அழைப்பு விடுக்கும் உத்தரவை சிறிசேன கடந்த மாதம் விடுத்திருந்தார் எனினும் சிறிசேன அந்த உத்தரவை கைவிடுவது குறித்து சிந்தித்து வருகின்றார் என அவரிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி அந்த உத்தரவை வாபஸ்பெறுவார் இதன் மூலம் தனது நடவடிக்கைக்கு …

Read More »

சஜித்தின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் ரணில்

Ranil

பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நடத்திய பேச்சுக்களின் போதும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தற்போதைய இடைக்கால அரசாங்கத்தில் பதவி ஏற்றுக் கொண்டால் பின்னர் நடைபெறும் பொதுதேர்தலில் போட்டியிடும் போது மக்கள் மத்தியில் தனக்கான ஓர் அங்கீகாரம் இழக்கப்படும் நிலை ஏற்பட்டு விடும் …

Read More »

அரசியல் நெருக்கடிக்கு தீர்வு பெறும் முக்கிய இரு கலந்துரையாடல்கள் இன்று

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணும் விசேட கலந்துரையாடல்கள் இரண்டு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (30) இடம்பெறவுள்ளன. தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல். இந்தக் கலந்துரையாடல் மாலை 6.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. அடுத்த கலந்துரையாடல் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடன் ஜனாதிபதி முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல். இது இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற …

Read More »

மட்டக்களப்பில் பதற்றத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரிகளின் மரணம்!

மட்டக்களப்பு- வவுணதீவில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வவுணதீவு வீதித்தடையில் காவலில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிஸார் மீது இனந் தெரியாதோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் உயிரிழந்துள்ளனர். வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் . பிரசன்னா …

Read More »